Archive | October 2010

படித்ததில் பிடித்தது

ஆசை

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ”அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?” என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ”அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?”

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

“அங்கம் பருத்துவிட்டால் அழகுக் கலைகளுக்கே

பங்கம் வருவதுபோல் பணமும் ஒரு பக்கம்

சேர்ந்து கொண்டே போனால் சீரான சமுதாயம் அழகிழந்து போகுமடி….”

—-இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.

Advertisements

ஷாக்கான முதல்

ஷாக்கான முதல் கடிதம்

கடிதங்கள் பலர் என்னிடமே நேரடியாக கொடுத்து இருக்கிறார்கள், நானும் சர்வ சாதரணமாக வாங்கி படித்துவிட்டு பதிலே சொல்லாமல் செலவது வழக்கம். காதலுக்காக நண்பர்கள் அடிதடி வரைகூட சென்று இருக்கிறார்கள். ஆஹா என்ன இது என்று யோசிக்க வேண்டாம்.

மேலும் அது என் நண்பரிடமிருந்து எனக்கு வந்த முதல் காதல் கடிதம் என்பதால் அதைப் சொல்லலாம் என்றே பதிவாக இடுகிறேன். என்னுடைய நட்பின் ஆழத்திற்காகவே இந்த பதிவு.

எங்களின் நட்பு தொடங்கியது எங்களின் உயர் தொழில் நுட்பக் கல்லூரியில். கல்லூரியில் சென்னையில் இருந்து சென்று படிக்கும் மாணவிகள் இருவரில் நான் ஒருவர். என்னுடைய வீட்டை அடுத்து அவர் வீடு என்பதால் நாங்கள் இருவரும் ஒரே பேருந்தில் வாரம் ஒரு முறைச் செல்வோம். (ஹாஸ்டல் வாசிகள்).

எங்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்த காலம். நான் எப்போதும் ரொம்ப அமைதியானவள் என்று பொய் சொல்ல மாட்டேன். ரொம்ப அரஜகம், அரட்டை, அமர்களம் என்று இருப்பவள். எப்போது வீடு அடங்கி இருக்கும் ஆள் இல்லை. ஏதோ தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினேன்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் எல்லோரும் என்னை முறைப்பது போல இருந்த்தது. புதுசா முறைச்சா அது நமக்கு உறைக்கும், எப்போதுமே முறைப்பாகவே பார்த்தவர்களாதலால் எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. என்ன என்று கேட்கவும் பயம், அங்கு இருந்தது என் சித்தி. சித்தியிடம் பயம் என்பதைவிட மரியாதை அதிகம்.

இங்க வாடி என்று அழைக்க, அப்போதும் எனக்கு என்ன விஷயம் என்று தெரியாததால் என்ன என்று திமிராக கேட்க என் முகத்தினில் ஒரு கடிதத்தை எறிந்தார்கள். அது ஒரு உள்நாட்டு தபால்களில் வருமே அந்த நீல நிற கடிதம். என்ன என்று படிக்கு முன்னரே ஆளாளுக்கு சத்தம் போட ஆரம்பித்தார்கள்.

கடிதம் யார் எழுதியது என்ற முகவரியும் இருக்கு, வந்த்து என் நண்பரிடமிருந்து. என் வீட்டிற்கு மிகவும் பரிச்சயமானவன் தான். என்னுடன் வந்து என் வீட்டில் எனக்கு தொழில்நுட்ப வரைபடங்கள் வரைய சொல்லி கொடுத்து இருந்த்தால் எல்லோருக்கும் நன்றாக தெரியும்.

கடிதம் எப்படி இருந்தது என்பதே சுவாரசியமான விஷயம்….

எனக்கு கமலஹாசன் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது என் நண்பருக்கு நன்றாக தெரியும்.  கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் என்ற பாடலை எனக்கு கடிதமாக எழுதி அனுப்பியிருந்தார்.

எனக்கு படித்தவுடன் சிரிப்பு தான் வந்தது. என் வீட்டில் உள்ளவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது, அவனுக்கு எனக்கு கமல் பிடிக்கும் என்று தெரியும் அதான் அனுப்பி இருக்கிறான். இதில் ஒன்றும் இல்லை என்று கூறினேன். அடி காலை உடைச்சிடுவேன் என்று என் சித்தி சொல்ல, நானோ பாருங்கோ அவன் எல்லா லைன்லையும் காதலன், காதல்னு வரும் இடங்களில் வெற்று இடங்களாகவே இருக்கு அதனால் இதை பெரிசு படுத்தாதீங்க என்று சொல்லி விட்டேன். என் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

அவனிடமும் என்ன இது என்று மட்டுமே கேட்டதாக நினைவு. அதன் பின்னரும் நான் மிகவும் சாதரணமாக நட்பாக மட்டுமே பழகினேன். அவனிடமிருந்தும் அதன் பின் எந்த கடிதமும் வரவில்லை.

இன்றும் என்னிடமிருந்து ஃபோன் என்றால் அந்த நண்பரின் முகத்தில் ஒரு தனி சந்தோசம் வரும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

இது என்னுடைய தோழிக்கு வந்தது என்று பொய் சொல்ல வேண்டியது இல்லை. நடந்து பல ஆண்டுகள் ஆகியும் மனதில் இன்றும் பசுமையாக இருக்கிறது என்றால், அது எந்த அளவுக்கு நம்மை பாதித்தது என்பது மட்டுமே. மிகவும் மட்த்தனமான கடிதமாக இருந்தாலும் எனக்கு வீட்டிற்கு வந்த்தால் இது இன்றும் நினைவில் இருக்கிறது. மனதினில் பதிய இனிமையான கடிதம் தேவையில்லை, ஆனால் சாதூர்யமாக என்று எதாவது இருக்க வேண்டும் என்பதால் அப்படி ஒரு கடிதம் எழுதினாயோ.

நீ இதனை படிக்க நேர்ந்தால் உன்னால் எனக்கு அந்த பாடல் அல்ல படமே பிடிக்காமல் போனது என்று தெரிந்து கொள்…

கேட்டேளே அங்கே

குத்து பாடல்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்று என்றாகிவிட்டது. குத்து பாடல் இல்லாத படம் ஓடாது என்ற நிலைக்கு தள்ளபட்டுவிட்டது. தொன்று தொட்ட காலம் முதல் இன்று வரை குத்து பாடல்கள். இலந்த பழம் என்று ஆரம்பித்து (அதற்கு முன்னேயும் இருக்க கூடும்,எனக்கு தெரியவில்லை) மல மல வரைக்கும் நீண்டு கொண்டே போகிறது இந்த பட்டியல்.

கண்ணை மூடிக்கொண்டு உடலில் உடுப்பு இருக்கிறதா என்று தெரியத நிலையில் ஆடும் ஆட்டம், அதற்கு ஒரு பாட்டு என்று. இப்போது பாதி பாடல்கள் குத்து பாடல்களாகவும், மீதி பாடல்கள் தங்களை துதிபாடும் பாடல்களாகவும் இருக்கிறது. பெண்களை கவர்ச்சியாக ஆள் பாதி ஆடை பாதி(எங்கே பாதி) என்றும், அவர்களுடன் ஆடும் ஆண்களுக்கு கோட்டு சூட்டு என்று போட்டு ஆடை குறைப்பு இல்லை எனும் அளவுக்கு அரங்கேற்றமிருக்கும்.

குத்து பாடல்கள் பல வந்திருந்தாலும், பல சூப்பர் ஹிட்டாகி மக்கள் மனதில் இடம் பிடித்தாலும், எனக்கு என்னமோ ஒரு குத்து பாட்டும் பிடிக்காது. கதைக்கு தேவை இருந்தால் மட்டுமே அதை வைக்க வேண்டும் என்று கூட சொல்லலாம்.

குத்து ஆட்டம் என்றால் என்னை பொருத்தவரை படத்தின் கதையோடு வர வேண்டும் அந்த விதத்தில் அமைந்தது மேலே குறிப்பிட்ட பாடல். இருப்பினும் நான் மிகவும் ரசித்த குத்து பாடல் அதுவும் மடிசார் புடவையில் ஒரு மாமி ஆடுவது.

பாடல் : கேட்டேளே அங்கே

படம் : பத்ரகாளி (1976)

இயக்கம் : ஏ.சி. திருலோகசந்தர்.

இசை : இளையராஜா

வரிகள் : வாலி

இந்த பாடலை பொருத்தவரை ஆரம்ப வரிகள் மட்டுமில்லை பாடல் முழுவதும் அருமையாக இருக்கும். சும்மா சொல்லக் கூடாது, ராணி சந்திரா மிகவும் அருமையாக ஆடியிருப்பார். வரிகளும் ஆபசமாக இல்லாமல் இருக்கும்.

கேட்டேளே அங்கே

அதை பார்த்தேளா இங்கே

எதையோ நினைச்சேள்

அதையே நினைச்சேன் நான்

ஆம்படையான் மனசு போல நடப்பேன்.

இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்

வாங்கோன்னா அட வாங்கோன்னா

கணவன் கடை தெருவில் நடனம் ஆடும் ஒரு பெண்ணின் ஆட்டத்தைக் காண வேண்டும் என்று சொல்ல நாயகிக் கோபம் கொண்டு இழுத்துவந்து வீட்டில்- தனது ஆத்தில் போடுவார் பாருங்கோ ஒரு ஆட்டம் அடேங்கப்பா இதுபோல பட்த்தின் திரைக்கதையோடு வந்த பாடல் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்தால் எதுவும் இந்த அள்விற்கு தோன்றவில்லை.

மடிசாறு புடவைக்கு இல்லாத அழகா

வேறாரு என்னாட்டம் நடை போட்டு வருவா

மடிசாறு புடவைக்கு இல்லாத அழகா

வேறாரு என்னாட்டம் நடை போட்டு வருவா

தெரியாதன்னா…. தெரியாதன்னா….. புரியாதன்னா…

வயசில்லயோ நேக்கும் வசியம் பன்னட்டுமா

(வாங்கோன்னா அட வாங்கோன்னா)

(கேட்டேளே அங்கே)

இப்போ பூ வைக்கிற பெண்களே ரொம்ப கம்மி அதிலும், கதம்பம் – சாமி படத்துக்கு கூட இப்போது எல்லாம் மல்லிகை தான்… தஞ்சாவூர் கதம்பம் ஸ்பெஷல் எப்படி தெரியும்.

தஞ்சாவூர் கதம்பத்தை முழம் போட்டு வாங்கி

தலைமேலே வச்சிண்டு நின்னேனே ஏங்கி

மயங்கலையோ… மயங்கலையோ…

கொதிக்கலையோ, நனையலையோ…

(வாங்கோன்னா அட வாங்கோன்னா)

(கேட்டேளே அங்கே)

கோப படாமல், மிகவும் ரசிக்கும் விதமாக அவனின் ஆசையையும், அதே நேரத்தில் அவனிடம் கொஞ்சலோடு, தன்னைப் பற்றியும் தான்
அவனுக்காகத தான் என்று சொல்லிக் கொள்ள இந்த வரிகளைவிட வேறெந்த வரிகளால் முடியும்.

பொல்லாத ஆசைக்கு ஏன் இந்த அலைச்சல்

கல்லாட்டம் இருக்கேனே எனக்கென்ன குறைச்சல்

பொல்லாத ஆசைக்கு ஏன் இந்த அலைச்சல்

கல்லாட்டம் இருக்கேனே எனக்கென்ன குறைச்சல்

மூக்கிருக்கு… மூழியிருக்கு…

அழகில்லையோ நேக்கும

ஆடிக் காட்டடுமா

(வாங்கோன்னா அட வாங்கோன்னா)

(கேட்டேளே அங்கே)

மெலடி பாடல்கள் கேட்பது மனதிற்கு நன்றாக இருந்தாலும், அவ்வப்போது குத்து பாடல்கள் கேட்பது ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பது உண்மையே இந்த பாடலை பொருத்தவரை….

கண்ணதாசன் பாடல்கள்

கண்ணதாசனின் வரிகளில் ஒரு சின்ன அலசல்…

படம் : நெஞ்சில் ஒரு ஆலயம்
இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர் : பி. சுசீலா

நெஞ்சில் ஒரு ஆலயம் திரைபடத்தில் வரும் ஒரு  ” என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?” ”சொன்னது நீதானா? சொல்! சொல்! என்னுயிரே! என்ற பாடல்கள்,  அந்த படத்தின் கதையோடு ஒட்டிய பாடல்கள்(அனைத்து பாடல்களுமே).

கணவன்(முத்துராமன்) கடும் வியாதியில் மரணத்தின் பிடியில் இருக்கும்போது, தன்  மனைவியிடம் கொண்ட காதலால் தன் இறக்குமுன் அவளை அவர்களது திருமன கோலத்தில் கண்டது போல் வர சொல்லும் நேரத்தில் வரும் பாடலுக்கான வரிகளில் அப்படியே சோகத்தை அள்ளித் தெளித்திருப்பார் கவிஞர். அந்த பெண்ணின் அத்தனை வேதனைகளையும், தன் கணவனிடம் அவள் கொண்ட அன்பையும் ஒரு பாடலில் உம்மால் மட்டும் தான் சொல்ல முடியும்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?

ஏன் இந்த கோலத்தைக் கொடுத்தயோ?

பறவை பறந்து செல்ல விடுவேனோ?

அந்தப் பரம்பொருள் வந்தாலும் தருவேனோ?

உன்னை அழைத்துச் செல்ல எண்ணும் தலைவனிடம்

என்னையே நான் தர மறுப்பேனா?

முத்துராமன் நான் இறந்துவிட்டால் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லுவார். அந்த நேரத்தில் மனைவி(தேவிகா) தன் மன நிலையைச் சொல்லும் விதமாக இந்த பாடல் வரும். மிகவும் அற்புதமான அழுகை பாடல் என்றால் கொஞ்சம் ஒவராதான் இருக்கும், ஆனாலும் அதற்கு தேவிகாவின் நடிப்பே காரணம்.இரண்டு பாடல்களிலும் என்னமோ பாடலைக் கேட்டவுடன் தேவிகா கண் முன் தோன்றுவார். சொன்னது நீ தானா என்று வரும் பாடலிலும் சரி வார்த்தைகளை கையாண்ட விதம் அவரால் மட்டுமே முடியும் அத்தனை உணர்ச்சிகளையும் காட்டிய தேவிகாவையும் பாராட்டியே ஆக வேண்டும்….

சொன்னது நீதானா? சொல்! சொல்! என்னுயிரே!

சம்மதம் தானா? ஏன்? ஏன்? ஏன் என்னுயிரே!

இன்னொரு கைகளில் யார், யார், யார்? நானா?

(எனை மறந்தாயே?) ஏன்? ஏன்? ஏன்? என்னுயிரே!

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறை தான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான்
வளரும் உறவல்லவா (சொன்னது நீ தானா)

எப்படி எழுதினாரோ இந்த பாடலின் வரிகளை என்று யோசிக்கும் நேரத்தில், இந்த பாடலை எழுதிய பின் இசையிட்டாரா? இல்லை இசையைக் கேட்டபின் இந்த வரிகளை எழுதினாரா?

என்ன உயிர் கொடுக்கும் இசை. இந்த வரிகளுக்கான் உயிர் நிஜமாகவே இந்த இசையில் தான் கிடைத்தது என்று சொல்லிவிட முடியாது. இசைக்கு ஒரு பங்கு. வார்த்தகளைக் கையாண்ட கண்ணதாசனுக்கு ஒரு பங்கு உண்டு.

ஆனால் இசையும், வரிகளும் மட்டும் போதுமா? அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடவேண்டாமா. ஆம் பாடியவரை விட்டுவிட்டால் எப்படி. நம்ம சுசீலா பாடிய பாடல் தான் இது.

தன் குரலில் அத்தனைச் சோகத்தையும், தன் கணவன் மீது வைத்து இருக்கும் அன்பையும் அந்த பாடலில் அப்படியே கொட்டி இருப்பார். ஏக்கத்தையும் துக்கத்தையும், சந்தோசத்தையும் பல நடிகைகளுக்கு அவர்களுக்கு ஏற்றார் போல பாட இவரால் மட்டுமே முடியும். இன்றும் இது சுசீலா பாடிய பாடல் என்று இருந்தாலும் கண் முன் தேவிகாவை கொண்டு வருவது அவரது குரலில் காட்டும் வித்தியாசமே….

அந்த பாடலைக் காண இங்கே சொடுக்கவும் –> என்ன நினைத்து என்னை அழைத்தாயோ, சொன்னது நீ தானா

இதை இப்படியே முடிக்க மனமில்லாத காரணத்தினால் தொடரும் கண்ணதாசனின் பாடல்கள்

பொய்மையும்-வாய்மை

பொய்மையும் வாய்மை

ரொட்டி சுடும் வியாபாரியான கந்தன் என்பவன், தினந்தோரும் வயதான பெரியவர் ஒருவரிடம் கால் கிலோ வெண்ணெய் வாங்குவது வழக்கம். ஒரு நாள் கந்தனுக்கு தீடிரென்று அந்த கால் கிலோ வெண்ணெய் சரியாக இருக்கிறதா என்று பார்க்க எண்ணி சோதித்தான். அதன் அளவு சரியாக இல்லாததால் மிகவும் ஆத்திரம் கொண்டான். அந்த பெரியவரை நீதிமன்றத்திற்கு இழுத்தான்.

இதனை விசாரிக்க இருந்த நீதிபதி  ”நீ அளவீடு செய்ய என்ன உபயோகித்தாய்,  எதாவது உபயோக படுத்தினாயா?” என்று அந்த பெரியவரிடம் நீதிபதி விசாரித்தார். அந்த பெரியவரோ, நிதானமாக மேன்மை பொருந்திய நீதிபதி அவர்களே, நான் அடிப்படை செயல்பாடுகளை பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் இல்லை. ஆனாலும் காரணத்தினால் ஒரு அளவு கோல் வைத்து இருக்கிறேன் என்றார்.

அதற்கு நீதிபதி அந்த பெரியவரிடம் வெண்ணெயை எப்படி அளந்து கொடுப்பாய் என்று கேட்டார். அதற்கு பெரியவ்ர், நான் இவருக்கு வெண்ணெயை தருவதற்கு முன்பிலிருந்தே பல காலமாக இந்த வியாபரியிடம் கால் கிலோ மாவு வாங்குவேன். அந்த மாவின் எடைக்கு வெண்ணெய் கொடுப்பது வழக்கம். இதில் யாரையாவது குறைச் சொல்ல வேண்டுமென்றால் அது அந்த வியாபாரி கந்தனை தான் சொல்ல வேண்டும்.

இதிலிருந்து நாம் அறியும் கருத்து என்னவென்றால், நாம் அடுத்தவருக்கு என்ன செய்கிறோமோ அதையே நாம் திரும்ப பெறுகிறோம். ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி என்பது போல ஒன்று செய்தாலும் அதை நன்றாகச் செய்வது சாலச் சிறந்தது.

உண்மையும், பொய்மை என்பது நம்முடைய வழக்கமாகிவிடுகிறது. சிலர் பொய்மையை பின்பற்றி அதையும் உண்மை போலவே முகத்தினை வைத்துக் கொண்டு சொல்லும் அளவுக்கு அதையே பழக்கமாக்கிக் கொள்கிறார்கள். ஒரு சிலரோ ஒரு படிமேலே சென்று உண்மை என்பது இருக்கிறதா என்று ஐயம் வரும் அளவுக்கு பொய்மையில் ஊறிப் போய்விடுகிறார்கள். ஆனால் அவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள். தங்களைதான் – வேறு யாரையும் இல்லை என்பது எப்போது புரிகிறதோ அன்று அவர்களும் உண்மை விளம்பிகளாக மாறி விடுவார்கள்.

உண்மையை மட்டுமே பேசியதால் சத்திய சோதனைகள் பல வந்தாலும் சத்தியவான் காலத்தால் மாறாத புகழினைப் பெற்றான். உண்மையே பேசி வந்த மகாத்மா காந்தியால் நமக்கு சத்திய சோதனை தரமுடிந்தது….

நாம் வாழும் காலத்தில் உண்மையை மட்டுமே பேசிட முயற்சி செய்யலாமே ! ! !

(மிகவும் கடினம் தான் காலை எழுந்தது முதல் இரவு படுக்க போகுமுன் நாம் எத்தனை முறை உண்மைக்கு புறம்பாக இருந்துள்ளோம் என்று தொடர்ந்து பத்து நாட்கள் நினைத்தால், மாறுவதற்கு வாய்புண்டு)

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் என்று வள்ளுவர் கூறினார் என்று நமக்கு நாமே ஆறுதலாக பொய்யை நமக்கு பழக்கமாக்கிக் கொள்ளாமல் இருப்போமே….

அதே வள்ளுவர் தான் மேலும் 9 குறள்களை நமக்காக கொடுத்துள்ளார்.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.

உண்மையை மட்டுமே பேசியதால் சத்திய சோதனைகள் பல வந்தாலும் சத்தியவான் காலத்தால் மாறாத புகழினைப் பெற்றான். உண்மையே பேசி வந்த மகாத்மா காந்தியால் நமக்கு சத்திய சோதனை தரமுடிந்தது….

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

சுற்றுப்புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து – உள்ளத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய(உண்மை என்ற விளக்கு மட்டுமே விளக்கு ஆகும்… ஏன் நாம் சான்றோர்களாய் வாழ முயற்சி செய்யக்கூடாது  என்பதைவிட நாம் மனிதர்களாய் வாழ முயற்சி செய்யலாமே ?

உன்னை மறந்தேனா?

அன்பான உறவே பாட்டி என்பது எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே ! ! !

பாட்டி உன்னோடு மேலும் ஒரு நாள் வேண்டும் கிடைக்குமா???

உன்னுடைய ஒரு நாள் உன்னோடு இல்லாது, உன்னை நினையாது இருந்த உன் மனதிற்கு இனிய இந்த பேத்தியை மன்னித்துவிடு. எனக்காகவே வாழ்ந்த ஒரு ஜீவன் என்னை விட்டு பிரிந்தவுடன் மறக்கவில்லை ஆனால் நீ என்னை விட்டு வின்னில் பறந்ததை மறந்தேன்.

இன்று என் இதயத்தைத் தைத்த விஷயம் என் பாட்டி – இறந்து இன்று ஒரு வருடம் ஆகிவிட்டதாமே… அய்யோ என்றிருந்தது, எப்படி சென்றது இந்த ஒரு ஆண்டு என்றே தெரியவில்லை என்பது ஒரு புறம் என்றால் நான் இந்த நாளை எப்படி மறந்தேன் என்பது??

அவள் உயிருடன் இருந்த காலத்தில் சிறிது உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும், நான் பக்கத்தில் இருக்கும்போது செத்துப்போய்விடாதே. நான் கண் காணாத தூரம் சென்றவுடன் செத்து போ என்று எத்தனையோ முறை கூறி இருக்கிறேன். ஆனாலும் நான் பக்கத்தில் இருக்கும்போதே உன் உயிர் பிரிந்தது.

எப்போதும் போல் என் சுடுச் சொல் கேட்டே சென்றது. என்னுடைய சுடு சொல்லுக்கு பின் இருக்கும் அன்பின் ஆழத்தை அறிந்தவள் நீ மட்டுமே. அதுபோலவே உன் மகள் என் சித்தியின் சொல்லில் இருக்கும் அன்பின் ஆழத்தை அறிந்தவள் நான் மட்டுமே என்பது மட்டுமே ஆறுதலான விஷயம்.

உனக்கு எப்படியோ அது ஆத்ம திருப்தியை தந்திருக்கும். ஆனால் எனக்கு நான் சாகும் வரை என்னைக் கொன்று விடுமே. ஆம் என்னை தன் கண்ணுக்குள் வைத்து வளர்த்த என் அன்பு ஜீவன் என் கண் முன்னால் உயிர் பிரியாமல் தவிக்கும் வேதனையைக் காண முடியாமல் மட்டுமே நான் உன்னை செத்துபோ பாட்டி என்று சொன்னேன். நான் சொன்ன சில மணி நேரங்களில் நீ போய்விடுவாய் என்று எனக்கு தெரியாதே.. நான் அழுதால் தாங்க முடியாதே அதனால் போய்விட்டாயோ?

ஒரு முறை உடல் நலகுறைவால் இருந்த உன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நேரிட்டது அது என் பாக்கியம் என நினைத்தேன் நீ பிழைத்துக் கொண்டதால். அந்த மருத்துவமனையில் உன்னைச் சேர்த்தவுடன், மிகவும் சிரம படுகிறாள் என்னுடைய பாட்டி. பூவினைப் போன்றவள் இப்படி கஷ்டபடக் கூடாது. உங்களிடம் அவளைக் காப்பாற்றித் தரமுடியாது என்றால், அவள் அமைதியாக, சிரமங்கள் எதுவுமின்றி இறக்க வழிச் செய்யுங்கள் என்றேக் கேட்டேன்.

நீ அன்று பிழைத்தவுடன் அந்த மருத்துவர் உன்னிடம் பாட்டிமா உங்க பேத்தி உங்க மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்காங்கனு நான் சொன்னதை உன்னிடம் சொல்லும்போது எவ்வளவு சந்தோசம் கொண்டேனோ அதைப் போல் ஒராயிரம் மடங்கு வேதனைக் கொண்டேன், உனது கடைசி நேரங்களில் நீ பட்ட இன்னல்களை நினைத்தால் இன்றும் இதயம் பதறுகிறது. வேண்டாமடா இறைவா இனி ஒருவருக்கும் இந்த மரண வேதனை.

எத்தனை அன்பு பாட்டி உனக்கு என்மீது, என் முகம் சிறிது வாடினாலோ, என் கண்ணில் இருந்து சிறிது நீர் வந்தாலும்கூட கலங்கிவிடுமே உன் மனது. எனக்காக நீ பெற்ற மகளிடம் எப்படியெல்லாம் சண்டையிடுவாய். உன் மகளை நாங்கள் பாடாதபாடு படுத்திய போதும் எங்களுக்காக அன்பும், அக்கறையும் கொண்டு உன் மகள்களுடன் சண்டையிடுவாயே எப்போது கிடைக்கும் அந்த சுகம். என் மகள்கள் போல வருமா என்று எங்களுடன் சண்டை போடும் உரிமை உனக்கு மட்டுமே தானே.

பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்றாலும் அது அடுத்தவர் வீட்டில் நடக்கும் வரைதான். நம் வீட்டில் இறப்பு என்றால் அதைத் தாங்கிக் கொள்வது என்பது எப்படி பட்ட கஷ்டம் என்பதனை எனக்கு உணர்த்தியது என் பாட்டியின் மரணம். அப்படி தான் இருந்தது சென்ற ஆண்டு. உன் சிதைக்குக் கொள்ளி வைத்த மகனுக்கு எந்த அளவுக்கு வருத்தமோ, அதைவிட சிறிது அதிகமாகவே எனக்கு இருந்தது.

உன் மகனைக் காட்டிலும் உன்னோடு உன் கஷ்டங்களை அதிகமாக கண்டவர்கள் மட்டுமில்லை அதில் பங்கு கொண்டவர்கள் என்பது நாங்கள் மட்டும் தான்.

நீ இறந்ததில் எனக்கு வருத்தமில்லை வாழ்ந்து முடித்து, பேரன் பேத்திகளை எடுத்து அவர்களின் திருமணம் வைபவம் என்று எல்லாம் பார்த்தாகிவிட்டது. ஆனால் இந்த உலகில் தனக்கென்று வாழாது, அடுத்தவரின் நலனுக்காக வாழ்ந்தவர் என்று உன்னை பெருமையாக சொல்லிட நினைத்தாலும், உனக்கு என்ன வேண்டும் என்று கூட தெரியாதவளாய், உன் மக்களுக்கு அம்மாவாகவும், எங்களுக்கு பாட்டியாகவும் மட்டுமே கடைசி வரை இருந்தும் இறந்தும் போனாயே என்று உன்னை நினைக்கையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

உன்னிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு இருக்க வேண்டும் நீ சமைக்கும் சமையலை நன்றாக சாப்பிடுவதைத் தவிர வேறு எதையுமே கற்றுக் கொள்ள முடியவில்லை. உன் சமையலைக் கற்றிருந்தால் இந்த உலகையே எங்கள் கைகளுக்குள் கட்டிப் போட்டிருக்கலாம்.

எங்களுக்காக அருமையாக சமையல் செய்வாயே, எதைச் செய்தாலும் உப்பும் உரப்பும் எங்களுக்குத் தேவைக்கு ஏற்றார் போலவே இருக்குமே.. அதுவும் நீ செய்யும் தக்காளி சாதம் இனி இந்த உலகினில் எப்போதுமே எனக்கு கிட்டாத அமிர்தம் தான். உன்னோடு போனது உன் உயிர் மட்டுமல்ல எங்கள் ரசனையும் தான்… ஆம் சாப்பிடும் ரசனைதான்… நாங்கள் சாப்பிடும் அழகை ரசிக்கவும் வேறு யாரும் இல்லையே… நல்லா சாப்பிடு சாப்பிடு என்று தட்டு நிறைய போடுவதற்கு தைரியமும் யாருக்கும் இல்லையே.

நீ அழகாக ஹிந்தி பேசும் விதமே அந்த ஹிந்தி என்ற பாஷையை எங்களுக்கு அறிமுகம் செய்ததோ? எப்படியோ எங்களுக்குப் புரிய கூடாது என்பதற்காக நீயும் உன் மகள்களும் பேசும் சில வார்த்தைகளையே அறிந்து இருந்தாலும் நீயே காரணமாக இருந்து இருக்கிறாய்.

உன்னுடைய நட்பு வட்டம் மிகவும் சிறிது ஆனால் மிகவும் இறுக்கமானது என்பதற்கு சாட்சியே நம் வீட்டில் இன்றும் இருக்கு புனித அந்தோனியாரின் படம், நம் வீட்டிலிருக்கும் சுவாமி படங்களுடன் இருந்து வருவது. யார் அதைக் கொடுத்தார்கள் என்பது தெரியாது ஆனால் உனக்கு வரிசையாக பிறந்த பிள்ளைகள் அனைத்தும் தவறிட, இன்று எங்களுக்கு மாமாவாக இருந்து வரும் உன் பிள்ளை பிழைத்து உன்னுடைய இறுதிவரை இருக்கவே அந்த படத்தை உனக்கு யாரோ கொடுத்தாகச் சொல்லி இருக்கிறாய். அப்போது கேலி பேசி இருக்கிறேன் எட்டாவது பிள்ளைக்கு கோபால் என்று பெயர் வைத்து இருந்ததற்கு பதில் அந்தோனி என்று அல்லவா நீ பெயர் வைத்து இருக்கவேண்டும் என்று. ஆனால் நீ போன பின் உன் நட்பின் ஆழத்தை உண்ர்கிறேன் பாட்டி.

உன்னிடம் இருந்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் – விருந்தோம்பல். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது பாட்டி. உன்னோடு வாழ்ந்தேன் என்று பெருமை தான் இருக்கிறது ஆனால் உன் வளர்ப்பில் இருந்து எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. கையில் காசில்லா காலாத்திலும், வீட்டில் அரிசி இல்லா நேரத்திலும், வீட்டில் இருந்த வெண்கலப் பாத்திரங்களை அடமானம் வைத்து, நீ உன் சொந்த பந்தங்களுக்காக செய்த விருந்தோம்பலை நான் கண்டதில்லை. ஆனால் கேட்டிருந்தும் எங்களுக்கு இன்று வரை இல்லை அந்த நல்ல பண்பு.

எனக்கு விருந்தோம்பலில் ஒரு வெறுப்பு உண்டாவதற்கு காரணமே நீ தானோ? உன்னிடம் செய்து கொண்டவர்கள் யாரும் உன்னை திரும்பிக்கூட பார்க்கவில்லையே என்பதனாலோ?

எப்படி பாட்டி நாற்பதுகளில் கணவனை இழந்து, பத்து வயது மகனும், திருமண வயதில் ஒரு மகளும் இருக்க என்ன செய்வோம் என்று எப்போதவது யோசித்து இருக்கிறாயா? எப்படி நீ இத்தனை ஆண்டுகள் தனியாக இருந்தாயோ?  எந்த ஒரு சிறிய வேலையும் செய்ய யாருமில்லாமல், உலக அறிவு சிறிதளவே இருந்த போதும் எப்படி சமாளித்து வந்தாயோ என்று நினைக்கும்போது எனக்கு கர்வமாக இருக்கிறது உன்னை நினைத்து. உன்னிடமிருந்து தான் தனியாக வாழ கற்றுக் கொண்டேனோ? இன்று நான் தனியாக இருப்பது என்பது ஒரு பெரிய விஷயமாக இப்போது தோன்றவே இல்லை.

உன்னிடம் இருக்கும் பொறுமையில் ஒரே ஒரு சதவிகதம் இருந்திருந்தால் நான் இன்னமும் நன்றாக இருந்திருப்பேனோ. நீ இருந்தவரை உன்னுடைய பொறுமை எனக்கு என்ன மடத்தனமாக இருக்கிறது என்று நினைத்தேன். இன்று நீ இல்லாமல் உன்னை நினைக்கையில் உன் பொறுமையால் மட்டுமே இந்த மாதிரி பேத்தியுடனும் நல்லுறவுடன் இருந்திருக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கையில் எனக்கிருக்கும் பாசம் உன் மேல் ஒரு படி உயருகிறது.

உன்னை வருடத்திற்கு ஒரு முறை உனக்காக ஸ்ரார்தம் பண்ணி உன்னை நினைத்தால் போதுமா என்று என் மண்டையில் ஒரு நெத்தியடி என்ன செய்வது பாட்டி??

தாத்தாவின் ஸ்ரார்தத்திற்கு நான் எங்கு இருந்தாலும் வருமாறு சொல்வாயே, இன்று உனக்கும் நடக்கிறது பாட்டி, என்னிடம் சொல்வதற்கு தான் ஆளில்லை. நீ இல்லாத்தால் அனைத்து உறவுகளும் அன்னியமாகக் காண்கிறோம் பாட்டி. தாத்தாவிற்கும் நடந்து இருக்குமே என்று இப்போதுதான் நினைவிற்கே வருகிறது.

அட்சதை எடுத்து வைத்து நான் வரும்போது போடுவாயே பாட்டி, இன்று உன்னுடையதும் நானின்றி முடிந்தது. எனக்கான அட்சதை யார் எடுத்து வைப்பார்களோ?

உன்னிடமிருந்து பல ஆண்டுகளாக பண்டிகைகளுக்கு நமஸ்காரம் செய்யாமல் காசு வாங்கி இருக்கிறேன். நீ இறந்தவுடன் செய்தேனே கடைசி நமஸ்காரம் எப்படி சொல்வேன் என்ன செய்வேன் பாட்டி என் மனம்படும் பாடு. இனியும் நான் யாருக்கேனும் நமஸ்கரித்தால் நீ மட்டுமே என் மனதில் வருவாய்.

உன்னை தினமும் நினைக்க முடியும் ஆனால் பேச முடியாது. உன் நினைவுகளோடு வாழ பழகி விட்டோம். இப்படி தான் தாத்தா இல்லாமல் நீயும் அவரின் நினைவுகளோடு வாழ்ந்தாயோ என்று இந்த தருணத்தில் எண்ணத் தோன்றுகிறது.

தனி மனுஷியாக இருந்து நீ எங்களுக்காக கொண்டாடிய நவராத்திரி பண்டிகையும், தீபாவளியும், பொங்கல் என அனைத்து பண்டிகைகளும் வருமே ஆனால் நீ இன்றி எப்படி என்று நினைக்கவில்லை. உன்னை நினைக்காமல் எப்படி இருக்க முடியும். உன்னால் அன்றோ அந்த பண்டிகைகள் எனக்கு பரிச்சயமாயின.

ஆம்… உன்னை மாதிரியே எனக்கும் என்ன வேண்டும் என்று எனக்கும் தெரியலை. அது எதனால் என்றால் நீ இருந்தவரை எனக்கு தேவை என்ன என்பதனை என் தாய்க்கு இனையாக அவளோடு சேர்ந்து எனக்காக நீ இருந்ததால். இதோ நீ போய்விட்டாய் இன்றும் எனக்கு என்ன வேண்டும் என்று அறியாமல், திக்குத் தெரியாமல் ஏதோ நானும் வாழ்கிறேன் உன்னைப் போலவே ஆனால் சில பல வித்தியாசங்களுடன்….

உனக்கும் எனக்குமான உறவினை இந்த பதிவினில் ஒரு பதிவாக போட நினைக்கவில்லை. உன்னை நான் மறந்தேன் என்று நீ நினைத்துவிட கூடாது என்பதறகாகவே இந்த பதிவு.

நீ இருந்து சொல்ல வேண்டிய அனைத்தையும் நீ இறந்தபின் போதனைகளாக எடுத்துக் கொண்டுள்ளேன் அதுவே இந்த பதிவிற்கான அவசியம் வந்தது…

என்னோட இந்த பதிவை நீ படிக்க உனக்கு ஒரு கடிதம் எழுதவா, இமெயில் அனுப்பத் தெரியாது ஆனால் இமெயில் பற்றி தெரியும் அதனால் இறைவா என் பாட்டியிடம் சொல் அவளுக்காக ஒரு கடிதம் வந்து இருக்கிறது என்று.

பாட்டிமா அன்போட உன் உன் பேத்தி எழுதும் பதிவு…..

உனக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தபோதும், நீயும் நானும் காலத்தின் கட்டாயத்தால் பிரிந்து வாழ்ந்த காலங்களில் நான் எழுதியது தங்கிலிஷ் கடிதங்களே.  கடவுளின் அனுகிரகத்தால் இந்த பதிவினை நான் தமிழில் எழுதிகிறேன் நீ படிக்கவே போலும்….

இந்த பதிவினை படித்த பின் எனக்காக நீ தருவாய் என்றென்றும் உன் அன்பும் ஆசிர்வாதங்களையும்….

என் ஆயுளின் இறுதிவரை வேண்டும் உந்தன் அன்பு இந்த பதிவாக

இரும்பிலே ஒரு இருதயம்

படம் : எந்திரன்

பாடியவர்கள்: .ஆர். ரஹ்மான், கிரிஸ்ஸி

பாடல் வரிகள்: கார்க்கி

ஆங்கில வரிகள்: காஷ் ன் கிரிஸ்ஸி
You want to seal my kiss boy

you can’t touch this everybody…

hypnotic hypnotic… supersonic…
Super Star can’t can’t can’t get this

இரும்பிலே ஒரு இருதயம் முலைக்குதே,

முதல் முறை காதல் அழைக்குதோ

இரும்பிலே ஒரு இருதயம் முலைக்குதே,

முதல் முறை காதல் அழைக்குதோ

பூஜியம் ஒன்றோடு, பூவாசம் இன்றோடு.

வின்மீன்கள் வின்னோடு, மின்னல்கள் கண்ணோடு

கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு, காலங்கள் காணா காதல் பெண் பூவே உன்னோடு

ஐ ரோபோ உன் காதில், ஐ லவ் யூ சொல்லட்டா?

ஐ ரோபோ உன் காதில், ஐ லவ் யூ சொல்லட்டா?

ஐம் எ சூப்பர் கேல்(girl), உன் காதல் ரேப்பர் கேல்(rapper girl)

ஐம் எ சூப்பர் கேல்(girl), உன் காதல் ரேப்பர் கேல்(rapper girl)

என்னுள்ளே எண்ணெல்லாம் நீதானே நீதானே

உன் நீல கண்ணோரம் மின்சாரம் பறிப்பேன்

என் நீல பல்லாலே உன்னோடு சிரிப்பேன்

என் என்ஜின் நெஞ்சோடு உன்னை நெஞ்சை அனைப்பேன்

நீ தூங்கும் நேரத்தில் நான் என்னை அனைப்பேன்

என்னாளும் எப்போதும் உன் கையில் பொம்மையாவேன்
Watch me Robo shake it
I know you want to break it

தொட்டு பேசும் போதும் ஷாக் அடிக்க கோடும்

காதல் செய்யும் நேரம்  மோட்டார் வேகம் கூடும்

இரவில் நடுவில் பாட்டரி தான் தீரும்

மெமரியில் குமரியை தனி சிறை பிடித்தேன்

ஷட் டவுனே செய்யாமல், இரவினில் துடித்தேன்

சென்சார் எல்லாம் தேய தேய நாளும் உன்னை படித்தேன்

உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன்.

“எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொள்வாயா?

ரத்தம் இல்லாக் காதல் என்று ஒத்திப் போகச் சொல்வாயா?………….

உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி,

உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி

சாதல் இல்லா சாபம் வாங்கி மண் மேலே வந்தேனே

தேய்மானமே இல்லா காதல் கொண்டு வந்தேனே.
Hey… Robo… mayakathey…
You wanna come and get it Boy
Oh are you just a Robo Toy
I don’t want to break you
even if it takes to kind of like a break through
You don’t even need a clue
You be my man’s back up
I think you need a checkup
I can melt your heart down may be if you got one
We doing that for ages since in time of sages

முட்டாதே ஓரம்போ நீ என் காலைச் சுத்தும் பாம்போ

காதல் செய்யும் ரோபோ நீ தேவையில்லை போ போ.
இரும்பிலே ஒரு இருதயம் முலைக்குதே,

முதல் முறை காதல் அழைக்குதோ

இரும்பிலே ஒரு இருதயம் முலைக்குதே,

முதல் முறை காதல் அழைக்குதோ

பூஜியம் ஒன்றோடு, பூவாசம் இன்றோடு.

வின்மீன்கள் வின்னோடு, மின்னல்கள் கண்ணோடு

கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு, காலங்கள் காணா காதல் பெண் பூவே உன்னோடு

ஐ ரோபோ உன் காதில், ஐ லவ் யூ சொல்லட்டா?

ஐம் எ சூப்பர் கேல்(girl), உன் காதல் ரேப்பர் கேல்(rapper girl)

ஐ ரோபோ உன் காதில், ஐ லவ் யூ சொல்லட்டா? ஐம் எ சூப்பர் கேல்(girl), உன் காதல் ரேப்பர் கேல்(rapper girl)

ஐம் எ சூப்பர் கேல்(girl), உன் காதல் ரேப்பர் கேல்(rapper girl)

ஐ ரோபோ உன் காதில், ஐ லவ் யூ சொல்லட்டா?

ஐம் எ சூப்பர் கேல்(girl), உன் காதல் ரேப்பர் கேல்(rapper girl)

 

எந்திரன் ஒரு பார்வை