Archive | September 2010

அயோத்தி தீர்ப்பு

அயோத்தி தீர்ப்பு

அயோத்தியாவின் பெருமை பாபர் மசூதியினாலா? இல்லை அங்கு ஸ்ரீராமன் பிறந்த புண்ணிய பூமியா?

எது என்று என்னால் ஆராய முடியவில்லை,

இந்துவாக பிறந்ததனால் அல்ல பள்ளியில் படித்த பாடங்களில் இன்றும் நினைவில் இருப்பது அயோத்தி என்றதும் ஸ்ரீராமன் பிறந்த பூமியாக படித்ததனால்.

பிறப்பால் இஸ்லாமியராக உள்ளவரிடம் கேட்டால் அங்கு பாபர் மசூதி பற்றி சொல்வாரோ என்னவோ தெரியாது.

இன்று இந்தியனாகப் பார்க்க நேரிடும் போது மனம் கலவரப்படுகிறது. மதம் எத்தனை மனிதர்களை காவு கொண்டுள்ளது, இன்னும் எத்தனை உயிர்களை இழக்க நேரிடுமோ??

ஸ்ரீராமனே இங்கு இருந்திருந்தாலும், இந்த வன்முறைகளை தடுத்து இருக்க முடியுமா என தெரியவில்லை.

இஸ்லாமியர்களின் புனித நூலும், வன்முறைகளை ஆதரிக்கவில்லை.

அங்கு ஸ்ரீராமனுக்கு கோயில் இருந்தாலும் சரி மசூதி இருந்தாலும், சென்னையிலோ அல்லது மற்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு அது ஒரு கோயிலாகவோ, மசூதியாகவோ அல்லது மற்றும் ஒரு சுற்றுலா தலமாகவோ மட்டுமே இருக்கும்.

ஏன் அந்த இடத்தில் ஒரு மருத்துவமனையோ அல்லது கல்வி நிறுவனமாகவோ மாற்றக்கூடாது. அதற்கும் சண்டை இடுவார்கள் நம்மவர்கள், ராமன் மருத்துவமனையா இல்லை பாபர் பள்ளிகூடமா என்று????

எப்போது திருந்துவோம் நாம், இந்தியர்களுக்குள் மத, மொழி, இனம் என்ற பேதம் கிடையாது என்று இருமாப்புடன் பேசினாலும் இந்த அயோத்தி பிரச்சனை நம்மை உலக நாடுகளுக்கிடையில் தலைகுனிவை ஏற்படுத்தும் என்பது ஏன் நம்முடைய அறிவுக்கு எட்டவில்லை?

அயோத்தியின் இந்தப் போராட்டம் தனிப்பட்ட எங்கள் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இல்லையே. நாங்கள் சகோதரர்களாக இருக்கிறோமோ இல்லையோ, அரிவாளுடன் சண்டையிடும் அரக்கர்களாக இல்லை. அன்யோன்யமாக இல்லை என்றாலும் அன்னியமாக இல்லை. நம் மண்ணிலேயே அன்னியமாக்க பட்டிருக்கிறோம் என்பதை உணராதவரை இதைப் போன்ற அயோத்திகள் ஆயிரம் முளைக்கும் என்பதில் சிறிதும் எனக்கு ஐயமில்லை.

இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

கடவுள் பெயரையும், சாதி, மதம், இனம் என்று சொல்லி வாக்குகள் அள்ள முடியும் என்று இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே… நம்மைப் போன்ற மூடர்களும், முட்டாள்களும் இருக்கும் வரையில் இந்த சண்டைகள் இருந்துக் கொண்டே தான் இருக்கும்.

Advertisements

உணர்வுகளின் ஆனந்தம்

”உனக்காக காத்திருப்பது  சுகம்,
காத்திருந்த நிமிடங்களை நினைத்து
பார்ப்பது அதிலும்  சுகம்,
உன் குரல் கேட்பது இனிமை
கேட்டது என் மனதில் உள்ள
காதல் என்பது அதிலும் இனிமை,

பார்க்காமல் காதல் கொண்டேன்
உன்னை பார்க்க துடிக்கிறேன்…

கொஞ்சம்    ஆர்வம்,
நிறைய       சந்தோசம்
சிறிது     பயம்,
அதிகமான  ஆசை
சின்னதாய் துடிப்பு

என்று இதயத்திற்குள் பல வகையான

உணர்வுகளின் துள்ளலில் அவள்….

திரும்ப கிடைக்குமா இந்த நாட்கள்,

இல்லை இந்த நிமிடங்கள்?”

அவனை நேரில் காணும் வரையில் கனவாக கண்டு களிக்கும் இந்த இனிமையான இன்பத்தை அவரைக் கண்டபின் அவளின் அந்த நொடிகளை நினைத்துப் பார்க்கவே இந்த  பதிவு.

இன்றைய பெண்

இன்றைய பெண்

சுகிசிவம் அவர்கள் இன்றைய பெண்களைப் பற்றி கூறியதைப் படித்ததில் பிடித்த்து பகுதிக்காகத் தேர்வு செய்தேன். இவர் கூறுயது பெண்களை இழிவு படுத்துவதாகவோ அல்லது குறை கூறுவதாகவோ எடுத்துக் கொள்ளவேண்டாம். இது நாம்/ நம் (பெண்கள்) விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே!!! எந்த ஒரு பெண்ணும், பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் அல்லது தாழ்வுபடுத்துகிறார்கள் என்று தவறாக கருத வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி நினைத்து இருந்தால் இந்த பதிவினை என்னுடைய கனவுகளில் ஒன்றாக பதிவாக இங்கு பதிவு செய்திருக்க மாட்டேன்.

அவர் கூறியதாவது என்ன என்றுப் பார்ப்போம். வாரப் பத்திரிக்கைகள், மாதப் பத்திரிக்கைகள், கதைகள், தொடர்கதை என படிக்கிற பெண்கள் அதிகம். ஆனால் தினப்பத்திரிக்கைகள்  படிக்கிற பெண்கள் எத்தனை பேர் என்று தான் கேட்டார், யாரும் படிப்பதே இல்லை என்று சொல்லவில்லை?

நாட்டு நடப்பு பற்றி எத்தனை பெண்கள் அக்கறை காட்டுகிறார்கள்? மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம். தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமா/தொடர்கள் பார்க்கும் போது குடும்பமே பார்க்கிறது. ஆனால் செய்திகள் தொடங்கியதும் பெண்கள் அடுப்படிக்குள் பாய்ந்து உணவை தயார் செய்வது ஏன்? செய்தி நேரம் வந்ததும் சினிமாவில் இடைவெளி மாதிரி அதை சாப்பாட்டுக்குப் பயன்படுத்த பல பெண்கள் விரும்புவது உண்மைதானே! இது சரிதானா? செய்தி நேரம் என்ன சினிமா இடைவெளியா? இப்படி இருந்தால் பெண்ணின் பொது அறிவு எப்படியிருக்கும்?

பெண்களின் அழகுணர்ச்சிக்கான விலை இன்று மிகமிக அதிகம். காலக் கொலையோ அதைவிட அதிகம். எப்படி? நகங்களை வண்ணப்படுத்தி, பழைய வண்ணங்களை நீக்கப் புது வண்ணம் பூச நெயில் பாலிஷ் ரிமூவர், உதடுகளை உயரிப்பேற்ற உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்), கன்னங்களில் கவர்ச்சி கூட்ட ரூஜ், கண்ணிமைகளை பெரிதுபடுத்தி அழகைக் கூட்ட மஸ்காரா, அழகாய்க் காட்ட ஐ லைனர், கழுத்தை, முகத்தைக் கழுவிக் காட்ட கிளன்சிங் மில்க், மாஸ்க் பிளீச், தோலின் இயற்கை மணத்தை வாசனையில் புதைக்க பாடி ஸ்ப்ரே மற்றும் சென்ட் வகைகள். கொண்டை தொடங்கி கெண்டைக்கால் வரை ‘மாட்சிங்’ பார்த்து அலங்கரிக்கத் தேவையான விதவிதமான உபகரணங்கள். பொருட்ச்செலவும், நேரச் செலவும் இவ்வளவு தேவையா? யோசியுங்கள். அறிவார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அதற்காக மம்தா பானர்ஜியாகவும், மாயாவதியாகவும் மாறச் சொல்லவில்லை. கொஞ்சம் சிக்கனம்… தேவை இக்கனம்!!!

இந்த பெண்மையின் நிலை நமது இந்தியப் பெண்ளுக்கு மட்டுமல்ல. எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் பல விஞ்ஞானிகள் பங்கேற்ற விருந்து ஒன்றினுக்கு உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போயிருந்தார். அவர் மனைவி அவருடன் போக வேண்டியவர். போக முடியவில்லை. கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லை.

விருந்து முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஐன்ஸ்டீனிடம் அவர் மனைவி கேட்டார்…. விருந்து எப்படி நடந்தது? “நன்றாக இருந்தது?” என்று சுருக்கமாக கூறிவிட்டு அங்கு தாம் சந்தித்த விஞ்ஞானிகள் பற்றியும், அவர்களுடன் விவாதித்த அறிவு பூர்வமான விஷயங்கள் பற்றியும் ஆவலுடன் ஐன்ஸ்டீன் சொல்லத் தொடங்கினார். அவர் மனைவிக்குப் பிடிக்க வில்லை.

ஐன்ஸ்டீன் மனைவி சற்றே கோபமாக,நான் இந்த அறுவையைக் கேட்க்கவில்லை. அங்கு விருந்துக்கு வந்திருந்த பெண்கள் எந்த மாதிரி கவுன் அணிந்திருந்தார்கள் கவனித்தீர்களா? என்று சீறினார். ஐன்ஸ்டீன் பொறுமையாக, இதோ பார்விருந்து மேஜைக்கு மேலே பெண்களின் முகம் மட்டும் தான் தெரிந்தது. அதனால் அவர்கள் அணிந்து வந்த ஆடை எப்படிப்பட்ட ஆடை என்று எனக்குத் தெரியாது. உனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் நான் மேஜைக்கு கீழே குனிந்து பார்த்திருக்க வேண்டும். அது அவ்வளவு கவுரமாக இருந்திருக்காது என்றார்.

பெண்கள் வாழ்விற்கு எது தேவை என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் அவர்களது வாழ்க்கை வளமானதாகவும் இனிமையானதாகவும் அமையும்!!!