சென்னையில் 10 நாள்

செப்டம்பர் 2,

சென்னையில் 10 நாள்

ஒரு சின்ன தவிப்புடன் தான் ஊருக்குச் சென்றேன், செப்டம்பர் 2ஆம் தேதி கிளம்பி, செப்டம்பர் 12 திரும்பி வர வேண்டும். நான் திரும்பி வரவேண்டுமே என்ற தவிப்பு தான்.

என்னுடைய தங்கைகளின் மகனும், மகளும் வளர்ந்து வரும் வேளையில் நான் அங்கு இல்லாமல் இந்த தனிமையான வாழ்க்கை ஒரு போர் அடிக்கும் விஷயமாக தோன்றியது. அதுவும் அவர்களின் லூட்டியை அவர்கள் என்னிடம் கதை அளக்கும் விதம் மிகவும் அருமையாக இருக்கும்.

மூன்று வயது முடியும் நிலையில் ராஹுலும், 2 வயதுகூட ஆகாத நிலையில் அர்ச்சனாவும் இருக்கும் இந்த மழலைப் பருவத்தினை நான் அருகில் இருந்து ரசிக்காமல் இருப்பது கொஞ்சம் மன வருத்த்ம் தான். இருந்தாலும் கூகிளும், ஸ்கைப்பின் உதவியால் அவர்களின் மழலைச் சொல்லைக் கேட்கவும், அவர்களின் அமர்களத்தை கண்டு களிக்கவும் முடிந்தாலும், எனக்கு இம்முறை ஊருக்குச் செல்வது தவிப்பாகத்தான் இருந்தது.

இதற்கு முன்னர் சென்ற போது 3 நாட்களே இருந்ததால் எனக்குள் எந்த தவிப்பும் இல்லை. எல்லோரையும் பார்த்துவிட்டு வந்தால் போதும் என்ற எண்ணம் மட்டும். ஆனால் இந்த முறை எனக்கே திரும்பி வர முடியுமா என்று ஒரு பரிதவிப்பு, வந்தே ஆக வேண்டிய கட்டாயம் என இருகொள்ளி எரும்பாக தான் இருந்தேன்.

இங்கு இருந்து சாக்லேட்களை வாங்கி வரவேண்டும் என்பது என் செல்ல மகனின் உத்தரவு. சாக்லேட் மட்டும் கேட்கவில்லை, அவனுக்கும், அவன் தங்கைக்கும் என இரண்டு சைக்கிள்களோடு வா என்று இரண்டு மாதமாக சொல்லி வந்தான்.

நான் அபுதாபியிலிருந்து கிளம்பும் முன்னரே தங்கைகளும், குட்டீஸும் என்னை வரவேற்க(நல்லா தூங்கிக் கொண்டுதான் இருப்பார்கள்) வந்து விட்டார்கள்.

நான் எப்போதும் போல சாக்லேட்களை மட்டும் வாங்கிக் கொண்டு மகளுக்கும், ஒரு தோழியின் பெண்ணிற்கும் ஒரு பொம்மையுடன் சென்றேன்.

செப்டம்பர் 3 அதிகாலை 3.00 மணி

வீட்டிற்குச் சென்றவுடன் ஒரு நிமிடத்தில் ராஹுல் என்று ஒரு சிறுகுரல் தான் கொடுத்தேன் என் மகனோ ஒரு நொடியில் எழுந்த அந்த நொடி என் வாழ்வில் மறக்க முடியாத நொடிதான்.

சினிமாவில் வருமே பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும்போது ஒரு பாச உணர்வு அந்த உணர்வினை அந்த சின்ன பூவிடமிருந்து அப்படி ஒரு பாசத்தை நான் எதிர்பார்க்கவில்லை.

இரண்டு நிமிடம் அவன் என்னைக் கான வெட்கப்பட்டு, அழுது என்று அந்த தருணங்களை அசை போடுவதில் இப்போதும் என் மனது சிலிர்கிறது.

அர்ச்சனா என்று குரல் கொடுக்கும் முன்னரே எழுந்துவிட்டால். ஆனாலும் அவளுக்கு அவள் அம்மாவைத் தவிர வேற யாரிடமும் வர மாட்டாள்.

என் அம்மா தந்த ஃபில்டர் காபி குடிக்கும் முன்னரே வாங்கிச் சென்ற சாக்லேட்களை ராஹுலிடம் குடுத்தேன், மிகவும் ஆனந்தபட்டான்…

சஹானாவிற்காக வாங்கியவைகளை எடுத்து அது எனக்கு தான் என்றும் யாருக்கும் தரகூடாது என்று என்னை அதட்டியதும் அழகாக இருந்த்து. அர்ச்சனாவிடம் அவளுக்கு என்று வாங்கிய பொம்மையை தரும்வரை மிகவும் சந்தோசமாக இருந்தான் ராஹுல். அடுத்த சில நொடிகளில் நீ எனக்கு சைக்கிள் வாங்கவில்லையே என்று அழ ஆரம்பித்துவிட்டான். என்னிடமிருந்த ஏடிஎம் கார்டுகளை கொடுத்து கடைகள் இப்போது மூடி இருக்கும் கண்ணா, உனக்கு இன்று கண்டிப்பாக உனக்கு சைக்கிள் வாங்கி தருகிறேன் என்று அவனை சமதானப் படுத்துவதற்குள் படாதபாடாகி விட்டது.இப்படியே பேசி பேசி, குழந்தைகளுடன் விளையாடி, தங்கைகளோடு அரட்டை அடித்து என நேரம் போனதே தெரியவில்லை.

தீடிரென்று ராஹுல் என்னை அழைத்து நான் எடுத்துச் சென்ற சூட்கேஸைக் காண்பித்து அது உன்னோடையது இது என்னோட சூட்கேஸ், நீ போகும் போது நானும் உன்னுடன் வருகிறேன் என்று சொன்னதும் என்னையும் மீறி என் கண்களில் நீர் துளிர்த்தாலும், எனக்குள் ஒரு பயமே வந்த்து. 10 நாளில் நான் சென்று விடுவேனே இந்தப் பொடியன் ஏங்கி விடுவானோ என்று….

செப்டம்பர் 3 காலை 8.00 மணி

அன்று வெள்ளி கிழமை என்பதால் தங்கைகள் வேலைக்குச் செல்லவேண்டும். அவர்கள் தயாராக, ராஹுலையும் பள்ளிக்கு (play school)  அனுப்பியே ஆகவேண்டும் என்றும், அடுத்தவாரம்  பரிட்சை (test) இருக்கு போகட்டும்-டீ என அவனைப் பெற்றவள் அடம் பிடித்து, என்னுடன் சண்டைப் போட்டு அவனையும் தாயார் செய்து என்னையே கொண்டுவிடு என்று உத்தரவு வேறு இட்டாள். (அவள் திட்டியதை இங்கு போட்டால் என்னோட சின்ன இமேஜ் கெட்டுவிடும்).

பாவம் விடியற்காலை எழுந்ததனால் எங்கள் செல்ல மகன் களைப்பில் சோபா மீது படுத்து உறங்கியே போனான். பள்ளிக்கு அன்று மட்டம் தான்.

செப்டம்பர் 3 காலை 10.00 மணி

ராஹுல் தூங்கியதால் நான் அக்கம் பக்கம் இருக்கும் என் நட்பு வட்டாரத்திற்கு நான் வந்துவிட்டேன் என்ற அறிவிப்பினை தந்து பரஸ்பரம் குசலம் விசாரித்து, ஒரு காரினை ஏற்பாடுச் செய்யச் சொன்னேன்.

செப்டம்பர் 3 பகல் 12.00 மணி

காலையில் சாப்பிட்டுவிட்டு தங்கைகள் அலுவலகத்திற்குச் செல்ல, குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு டி. நகர் செல்ல ஆயத்தமானோம் நானும் என் தோழி ஹேமாவும்.

நேராக சரவணா ஸ்டோர்ஸ் சைக்கில்கள் இருக்கும் தளத்திற்குச் சென்றோம். சென்றவுடன் ராஹுலின் முகத்தில் சந்தோசம். ராஹுல் உனக்கு எந்த சைக்கிள் வேணுமோ அதை வாங்கிக்கலாம் என்று சொன்னவுடன், இங்கு படத்தில் இருக்கும் சைக்கிளை இரு நொடிகளில் தேர்வுச் செய்தான்.

அர்ச்சனாவிற்கோ மனமே வரவில்லை அந்த தளத்தில் இருந்து வருவதற்கு. அவளை ஹேமா கீழா இறங்க விடவே இல்லை. ஒரே அழுகை அமர்களம் என்று அடம் பிடித்தால். அவளைக் கீழே இறக்கிவிட்டிருந்தால் அங்கு இருக்கும் அனைத்து பொருளையும் அவள் எடுத்து உடைத்து இருப்பாள்.

அர்ச்சனாவிற்கோ அந்த தளத்தில் இருந்து வருவதற்கு மனமே வரவில்லை. அவளை ஹேமா கீழே இறங்க விடவே இல்லை. ஒரே அழுகை அமர்களம் என்று அடம் பிடித்தால். அவளைக் கீழே இறக்கிவிட்டிருந்தால் அங்கு இருக்கும் அனைத்து பொருளையும் அவள் எடுத்து உடைத்து இருப்பாள்.

செப்டம்பர் 3 மதியம் 3.30 மணி

ஒரு வழியாக சைக்கிள், அம்மாவுக்கும் என் மாமிக்கும் ஒரு சாதரணமான மொபைல் ஃபோன் வாங்கிய பின் வீடு வந்து சேர்ந்தோம். வீட்டிற்குள் வந்தவுடன் சைக்கிள் பார்த்து அதனை ஓட்ட ஆரம்பித்தான் ராஹுல். அதைப் பார்த்தவுடன் அர்ச்சனா அழ அவளுக்கு தரமாட்டேன் என்று அவனும் அடம்பிடிக்க அடிதடி ஒரே ரகளை. எனக்கு அதனைப் பார்க்க மிகவும் சந்தோசமாக இருந்த்து. அர்ச்சனா அடிக்க ராஹுல் அவளிடம் இது அண்ணா சைக்கிள் உனக்கு அந்த சைக்கிள் இருக்கு அவள் வீட்டில் என்று மழலையாக சொல்லியது அழகு என்றால் அர்ச்சனா இல்லை இது அச்சுக்கு என்று சொல்லிய போது குழல் இனிது; யாழ் இனிது’ என்ப-தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்,
என்ற திருக்குறல் தான் நினைவிற்கு வந்தது. குழந்தையின் மழலை கேட்பன எல்லாவற்றிலும் மிக இனிமையானது.

ஒரு நாள் விஷயத்தை மட்டுமே இவ்வளவு பெரிய பதிவாக இருக்கிறது..

ஒவ்வொரு விமானம் பறக்கும்போதும் அதில் நான் போவதாக் இன்றும் கூறும் என் ராஹுல் வளர்ந்து படிக்கவே இந்த பதிவு….

அர்ச்சனா நீயும் படிக்கலாம் குட்டிமா….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s