கொத்தமல்லி-குழம்பு

கொத்தமல்லி குழம்பு

தேவையான பொருட்கள்:
========================

புளி – கொஞ்சம்
கொத்தமல்லி – ஒரு கட்டு
வெங்காயம் – இரண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – ஒன்று அல்லது இரண்டு
பச்சை மிளகாய் – நான்கு

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா பொடி – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி- இரண்டு டீஸ்பூன்
தாளிக்க தேவையான அளவு ரிபைண்ட் ஆயில் – இரண்டு குழிகரண்டி +அரை  குழிகரண்டி
கடுகு,சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்

அரைக்க:
========
தேங்காய் துறுவல் – கால் கப்

கொத்தமல்லி தழைகள் – அலசி, சின்ன துண்டுகளாக நறுக்கிய பின், மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும்

செய்முறை:
=============
* வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும், சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்.

* புளியை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.

* பாத்திரத்தில் இரண்டு குழிகரண்டி  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம், தாளித்து பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பொறிய விடவும்.

* நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, தக்களியை சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து, மஞ்சள் தூளுடன், அரைத்தக் கொத்தமல்லி விழுதினை சேர்க்கவும்.

*பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

* பின்னர் புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். மிளகாய் பொடி (அ) சாம்பார் பொடி சேர்க்கவும்.

* பின்னர் அரைத்த தேங்காய் விழுதினை சேர்த்து,  மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான கொத்தமல்லி குழம்பு தயார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s