எந்திரன் திரை விமர்சனம்

எந்திரன் திரை விமர்சனம்

எந்திரன் – திரை உலக வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரை படங்களில் இதுவும் ஒன்று. மிகப் பெரிய கூட்டணியில் உருவாகிய படம். ஆங்கில தமிழ் படம். கோலிவுட்டில் இது ஒரு பெரிய மாற்றம் என சொல்ல்லாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக அழகி ஐஸ்வர்யா ராய், டைரக்டர் சங்கர், இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கலை உலகை அனைவரின் உள்ளங்கையில் கட்டிப்போடும் (சன் தொலைக்காட்சி- with remote) கலாநிதி மாறன் என மிகப் பெரிய ஜாம்பவான்களோடு திரைக்கு வந்துள்ளது ரோபோ எனும் எந்திரன்.

இந்தியாவில் இன்று(01-Oct-10) தான் திரைக்கு வந்துள்ளது. நாங்கள் வசிக்கும் ஊரில் நேற்றே திரையிடபட்டது. அதைவிட எங்களுக்கு முதல் நாளே பார்க்க முடிந்தது எங்கள் சினிமா ஆர்வமா இல்லை இந்த கூட்டணியினாலா????.

சன் தொலைக்காட்சியின் அனைத்துப் படைப்புகளும் மக்களிடம் எளிதில் சென்றடையச் செய்யும் திறன் வலுவான சக்தி. மக்களின் நாடித் துடிப்பினை ஏற்றிடச் செய்யும் திறன், எங்களை முதல் நாளே எந்திரனைப் பார்க்கச் செய்த்தது.

இனி எந்திரனைப் பற்றிப் பார்ப்போம்.

எந்திரன் – இது முழுக்க முழுக்க ஒரு ஷங்கர் படம். இதற்குமுன் எடுத்த எந்தப் பட்த்திலும் இல்லாதது என்று இல்லை. அவரது படங்களை ஒரு படி மேலே நிறுத்துவதற்காக அவர் கையாளும் முறை தொழில் நுட்பம், கிராஃபிக்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கும் அதனை படத்திற்கு ஏற்றவாறு செய்வது என்பது கை வந்த கலை. விளையாடி இருக்கிறார். கிராஃபிக்ஸில் கலக்கியிருக்கிறார்.

அட்டகாசமாக என்று எதுவும் இல்லாமல், அலட்டல் ஏதுமில்லாமல்  செய்து கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். ரஜினியின் தீவிர ரசிகை என்று சொல்லாதவர்களுக்கும் கூட இந்தப் படம் ஒரு ஏமாற்றமே. ரஜினியின் ஸ்டைல், பன்ச் என எதுவும் இல்லாமல் இருப்பது என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

வழக்கமான பன்ச் டைலாக், சண்டைக் காட்சிகள் ஸ்டைல் என எதுவும் இல்லாமல் இருந்தாலும் இது ஒரு சிறந்தப் படம் தான். ரஜினியின் திரை வரலாற்றில் பல மைல்கள்களை கடந்து வந்து இருந்தாலும் இந்த பெரிய டீமுடன் சேர்ந்து அறுபது வயதில் ஆர்வத்துடன் வந்திருக்கிறார் எந்திரனாக….

அறுபதில் இருபதின் ஆற்றலோடு, தனது கேரக்டருக்கு ஏற்றவாறும், உலக அழகியின் நாயகனாகவும் அட்டகாசமானத் தோற்றம். எப்படி இருக்குமோ ஜோடி என்று நினைத்த எனக்கு வித்தியாசம் அதிகம் தெரியவில்லை.

இளமையான ரஜினி என்று சொல்வதைவிட, தனது வயதிற்கு ஏற்றார்போல ஒரு ஆராய்ச்சியாளராக வருகிறார். ரோபோவாகவே நடித்தும் இருக்கிறார். ரோபோ போடும் ஆட்டம் மிகவும் நன்றாக இருந்தது. வசீ என்று ஐஸ் அழைக்கும் நேரம் அறுபதில் நிஜமாகவே மிகவும் வசீகரமாகவே இருக்கிறார்.

உலக அழகி படம் முழுவதும் வந்து கலக்கி இருக்கிறார். ஜீன்ஸ் திரைப் படத்திற்குப் பிறகு ஐஸ்-சை படம் முழுதும் பார்த்த திருப்தி. ரஜினி ரோபோவுடன் ஆராய்ச்சி செய்யும் நேரத்தில் சானா என்று சொன்னாலும் திரும்பாது இருப்பதாகவும், அதற்கு ஐஸ் கோபப்படுவதும், கொஞ்சுவதும் என்று எல்லாம் அழகாக இருக்கிறது. நன்றாக நடித்து இருக்கிறார். அவரது பங்கினைச் சிறப்பாகவே செய்து இருக்கிறார்.

அனிமேஷன், கிராஃபிக்ஸ மற்றும் லொகேஷன்ஸ் என படத்தின் அழகை பட்ஜெட்டில் சிறிதும் குறைக்காமல் சிறப்பாகச் செய்திருக்கிறது சன் பிக்ச்ர்ஸ்.

100 ரோபோக்கள் ரஜினி போலவே இருப்பதும், அவை அனைத்தும் ஒன்றாக இனைந்து பறப்பது, அடிப்பது, விழுவது என கலக்கி இருந்தாலும், கொஞ்சம் இழுவையாகப் பட்டது.

இசைப் பற்றி ஏற்கனவே பலவாறு பேசியதால் இந்த பதிவினில் தவிர்க்க நினைக்கிறேன்.

கதைக்கு வருவோம் – எந்திரனை உருவாக்கி அதனை நாட்டின் பாதுகாப்பிற்காக கொடுக்கவேண்டும் என்பது நமது நாயகனின் கனவு, லட்சியம்.

முதல் பாதி செல்லும் வேகமும், சென்ற விதமும் மிகவும் நன்றாக இருந்தது. மிகவும் ரசித்துப் பார்த்தேன் என்று தான் சொல்லவேண்டும். கதையோடு ஒடியது ரோபோ.

வில்லன் என ஒருவர் வருகிறார், வந்ததும் தெரியவில்லை, சென்றதும் தெரியவில்லை. ரஜினியின் எந்திரனையே எதிரியாக மாற்றுகிறார்கள் இரண்டாம் பாதியில். ஒரே குளறுபடியாகச் செல்கிறது ரோபோக்கள்.

ஐஸுடன் எந்திரன் காதல் கொண்டு ரஜினியிடம் மோதுவதாகவும் உள்ளது. எந்திரனகளால் ஏற்படக்கூடிய விபரிதங்களை அழகாக முன்பாதியில் சொல்லி இருந்தாலும், பின்பாதியில் ஒரு தொய்வு.

முதல் பாதி பார்த்தவரை இந்த படத்தினை நான் திரும்பவும் பார்க்கவேண்டும் என்று இருந்தேன், முழுவதும் முடிந்தபின் என்னவோ என் தலையில் சம்மட்டியால் யாரோ அடித்த்துப் போல வலியால் துடித்தேன்.

படத்திற்கு பல ப்ளஸ்கள் இருந்தாலும்

மைனஸ் பாயிண்ட்ஸ்.

முன்பாதியின் வேகத்திற்கு இரண்டாம் பாதி மொக்கை. ஆங்கிலப் படத்திற்கு இனையாக தரவேண்டும் என்று எண்ணியதாலோ?

ரஜினியின் மின்னல் படமாக இல்லாததது.

சந்தானம் மற்றும் கருணாஸ் ஆகியோர் எதற்காக வந்தார்கள்??

வைரமுத்துவின் வரிகளில் இருக்கும் அழுத்தம் பாடல்களைக் கேட்கும்போது ஏற்படாதது இசையினாலா? இல்லை பாடியவரினாலா?

பாடல்களின் குரல் ரஜினியின் உருவத்திற்கு ஏற்றவாறு இல்லை என்பது என் கருத்து.

இருப்பினும், எந்திரனில் என்னைக் கவர்ந்த பாடல் வரிகள் – இரும்பிலே ஒரு இருதயம்

மொத்தத்தில் நல்ல முயற்சி. எப்படியும் இந்த படம் இமாலய வெற்றி பெரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s