Archive | August 2010

வெண்டைக்காய் பச்சடி

வெண்டைக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:-
வெண்டைக்காய் – 15
பச்சை மிளகாய் – 6
சின்ன வெங்காயம் – 6
கறிவேப்பிலை – சிறிது
துவரம் பருப்பு – ½  கப் (optional)
மஞ்சள் பொடி – சிறிது

சாம்பார் பொடி – ஒரு தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சையளவு (அ) தக்காளி – 4 (அ) 5
எண்ணெய் –  தாளிக்க தேவையான அளவு
கடுகு – சிறிது, சீரகம்- சிறிது
உளுத்தம் பருப்பு – சிறிது, உப்பு – தேவைக்கு.

செய்முறை:-
வெண்டைக்காயை குறுக்கில் (இரண்டாக நடுவில்) கீறி,  சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை நடுவில் கீறிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து, கடுகு,சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், வெண்டைக்காய் போட்டு, தேவையான அளவு  உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி வதக்க வேண்டும்.

வெண்டைக்காயிலுள்ள பிசு பிசுப்பு நீங்கி, வேகும் வரை வதக்க வேண்டும். பின் புளிக்கரைசலை அல்லது பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

இது சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும், சாதத்தோடு கலந்தும் சாப்பிடலாம்.

**** புளிப்பு அதிகமாகிப் போனால் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

Advertisements

ஜோதிடத்தில் – மூட நம்பிக்கை

ஜாதகங்களைச் சேர்க்கும்போது பல அபவாதங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.

  1. மூல நட்சத்திரத்தின் மாமியார் மூலையிலே; பெண்மூலம் நிர்மூலம்.
  2. கேட்டை நட்சத்திரம் ஜேஷ்டனுக்காகாது.
  3. விசாக நட்சத்திரம் இளைய மைத்தினருக்காகாது.
  4. ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்காகாது.
  5. பூராடம் கழுத்தில் நூலாடாது.

மூல நட்சத்திரம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் மாமனார் காலமாகி விடுவார். அதன் காரணமாக பெண்ணின் மாமியார் விதவையாகி விடுவாள். ஆகவே மூல நட்சத்திரப் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. இன்னும் சிலர் மூல நட்சத்திரத்தில் முதல் பாதம் தான் சேர்க்கக் கூடாது என்றும் மற்ற பாதங்கள் சேர்க்கலாம் என்றும் கூறுவார்கள்.

  • கேட்டை நட்சத்திரத்தில் பெண் பிறந்தால் அவள் கணவனின் தமையனுக்காகாது என்று கூறுவர்.  ஆகவே கேட்டை நட்சத்திரத்துப் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது.
  • பூராடம் நட்சத்திரத்துப் பெண்ணைத் திருமணம் செய்தால் அவள் கணவன் காலமாகி விடுவான். ஆகவே அவள் கழுத்தில் தாலி தங்காது. எத்தனை பெண்கள் பூராடம் நட்சித்திரத்தில் பிறந்து தீர்க்க சுமங்களிகளாக இருக்கிறார்கள்.
  • ஆயில்ய நட்சத்திரத்துப் பெண்ணைத் திருமணம் செய்தால் மாமியார் மறித்துப் போவாள். ஆகவே ஆயில்யம் அறவே கூடாது. என் தாயார் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர், என்னுடைய தகப்பனாரின் தாயார் கடந்த முப்பதைந்து ஆண்டுகளாக மிகவும் நன்றாகவே இருக்கிறார். அவருக்கு இப்போது 90 வயதாகிறது. இதனை வைத்து மேற்ச் சொன்ன கூற்று தவறு என்று தெளிவாக தெரிகிறது.

நம்புவர்கள் இருக்கும் வரை மூட நம்பிக்கைகளும் இருக்கும்.

இவைகளல்லாம் அனுபவபூர்வமாகப் பார்க்கும்போது வெறும் வெற்று  வார்த்தைகளாகத்தான் தெரிகின்றது. இவைகளில் உண்மை இல்லை.  இதை அனுபவ பூர்வமாக இப்படி இல்லை என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும் என் தாயாரின் நட்சத்திரம் ஆயிலயம் என்பதாலும், என் பாட்டி இன்னமும் நலமாக இருக்கிறார் என்பதால்.

தோழியின் கேலி

தோழியின் கேலி

எப்படியடா இப்படி எழுதுகிறாய், இத்துனை நாள் எங்கிருந்தது இந்த ஞானம் என்று கர்வமாக கேட்டாள் ஒரு தோழி என்னிடம்…

பெருமைபட ஒன்றும் இல்லை உனக்காக நான் எழுதியதில் ஒரு துளிகூட எழுதவில்லை.

மீளா துயிலில் நான் இருந்தால்,

எனக்காக அங்கு வந்துவிடாதே,

மீண்டும் மீண்டு எழுவேன்

உன் கண்ணீரைத் துடைக்க.

என்று ஏதோ சொல்லியது தான் என்னுடைய முதல் வரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்தவரின் வரிகளை உனக்கு சொல்லி இருக்கிறேன், அடுத்தவரின் வரிகளை ரசித்து இருக்கிறோமே.

உன்னோடு வாழ்ந்த நாட்களில்

அடுத்தவரின் வரிகளை ரசித்தோம்,

உன்னை பிரிந்த பின்

என் வலிகளை

வரிகளாக்கி ரசித்தேன்..

இன்று என்னைச் சுற்றி இருக்கும் நட்புகளுக்காக என்னுடைய வரிகளைச் இடுகிறேன்…. இதுவரை இதயத்தில் பட்டதை, இந்த இனைய தளத்தில் இடுகிறேன்.

என்னுடைய வாழ்க்கையில் பல பாடங்களை உன் மூலமாக கற்றேன், அதனை பதிவுகளின் மூலமாக சொல்ல எனக்கு அத்துனை ஆண்டுகள் வாழமுடியுமா என்று தான் தெரியவில்லை.

நண்பனும் பகை போல் தெரியும் அது நாட்பட நாட்பட முடியும், – இது ரசித்தது

நட்பும் சுகம் போல் தெரியும் அது காலம் செல்ல செல்ல தெரியும் – இது வலித்தது.

காலம் செல்ல செல்ல எதுவும் நிரந்தரம் இல்லை என்பது எனக்கு புரிந்தது போல உனக்கும் புரியும், காயங்கள் ஆறினாலும் வடுக்கல் மாறாது.

ஆயிரம் பேர் ரசித்தாலும் உன்னுடைய ரசனையை மட்டுமே இன்றும் நான் ரசிக்கிறேன்.

I LOVE MY LAPTOP

மடிக்கணினியுடன் காதல்..!

என் கணனியுடனான நட்பின் ஈரம் அதிகமாய் உள்ளது…!!

என் விரல்களின் ஸ்பரிசம் குறைவதனால் வருத்தபடுகிறது ! !
ஏன் உன்னைப் பற்றிய நினைவினால்,நீயின்றி இருக்கும் தருணமும்,

என் அனைப்பின்றி, நீ இருக்கும் தருணமும்,

உன்னை பிரிந்து நான்  இருக்கும் தருணமும் மிகவும் கொடுமை..!!!!

சில நேரம் என் வெட்கப் புன்னைகையால்
என் முகம் சிவந்து போவதைக்கூட நீயே கண்டு என்னிடம் சொல்கிறாய் வெப்கேம் மூலமாக ! ! !

எம். எஸ்.வோர்டில் (MSWord) எனக்கான எண்ணங்களை பல வண்ணங்களில் மாறினாலும் வலிகள் மட்டும்
என்றும் மாறாமல் என்னிடம் மட்டுமே உள்ளது..!!!

பல நினைவால் துடிக்க மறக்கும்
என் இதயத்தை உன் வசீகரம்
அழைத்து வருகிறது என்னை இந்த பூமிக்கு..!!!!

என்னைப் பற்றிய உரைகளை தொடர..!!!!

என்னைப் பற்றிய சுகம்,சோகம், பிரிவு, நட்பு எனும் எண்ணங்களில் நீ வாழ்வதால் என்னுடைய உணர்வின் உறைவிடமாக மாறியதால் நீயும் ஒரு ஜீவராசியாகி விட்டாய்

வாரம் சென்ற பின்னும், ஆரவாரங்களைப் பற்றி ஆர்பரிக்கும்போதும்,
தனக்கான வரிகள் மட்டும்
இன்னும் வரவில்லையே என்று
எண்ணி என்னைவிட்டு போய்விடாதே என் நண்பா..!!!!

உனக்காக நான் எழுதும் முதலும் கடைசியுமான வார்த்தை பாசத்துடன் என்றும் என்னை மறந்து விடாதே “ !!!!!!!

காதல் கண்ணாமூச்சி

ஒரு தோழியின் காதல் கவிதை….

”நான் சொல்ல கூடாதா இந்த பொய்யை,

ஐந்து நாள் உன்னை பிரியப்போகிறேன்

என்று  நீ சொல்லும் போது

ஐந்து நிமிடம் கூட என்னால் முடியாது

வேண்டாம்  என்று உன்னை கெஞ்சகூடாதா?”

”மனதில்  உணர்ந்தேன் உன் காதலை, மறுமுறை

கேட்டேன் அதை நீ சொல்வதை

என்னில் மறைத்தேன் எனக்கு தெரிந்ததை,

உன்கண்ணில் பார்த்தேன்

உன் மனம் துடித்ததை சொல்ல நினைத்தேன்

உன்னிடம் என் காதலை,

சொல்லும்முன் வாங்கிவந்தேன் உன் இதயத்தை
காலம் சொன்னது எனக்காக நீ பிறந்ததை, காட்டிதந்தது

இறைவனுக்கு என்மிதுள்ள அன்பை
நன்றி மறவேன் இறைவன் உன்னை படைத்ததற்க்கு
காதல் செய்வேன் உன்னை மனமகிழ்ந்து நான் சாகும்வரை”

இதை யார் எழுதியிருந்தாலும், எழுதப் பட்டவரைவிட யாருக்காக எழுதப்பட்டதோ அவர் மிகவும் பாக்கியசாலி…

நீ கெஞ்சாமல், கொஞ்சி இருந்தால் இந்த ஐந்து நாள் பிரிவு இல்லாமல் இருந்திருக்குமோ ???

அந்த இறைவனும் உனக்கு நன்றி சொல்வான் நீவீர் வாழும்வரை இந்த அன்பும், பாசமும் மாறாமல் இருந்தால் கவியே….

பிரிவா? இது பிரிவா? இல்லை உன் அன்பினை உன் அன்பானவர் உணரும் சந்தர்ப்பம் அன்றோ?

தன்னை உன்னிடம் தந்து, உன் காதலை மட்டுமே தன்னோடு கொண்டுச் செல்கிறேன் என்று சொன்னது உன் செவிகளில் விழவில்லையா