இரு தேசத்தின் ஒரு குரல்

சின்ன வாத்தியார் – இரு தேசத்தின் ஒரு குரல்

(அமுல் வழங்கும் சோட்டே உஸ்தாத் – தோ தேஷோங் கி ஏக் ஆவாஸ் – Amul Chhote Ustaad-Do Deshon Ki Ek Awaaz)

பல விதமான எதிர் மறையான சூழலிலும், இந்திய பாகிஸ்தான் இடையில் மேலும் சமாதனப் பேச்சு வார்த்தைகள் துவங்கிய வேகத்தில் முடிவு ஏதுமின்றி முடிவடைந்தாலும் ஸ்டார் ப்ள்ஸ் தொலைக்காட்சியில் இப்படி ஒரு போட்டியைப் பார்த்தபோது சந்தோசம் என்பதா இல்லை இது தேவையா என்று சர்ச்சையைக் கிளப்புவதா? எதுவாக இருந்தாலும் பிரம்மாண்டமாக இருந்தது நான் கண்ட இந்த அமுல் வழங்கும் சோட்டே உஸ்தாத்…

இருபது குழந்தைகளுடன் துவங்குகிறது. இந்த சின்ன வாத்தியார் போட்டி. இரு நாடுகளிலிருந்தும் பத்து குழந்தைகள் பங்கு பெறுகிறார்கள். பார்க்க மிகவும் ரசிக்கும்படி இருந்தது. அதுவும் ஒரு சிறுமி பெயர் நினைவில் இல்லை, பாகிஸ்தானைச் சேர்ந்தவர் எவ்வளவு சந்தோஷமாக தனது சக தோழர்களை, இந்தியர்களையும் ரசித்தாள்.

இரு ஜாம்பவான்களை நடுவர்களாக கொண்டு இந்தப் போட்டியை நடத்துகிறது இந்த தொலைக்காட்சி.

முதலாவதாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடுவர் ராஹத் நஸ்ரத் ஃபதேஹ் அலி கான். இவர் ஃபைசலாபாத் நகரில் மிகவும் பிரபலமான சங்கீத குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதில் மேடையேறியவர். கவ்வாலி என்ற வகை பாடல்களில் மிகவும் சிறந்தவர், மற்றும் இஸ்லாமிய பாடல்களிலும் புகழ் பெற்றவர். இவை மட்டுமின்றி சிறந்த பின்ன்னி பாடகரும் ஆவார்.

இந்திய தேசத்தின் நடுவர் சோனு நிகம், இவர் இந்தியில் மிகவும் பிரபலமானவர். மூன்று வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் பாடல்கள் பாட ஆரம்பித்தவர். படிபடியாக, பல போட்டிகளில் வென்று, பாடகர்கள் வரிசையில் தனகென்று ஒரு இடம் பதித்தவர். இந்தி,தமிழ், பெங்காளி, கன்னடம், தெலுங்கு, போஜ்புரி, உருது, மராத்தி என பல மொழிகளில் பாடியுள்ளார். இவருக்கு இந்த மேடை புதியதுமில்லை. ஏற்கனவே ச ரி க ம என்ற சிறந்த பாடகருக்கான போட்டியில் 1995-லேயே நடத்தி பெறும் புகழ் பெற்றவர்.

இந்த பதிவினி நான் இடுவதற்கு காரணமே சின்மயி. இந்த நிகழ்ச்சியைக் நான் முழுதுமாக பார்ப்பதற்கு ஒரு காரணம் சின்மயி.

மிகவும் அழகாகவும், மிக நேர்த்தியான உடையுடன், பாரம்பரிய வடநாட்டவர் போல தோன்றிய அந்தப் சிறு பெண்ணைப் பார்த்தவுடன் ஹே சின்மையி என்றேன், பக்கத்தில் இருந்தவரோ புது தொகுப்பாளினி என்றார், அவர் மங்களூரைச் சேர்ந்தவராதலால் அவருக்கு இவரைப் பற்றித் தெரியவில்லை.

சின்மயியை பார்த்தவுடன் இவர் நம்ம ஏர்டெல் சூப்பர் சிங்கர் சின்மயி தானா என்று ஒரு நிமிடம் இல்லைங்க ஒரு மணி நேரம் தவித்தேன் என்றே சொல்லவேண்டும். அவருடைய உடையும், உற்சாகமும்,  எனக்கு இது நம்ம சின்மயி தானா என்று யோசித்தேன். இவருக்கும் போட்டிகளில் தொகுப்பாளினியாக வருவது ஒன்றும் புதியது இல்லை. ஆனால் ஒரு இந்தி தொலைக்காட்சியில் அதுவும் பல நாட்டவரும் காணக்கூடிய ஒரு நிகழ்ச்சியில் தமிழ் பேசும், தமிழ் பாடகியை தொகுப்பாளினியாக கொண்டுவர ஸ்டார் நிறுவனத்திற்கு மட்டுமே தைரியம் வரும். என்ன தான் இந்தி மொழித் தெரிந்தவராக இருந்தாலும், ஒரு தமிழருக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்…. ஏக் மதராஸி ஆப் கே லியே என்று ஏதோ உளற தோன்றியது.

இவருடன் மற்றுமொரு தொகுப்பாளராக 3-இடியட்ஸ் எனும் திரைப்படத்தில் பிரபலமான ச்சதுர் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவரான ஓமி வைத்யா வருகிறார்..

விருவிருப்பாக தொடங்கியது, பொருத்து இருந்துப் பார்ப்போம்….

20 குழந்தைகளில் யார் அந்த சின்ன வாத்தியார் என்று…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s