ஜோதிடத்தில் – மூட நம்பிக்கை

ஜாதகங்களைச் சேர்க்கும்போது பல அபவாதங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.

  1. மூல நட்சத்திரத்தின் மாமியார் மூலையிலே; பெண்மூலம் நிர்மூலம்.
  2. கேட்டை நட்சத்திரம் ஜேஷ்டனுக்காகாது.
  3. விசாக நட்சத்திரம் இளைய மைத்தினருக்காகாது.
  4. ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்காகாது.
  5. பூராடம் கழுத்தில் நூலாடாது.

மூல நட்சத்திரம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் மாமனார் காலமாகி விடுவார். அதன் காரணமாக பெண்ணின் மாமியார் விதவையாகி விடுவாள். ஆகவே மூல நட்சத்திரப் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. இன்னும் சிலர் மூல நட்சத்திரத்தில் முதல் பாதம் தான் சேர்க்கக் கூடாது என்றும் மற்ற பாதங்கள் சேர்க்கலாம் என்றும் கூறுவார்கள்.

  • கேட்டை நட்சத்திரத்தில் பெண் பிறந்தால் அவள் கணவனின் தமையனுக்காகாது என்று கூறுவர்.  ஆகவே கேட்டை நட்சத்திரத்துப் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது.
  • பூராடம் நட்சத்திரத்துப் பெண்ணைத் திருமணம் செய்தால் அவள் கணவன் காலமாகி விடுவான். ஆகவே அவள் கழுத்தில் தாலி தங்காது. எத்தனை பெண்கள் பூராடம் நட்சித்திரத்தில் பிறந்து தீர்க்க சுமங்களிகளாக இருக்கிறார்கள்.
  • ஆயில்ய நட்சத்திரத்துப் பெண்ணைத் திருமணம் செய்தால் மாமியார் மறித்துப் போவாள். ஆகவே ஆயில்யம் அறவே கூடாது. என் தாயார் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர், என்னுடைய தகப்பனாரின் தாயார் கடந்த முப்பதைந்து ஆண்டுகளாக மிகவும் நன்றாகவே இருக்கிறார். அவருக்கு இப்போது 90 வயதாகிறது. இதனை வைத்து மேற்ச் சொன்ன கூற்று தவறு என்று தெளிவாக தெரிகிறது.

நம்புவர்கள் இருக்கும் வரை மூட நம்பிக்கைகளும் இருக்கும்.

இவைகளல்லாம் அனுபவபூர்வமாகப் பார்க்கும்போது வெறும் வெற்று  வார்த்தைகளாகத்தான் தெரிகின்றது. இவைகளில் உண்மை இல்லை.  இதை அனுபவ பூர்வமாக இப்படி இல்லை என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும் என் தாயாரின் நட்சத்திரம் ஆயிலயம் என்பதாலும், என் பாட்டி இன்னமும் நலமாக இருக்கிறார் என்பதால்.

Advertisements

3 thoughts on “ஜோதிடத்தில் – மூட நம்பிக்கை

  1. நிங்கள் சொல்லுவது உணம தான் அனால் கிரமங்கல் இருக்கும்வரை இந்த ஜோதிடம் இருக்கத்தான் செய்யும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s