கண்ணதாசன் பாடல்கள்

கண்ணதாசனின் வரிகளில் ஒரு சின்ன அலசல்…

படம் : நெஞ்சில் ஒரு ஆலயம்
இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர் : பி. சுசீலா

நெஞ்சில் ஒரு ஆலயம் திரைபடத்தில் வரும் ஒரு  ” என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?” ”சொன்னது நீதானா? சொல்! சொல்! என்னுயிரே! என்ற பாடல்கள்,  அந்த படத்தின் கதையோடு ஒட்டிய பாடல்கள்(அனைத்து பாடல்களுமே).

கணவன்(முத்துராமன்) கடும் வியாதியில் மரணத்தின் பிடியில் இருக்கும்போது, தன்  மனைவியிடம் கொண்ட காதலால் தன் இறக்குமுன் அவளை அவர்களது திருமன கோலத்தில் கண்டது போல் வர சொல்லும் நேரத்தில் வரும் பாடலுக்கான வரிகளில் அப்படியே சோகத்தை அள்ளித் தெளித்திருப்பார் கவிஞர். அந்த பெண்ணின் அத்தனை வேதனைகளையும், தன் கணவனிடம் அவள் கொண்ட அன்பையும் ஒரு பாடலில் உம்மால் மட்டும் தான் சொல்ல முடியும்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?

ஏன் இந்த கோலத்தைக் கொடுத்தயோ?

பறவை பறந்து செல்ல விடுவேனோ?

அந்தப் பரம்பொருள் வந்தாலும் தருவேனோ?

உன்னை அழைத்துச் செல்ல எண்ணும் தலைவனிடம்

என்னையே நான் தர மறுப்பேனா?

முத்துராமன் நான் இறந்துவிட்டால் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லுவார். அந்த நேரத்தில் மனைவி(தேவிகா) தன் மன நிலையைச் சொல்லும் விதமாக இந்த பாடல் வரும். மிகவும் அற்புதமான அழுகை பாடல் என்றால் கொஞ்சம் ஒவராதான் இருக்கும், ஆனாலும் அதற்கு தேவிகாவின் நடிப்பே காரணம்.இரண்டு பாடல்களிலும் என்னமோ பாடலைக் கேட்டவுடன் தேவிகா கண் முன் தோன்றுவார். சொன்னது நீ தானா என்று வரும் பாடலிலும் சரி வார்த்தைகளை கையாண்ட விதம் அவரால் மட்டுமே முடியும் அத்தனை உணர்ச்சிகளையும் காட்டிய தேவிகாவையும் பாராட்டியே ஆக வேண்டும்….

சொன்னது நீதானா? சொல்! சொல்! என்னுயிரே!

சம்மதம் தானா? ஏன்? ஏன்? ஏன் என்னுயிரே!

இன்னொரு கைகளில் யார், யார், யார்? நானா?

(எனை மறந்தாயே?) ஏன்? ஏன்? ஏன்? என்னுயிரே!

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறை தான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான்
வளரும் உறவல்லவா (சொன்னது நீ தானா)

எப்படி எழுதினாரோ இந்த பாடலின் வரிகளை என்று யோசிக்கும் நேரத்தில், இந்த பாடலை எழுதிய பின் இசையிட்டாரா? இல்லை இசையைக் கேட்டபின் இந்த வரிகளை எழுதினாரா?

என்ன உயிர் கொடுக்கும் இசை. இந்த வரிகளுக்கான் உயிர் நிஜமாகவே இந்த இசையில் தான் கிடைத்தது என்று சொல்லிவிட முடியாது. இசைக்கு ஒரு பங்கு. வார்த்தகளைக் கையாண்ட கண்ணதாசனுக்கு ஒரு பங்கு உண்டு.

ஆனால் இசையும், வரிகளும் மட்டும் போதுமா? அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடவேண்டாமா. ஆம் பாடியவரை விட்டுவிட்டால் எப்படி. நம்ம சுசீலா பாடிய பாடல் தான் இது.

தன் குரலில் அத்தனைச் சோகத்தையும், தன் கணவன் மீது வைத்து இருக்கும் அன்பையும் அந்த பாடலில் அப்படியே கொட்டி இருப்பார். ஏக்கத்தையும் துக்கத்தையும், சந்தோசத்தையும் பல நடிகைகளுக்கு அவர்களுக்கு ஏற்றார் போல பாட இவரால் மட்டுமே முடியும். இன்றும் இது சுசீலா பாடிய பாடல் என்று இருந்தாலும் கண் முன் தேவிகாவை கொண்டு வருவது அவரது குரலில் காட்டும் வித்தியாசமே….

அந்த பாடலைக் காண இங்கே சொடுக்கவும் –> என்ன நினைத்து என்னை அழைத்தாயோ, சொன்னது நீ தானா

இதை இப்படியே முடிக்க மனமில்லாத காரணத்தினால் தொடரும் கண்ணதாசனின் பாடல்கள்

Advertisements

One thought on “கண்ணதாசன் பாடல்கள்

  1. Pingback: 2010 in review « MAIDENPOST

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s