சம்மதம் சொல்வீர்களா??

நண்பரே,

நீங்கள் தங்களின் பெயரிடச் சொல்லி இருந்தாலும், என்னால் இப்போது இந்தப் பதிவினில் உங்களது பெயரைச் சொல்லமுடியாது,

உங்கள் அன்னையின் ஆசியுடன் திருமணம் முடிந்தவுடன், இங்கு உங்கள் புகைபடத்துடன் இடுகிறேன். இப்போது இது உங்கள் அன்னைக்கு மட்டுமே……

இண்டர்னெட்டின் இனையில்லா ஜோடியாக வாழ்வீர்கள் எனபதில் எனக்கு சந்தேகமில்லை  ஏன் எனில் இதுவரை இண்டெர்னெட்டில் மட்டுமே பார்த்து பேசி மனதை கொடுத்தவர்கள் நீங்கள் என்பதால்…. உங்களுக்காக தூதுவனாகவும் இந்த இனையத்தின் வாயிலாக இந்த வலைப் பதிவு

எப்படி எழுதுவது என்று யோசித்தே மூன்று மணி நேரம் போனது.

இது உண்மை சம்பவம் என்று எழுத நினைத்தேன், ஆனால் சம்பவமாக கொஞ்சம் சிரம்மாக உள்ளதால் என்னால் என் நண்பருக்கு முடிந்த உதவியாக இதனைப் பதிவாக இடுகிறேன்.

ஈன்ற அன்னைக்கும், அன்பு மகனுக்கும் இடையில் ஒரு சிறிய போர்.

காரணம் : மகன் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணிற்கு ஒரு குழந்தை இருப்பது.

என் நண்பரின் தாய் கண்டிப்பாக என் தாயின் சமவயது உடையவராகத் தான் இருப்பார். மிகவும் கடினமான மன நிலையில் தான் இருப்பார். எந்த ஒரு தாயும் தன் மகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளப் பெண்ணை மணம் முடித்து வைக்க தானாக முன் வரமாட்டார். ஆனாலும் அந்த அன்பு அன்னையிடம், என் நட்பிற்காக தூதாகச் செல்ல இந்த பதிவினைத் தேர்ந்து எடுத்தேன்.

அம்மா என்றால் அத்துனை அன்பு எனது நண்பருக்கு இல்லை உங்கள் மகனுக்கு. உங்கள் மகன் தனக்கான முடிவாக தன் திருமணத்தைப் பற்றி யோசித்திருந்தால் கண்டிப்பாக நானே உங்களிடம் அவருக்கு வேறுப் பெண்ணை பாருங்கள் என்று கூறி இருப்பேன். ஆனால் தன் தாயைத் திருப்திப் படுத்தவும், தன் தாய்க்கு இருக்கும் மன குறையைக் குறைக்கவுமே முழு மூச்சாக தனக்கான பெண்ணைத் தேடும் பணியில் இருந்தார்.

எனக்குத் தெரிந்து தினமும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இதற்காகவே செலவிட்டார். அப்படி தானாக தேடிய பெண்கள் அனைவருக்குமே ஒரு குழந்தையாவது இருக்க வேண்டும் என்ற ஒரு உயர்ந்த குறிகோலுடன்தான் தன் தேடல் பயணத்தில் இருந்தார்.

அப்படித் தேடியதில் மகனுடன் கூடிய பெண்ணிடம் பேசி பழகியதில் தன் மனதை மொத்தமாக அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். இன்று வரை அந்தப் பெண்ணை நேரில் சந்தித்தது இல்லை, அந்தப் பெண்ணும் இவரை நேரில் பார்த்த்து கிடையாது.

நானும் பல தருணங்களில் அவரிடம், இந்தப் பெண்ணை உங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்று பல முறைக் கேட்டு இருக்கிறேன். ஏன் எனில் என்னைப் போன்ற சென்னைவாசியின் வீடாக இருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியும்.

என்ன தான் கலாச்சாரம் மாறி இருந்தாலும், காரணமே இன்றி திருமணங்கள் முறிந்தாலும், தன் மகனுக்கு குழந்தையுடன் இருக்கும் பெண்ணை மனமுடிக்க நம் தமிழ் தாய்களுக்கு ஏனோ வலிக்கிறது.

உங்கள் மகனுக்கு ஒரு மகன் இருந்து, இரண்டாவதாக திருமணம் முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதை மிகவும் சுலபமாக செய்து விடுவீர்கள். அப்போது உங்கள் சுற்றம், நட்பு, உறவு என்று எதுவும் தங்களுக்கு குறுக்கே வராது.

முதலில் உங்களுக்கு சம்மதமா என்று சொல்லுங்கள், பிறகு அந்த இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று உறவுகளைப் பற்றி யோசியுங்கள்.

அன்பான அன்னையாக நீங்கள் உங்களின் மகனின் ஆசைக்கு துனையாக நில்லுங்கள். என் மகன் எப்படி ஒரு நல்ல விஷயத்தைச் செய்கிறான், அவனைப் போன்று வருமா என்று பெருமைப் பட பேசிடுங்க, அடுத்தவரும் அதை அமோதிப்பார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக உங்களைப் பற்றி யோசித்திட அடுத்தவருக்கு நேரமில்லை. இரண்டு நாட்களுக்கு மட்டுமே உங்களைப் பற்றியும், உங்கள் மகனின் திருமணத்தைப் பற்றியும் பேசிடுவார்கள்.

இந்த திருமணத்தில் பல விஷயங்கள் உள்ளது.

 1. நீங்கள் எதிர்பார்த்த உங்களது மகனின் திருமணம்
 2. அவரது திருமணம் அவர் விரும்பும் பெண்ணுடன்.
 3. நீங்கள் உங்கள் ம்கன் அந்தப் பெண்ணுடன் பேசிடும் தருண்ங்களில் அவருக்குத் தெரியாம்ல் பாருங்கள். உங்கள் மகனின் சந்தோசம் தெரியும்.
 4. நான் அந்த பெண்ணுடன் பேசி இருக்கிறேன் என்ற காரணத்தினால் சொல்கிறேன், அவர்களிருவரும் மிகவும் சந்தோசமான ஜோடிகளாக இருப்பார்கள்.
 5. உங்கள் மகன் கண்டிப்பாக உஙகள் சம்மதமின்றி அந்த பெண்ணை மணக்க முன் வரமாட்டார், ஆனால் வேறு பெண்ணை மணம் முடிப்பாரா என்பது காலம் பதில் சொல்லும்.
 6. உங்களுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அந்த பெண்ணே விலகும் சந்தர்ப்பம் உண்டு ஆனால் தன் மனதை கொடுத்தவள் கண்டிப்பாக கண்ணீருடன் மட்டுமே காலம் கழிப்பாள்
 7. தாயே ஒரு பெண்ணின் கண்ணீரில் உங்கள் மகன் எப்படி வாழ முடியும்.
 8. உங்களின் மகளாக என்னை ஒரு நிமிடம் நினைத்துக் கொள்ளவும், அந்தப் பெண் இருக்கும் நிலையில் நான் இருந்தால், நீங்கள் உங்கள் பெண்ணின் வாழ்க்கைகாக அந்த நல்ல மனிதரிடம் சென்று பேசுவீர்களா இல்லையா?
 9. கண்டிப்பாக அந்தப் பெண் உங்களையும் உங்கள் மகனையும் பிரிக்க் காரண்மாக இருக்க மாட்டாள். நீங்கள் அவளுடன் பேசிப் பார்க்கவும். மிகவும் இனிமையானவள்.
 10. தன் சந்தோசமே தன் மகனுக்காக என்று இருந்தவளின் வாழ்க்கையில் அவளுக்கும் வாழ்க்கை உள்ளது என்ற நம்பிக்கையை தந்தவர் உங்கள் மகன்.
 11. அந்த நம்பிக்கையை அனைத்து விடாமல், அவர்கள் வாழ்க்கை இனிக்க உங்களது சம்மத்த்தை தரவும்.

அந்தப் பெண்ணை எனக்கு உங்கள் மகன் மூலமாக மட்டுமே தெரியும். அதனால் தான் உங்களின் மகனின் வாழ்க்கைகாகவும், அவரது ஆசைகள் நிறைவேறவும் என்றும் இறைவனிடம் வேண்டுபவர்களில் நானும் ஒருவள்.

உங்களின் சம்மத்தில் இரண்டு நல் உள்ளங்கள் சேர்ந்திடும். வாழ்க்கை வளம் பெறும்.

உங்களின் கனவுகளாக இருக்கும், உங்கள் மகனின் வாரிசுகளையும் சீக்கிரம் காண்பீர்கள்….

என்னுடைய அண்ணனோ தம்பியோஇதைச் செய்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஆதரவாய் இருந்திருப்பேன் என்ற தைரியத்தில் மட்டுமே இந்த பதிவினை உங்களுக்கு அர்பணிக்கிறேன்

உங்களின் சம்மதம் கிடைத்தவுடன், உங்களையும் உங்கள் மகனின் திருமணத்தையும் நேரில் காண ஆவலாய் இங்கே ஒரு மகள் காத்துக் கொண்டு இருக்கிறாள்….

Advertisements

2 thoughts on “சம்மதம் சொல்வீர்களா??

 1. இது நாம் அனைவரும் வரவேற்க வேண்டிய ஒரு செயல்…
  நண்பரை நான் பாராட்டுஹிரேன்….
  அவரின் அன்னை இந்த முடிவை ஆதரிக்க நான்
  ஆண்டவனை வேண்டுிஹிரேன்….

  • தம்பியின் வருகைக்கும், இந்த இடுகைக்கும் நன்றி….
   உங்களின் வேண்டுதல்களை பலிக்கும்,
   வெகுவிரைவில் ந்ண்பரின் அன்னை சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s