அல்வா சாப்பிடுவது போன்றது

அடுத்தவரை விமர்சிப்பது நமக்கு அல்வா சாப்பிடுவது போன்றது ! ! !

அடுத்தவரை விமர்சிப்பது என்பது மிகவும் எளிதானது சிறிய உதரணம் ! ! !

ராஜா எனும் இளைஞன் ஒருவன் இருந்தான், அவன் சிறந்த ஓவியராக வேண்டும் என்று எண்ணி தலைசிறந்த ஓவியரை தனது குருவாக தேர்ந்தெடுத்து ஓவிய பயிற்சிப் பெற்றான். சிறந்த மாணவனாகவும், ஒவியப் பயிற்சியில் சிறந்தும் விளங்கினான்.

இந்த இளம் ஓவியன், தனது ஒவியத் திறனை சோதிக்க எண்ணினான். அதற்காக தனது முழு திறனையும் உபயோகித்து ஒரு சிறந்த ஓவியம் தீட்ட முற்பட்டான். மூன்று நாட்கள் முழுமூச்சுடன் முயன்று முடிவில் ஒரு அழகான ஓவியத்தை தீட்டி முடித்தான்.

அந்த ஓவியத்திற்கு மக்களின் கருத்து எப்படி இருக்கிறது, தன் ஓவியம் வரையும் திறன் எப்படி, சபையினில் எப்படி வரவேற்கபடுகிறது என்று அரிய முற்பட நினைத்தான்.

ஒருநாள் அதிகாலையில் அவன் தனது படைப்பான ஓவியத்தினை மக்கள் நடமாடும் நெரிசலான சாலையில் வைத்தான். வைத்துவிட்டு, அந்த பலகையின் கீழ் “ பண்புள்ள மக்களே, இந்த ஓவியமானது என் படைப்பு, நான் இந்த தொழிலுக்கு புதியவன். ஆதாலால்  இந்த படைப்பினில் எதேனும் பிழை இருப்பின் அந்த இடத்தில் X என்று குறியிடவும் ” என்று குறிபிட்டிருந்தான்.

அவன் மாலையில் வீடு திரும்பும் வேளையில், தனது ஓவியத்தினை எடுத்துச் செல்ல எத்தனித்து, ஓவியத்தின் அருகில் சென்றபோது, அவன் தூள் தூளாக சிதைந்து போனான். அவனது ஓவியம் முழுவதிலும் X என்ற குறியிடப்பட்டு இருந்தது. ஒரு சிலர் அதன் மீது அவர்களது விமர்சனத்தையும் எழுதி இருந்தார்கள். இந்த ஓவியத்தை தீட்டிய நம்ம இளைஞனுக்கோ என்ன செய்வது என்றே புரியவில்லை.

உடைந்த இதயத்துடன் அவன் தனது குருவிடம் ஓடினான். அவர் முன் கண்ணீர் மல்க நின்றான். தேம்பி அழுதவாரே, அவன் தனது குருவிடம் நடந்ததை கூறினான். தன்னுடன் கொண்டு சென்ற அவனது உபயோகமில்லாத ஓவியத்தைக் காண்பித்தான்.

ராஜா தனது மூச்சினை நன்கு சுவாசித்து, ஒரு பெருமூச்சினை விட்டு பின்னர் அவனது குருவிடம் ” நான் உபயோகம் இல்லாதவான் ஆகிவிட்டேன், இதைத்தான் நான் கற்றுக் கொண்டேன் என்றால் எனக்கு ஒரு ஓவியனாகும் தகுதி சிறிதும் இல்லை என்றும், மக்கள் அவனை நிராகரித்து விட்டார்கள் என்றும் புலம்பினான். எனக்கு இப்படி வாழ்வதைக் காட்டிலும் செத்து மடியலாம் போல இருக்கு” என்று கூறினான்.

குருவோ புன்முறுவலுடன் அவனைப் பார்த்து. மகனே, நீ வரைந்த ஓவியத்தில் சிறிதாக தவறு இருக்ககூட வாய்பில்லை என்றும் உறுதியாக கூறுகிறேன். நீ எவ்வளவு சிறந்த ஓவியன் என்பதனை நான் உனக்கும் இந்த மக்களுக்கும் நீரூபிக்கிறேன் என்றார்.

ராஜாவுக்கோ தனது குரு நாதர் சொல்வதை நம்ப முடியவில்லை. அவன் குருவிடம், நீங்கள் கூறுவது போன்று என்னிடம் அத்துனை வல்லமை இருக்கிறதா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது,  மேலும் எனக்கு என் மீது இருந்த நம்பிக்கை தொலைந்தது விட்டது. எனக்கு நீங்கள் மேலும் தவறான நம்பிக்கையை தந்து விடாதீர்கள் என்று கண்ணீருடன் கேட்டுக் கொண்டான்.

நான் சொல்வதை குறுக்குக் கேள்விகள் எதுவும் கேட்காமல் செய்.  நான் மற்றவற்றை பார்த்து கொள்கிறேன். கண்டிப்பாக இது பயன் உள்ளதாக இருக்கும். மனதை தளர விடாதே என்றார்.

ராஜாவோ தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றாலும், குருவினது சொல்லுக்கு கட்டுபட்டு, அதற்கு ஒப்புக் கொண்டான். இரண்டு நாட்கள் கழித்து அவன் முன்னர் தீட்டிய ஓவியத்தினை அப்படியே வரைந்து அவனது குருவிடம் தந்தான். அந்த நேர்த்தியான, அழகான ஓவியத்தைக் கண்ட குரு அவனிடம் ஒன்றும் கூறாமல் புன்னகையுடன் என்னுடன் வா என்றார்.

ராஜா முன்னர் தனது ஓவியத்தை வைத்த அதே நெரிசலான சாலையில் அவனது இந்த புதிதாக வரைந்த ஓவியத்தையும் அதே இட்த்தில் வைத்தனர்.

இப்போது குரு மேலும் ஒரு பலகையினை எடுத்து, அதில் “பண்புள்ள மக்களே, இந்த ஓவியமானது என் படைப்பு, நான் இந்த தொழிலுக்கு புதியவன். இங்கு ஒரு பெட்டியில் வண்ணங்களும், தூரிகைகளும் வைத்துள்ளேன்.

மேலானவர்களே எனக்கு சிறிது சாதகமாக உதவி புரியுங்கள். இந்த படைப்பினில் ஏதேனும் பிழை இருப்பின் தயவு செய்து இங்கு இருக்கும் தூரிகையை எடுத்து இதனை சரி செய்யவும் ” என்று குறிபிட்டிருந்தார். குருவும் ராஜாவும் வீடு திரும்பினர்.

மாலையில் அவர்கள் இருவரும், அந்த ஓவியத்தை வைத்த இட்த்திற்கு வந்தனர். ராஜாவிற்கு ஆச்சர்யமாக இருந்த்து.ஒரு சிறிய திருத்தம் கூட அதில் இல்லை. அடுத்த நாளும் அவர்கள் அங்கு சென்றார்கள்.

அந்த ஓவியத்தை யாரும் இது வரை தொடவில்லை. அந்த ஓவியத்தினை ஒரு மாதம் வரை வைத்து இருந்தார்கள். அப்போதும் அதில் யாரும் திருத்தம் செய்யவில்லை.

அடுத்தவரை விமர்சிப்பது என்பது மிகவும் எளிதானது, ஆனால் மேம்படுத்துவது என்பது மிகவும் கடினமானது.

அடுத்தவரின் குறைகளைச் சொல்லுவதைக் காட்டிலும், அவரின் மனபோக்கு, திறமை, ஓழுக்கத்தினை  மேம்படுத்துவது எப்படி என்று யோசிக்க வேண்டும். மேலும், நினைவில் கொள்ளவேண்டிய விஷயம் என்பது அடுத்தவரின் விமர்சனத்தினால் வருத்தப்பட்டுக் கொள்ள கூடாது. மேலும் அந்த விமர்சனங்களை எப்படி உடைப்பது என்று யோசிக்க வேண்டும்.

அந்த விமர்சனங்களில் உள்ள  நிரை குறைகளை ஆராய்ந்து தன்னை மேலும் சிறந்த மனிதராக மேம்படுத்துவதற்கு உபயோகமாக எடுத்துக் கொள்ளவும்….

Advertisements

2 thoughts on “அல்வா சாப்பிடுவது போன்றது

  1. good concept now i am in training profession i get lot of comments about me and my team this story give confidance thanks for this story

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s