ப்ரியமான தோழி

14-ஜுலை-2010

ப்ரியமான தோழி

நிலையான அன்புக்கு பிரிவில்லை,

நிலைத்தது எதுவும் நிரந்தரமில்லை

சொல்லாத அன்பிற்கு அர்த்தம் இல்லை,

சொல்லியும் புரியாத நட்பிற்க்கு இதயத்தில் இடமில்லை,

தேடும் பாசத்திற்கும், தேடிய அன்பிற்கும் என்றும் தோல்வி இல்லை,

தன்னை நாடி வந்த உறவை துரத்துபவருக்கு,

தேடி சென்றாலும் அன்புக் கிடைப்பதில்லை.

உறுதியான, உண்மையான நட்புக்கு

என்றும் மரணம் இல்லை..

நீயும் நானும் நட்பாக இல்லையே (நிலைத்தது எதுவும் நிரந்தரமில்லையோ)

உந்தன் நிழலாக மாற்றிய பின் பிரிவு என்பது உன் இறப்பினில் மட்டுமே எந்தன் நிழலாக நீ இருந்திருந்தால் இறப்பு என்பது எப்போதும் எனக்கு இல்லை என்றும் நீ வாழ வேண்டும் என்பதற்காக ! ! !

காலங்கள் பல ஆனாலும், காயங்கள் ஆறினாலும், வலி மட்டும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது… ஏவி.எம்.மின் ப்ரியமான தோழி – ஒரு பெண்ணும், ஆணும் சிறுவயது முதலேபழகி இருந்தாலும் அது காதலாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, தூய்மையான நட்பாகவும் – தோழமையாகவும் இருக்கலாம்.... ஒரு ஆண் பெண் நட்பாக அதைப் பார்த்தாலும்கூட நான் என் தோழியோடு இருந்த நேசத்தை நினைத்து நினைத்து புல்லரித்து போன படம். அதே தோழியினால் ஏற்பட்ட காயம் காற்றோடு கறைந்துப் போனது என்று தான் எண்ணி இருந்தேன்.

எத்தனை முறைப் பார்த்த படம் என்று எனக்கே தெரியாது..  இதுவரை இனிமையாக இருந்தது, இன்று என்னமோ மனதில் கொஞ்சம் வலித்தது..

காரணம் அந்தப் படத்தின் கடைசி 30 நிமிடங்கள் மனதை என்னமோ செய்தது. எத்தனை தான் அடிபட்டாலும், ஏதேதோ எண்ணங்கள் என்னை புரட்டினாலும் எப்போதுமே மனதிற்கு இனிமையானது நட்பு என்பதில் இன்றும் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

சிறு இடைவெளிக்குப் பிறகு இன்று நீ என்னுடைய நட்பாக இருந்தாலும் என் மனதில் நீயும் உன் நட்பும் ஏற்படுத்திய காயம் இருப்பதால்… வலிகள் கண்ணீராக என்னையும் அறியாமல்…

எப்படி சிரித்துப் பேசி, கொஞ்சி குலாவி, கூடியிருந்தாய் நீ என்பதை என் மனம் அசைபோடவில்லை. எப்படி எல்லாம் என்னை விரட்டினாய் என்பதனை மட்டுமே இந்த படத்தைப் பார்த்தபோது( நான் கடைசி 30 நிமிடம் மட்டுமே இன்று பார்த்தேன்), உன்னுடன் பேசினாலும் என் மனம் வலிக்கதானே செய்யும்….

காயங்களை மட்டுமே தந்த உன்னை முள்ளில்லாத ரோஜா என்று நினைத்தது என் தவறு தானே…

ப்ரியாமான தோழி படத்தில் தன் தோழி அவள் நல் வாழ்விற்காக தனது நல்ல வாழ்கையும், அவளது நட்பினையும் துறக்க முடிவுச் செய்தான் ஆனால் என் நட்பே நீ என்னச் செய்வதற்காக இப்படி செய்தாய்… என் நல் வாழ்விற்காக என்னைப் பிரிந்து போ என்று சொன்னால் கூட நான் இறந்து போவேன் என்று அறிந்தவள் தானே நீ.

பிரிந்து போ என்று சொல்வதற்கு பதில் நீ இறந்து போ என்று சொன்னால் நொடிப் பொழுதில் செய்வேன் என்று தெரிந்த உனக்கு, உன் நிழலாகவே மாறினேன் இல்லை மாற்றினாய், நிழலாக மாற்றிய உனக்கு அந்த நிழலை பிரிய எப்படி மனம் வந்த்து. நீ நினைத்தவுடன் பிரியவும், சேரவும், நிழலாகவும்,நிஜமாகவும் மாற்றிக் கொள்ள நட்பு உனது கால் செருப்புகள் என நினைத்தாயோ???

காலை அலுவலகத்திற்கு செல்லும் நேரம் ஏற்படும் பிரிவைக் கூட கடினமாக நினைத்த மீண்டும் எப்பொழுது உன்னை பார்ப்பேன் என்று தவித்த நட்பினை, உன்னை பிரிந்தேன். இல்லை பிரிந்தாய்…

மீண்டும் எப்பொழுது உன்னை பார்ப்பேன் என்று தவித்தேன்.

என் கனவெல்லாம்,

என் நினைவெல்லாம்…

கண்ணிரில் நனைந்தேன்.

உயிர் இழந்து உடல் வாழ்ந்தது.

உடல் இருந்தும் உயிர் இழந்தேன்.

உனக்காகன வாழ்வு எனதானதால் என் வாழ்வினைத் தேடி பிரிந்தாயோ ! ! ! உன்னை பிரியாது என் இதயம் என்று தெரிந்ததால் என்னை நீ பிரிந்தாயோ…

நீ என்னை பிரிந்தாலும், என் நினைவில் நீ நிற்பாய் என்று நன்றாகத் தெரியும் உனக்கு. நான் உன்னை பிரிந்தாலும், உன் மனதினில் நான் நிற்பேன் என்று தெரிந்தாலும் உன்னை எதற்காக பிரியவேண்டும் என்ற அந்தக் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை உன்னிடம். பிரிய வேண்டும் என்றால் எதற்காக துரத்தி துரத்தி நட்புக் கொண்டாய்???

நான் சிறிது கலங்கினாலும் உன் இதயம் துடிக்குமே என்று கொஞ்சமும் என் மன கிலேசங்களை உன்னோடு சொல்லாது இருந்த என்னை, என் அன்பினை நினைத்து பார்க்காது, சிறிதாக என் முகம் வாடினாலும் கலங்கிடும் உன் இதயம். என் இதயம் துடிக்கும் என்று தெரிந்தும்… பிரிந்தாய்…

என் இதயம் துடிக்கும் நேரத்திலும், நான் உன்னை நினைப்பேன்…

என்னுள் துடிக்கும் என் இதயம். உன் நினைவினாலே துடிக்கிறது..

உன் நினைவு என்னை விட்டு போகும் போதுஎன் இதய துடிப்பு நின்று விடும்

என்று நான் பிதற்றுகிறேன் என்று நீ அன்று என்னைப் பிரிந்தாயோ

அன்னைக்கு இனையாக அன்பினை செலுத்தி தான் என்னைச் சுற்றி இருந்தவர் பலருக்கு நீ என் அன்னையாகவே தோன்றினாய், ஆனாலும் எந்த அன்னையும் தர முடியாத தண்டனை நீ தந்தாய் எனக்கு.

உன் அன்பான உள்ளத்தினால், என்னை ஆட்கொண்டாய், உன் அன்பை தேடிய எனக்கு இல்லையென்று உரைத்தாய்…
உனக்காக வாழ்ந்த நான் நீ இன்றி வாழ்வதையே மறந்தேன்,
உன்னை நினைக்கும் பொழுதெல்லாம் என் உயிர் அழுதது..
என் வாழ்வில் நீ இல்லையே என்று நினைத்து, ஒரே ஒரு முறை உன் முகம் பார்க்க துடித்தது என் உள்ளம், யார் என்னுடன் பேசினாலும் உன் நினைவே என்னுள் தோன்றியது. நேரில் கண்டு பேசவில்லை என்னுடன். தொலைபேசியில் அழைத்தாலும் பேசவில்லை என்னுடன், அழைப்பினைத் துண்டித்து என்னை அலட்சியப் படுத்தினாய்…

தூக்கம் இல்லை ஆனால் கனவுகள் இருந்தது – கனவுகளில் என்னுடன் நீ,  உன்னால் உன் நினைவால் உறக்கம் கூட பகையானது. உறவுகளும் பகையானது, ஆனாலும் உன் நினைவு மட்டும் எனக்கு உறவாக இருந்த்து.

அன்பு மழையாக என்மேல் விழுந்தவள் நீ

நனையாமல் இருந்திருக்கலாம் நான்…

கடல் அலைகள் போல் உன் நினைவுகள்.

என் உறக்கத்தைக் கூட இழந்தேன். ஆனால் உன்னை என்னில் இருந்து பிரிக்க/இழக்க நான் பட்ட பாடு.

கனவுகளுடன் வாழ்ந்தாலும் உன்னை நினைக்காமல் வாழவேண்டும் என்று எத்துனை வேண்டுதல்கள் உன் இறைவனிடம்….

கனவுகளுடன் வாழ்ந்தாலும் வாழ்ந்திடுவேன், பரவாயில்லை ஆனால் இனி வேண்டாமடி என் உயிருள்ள வரை மேலும் உன்னைப் போல் ஒரு நட்பு…………..

நீ தந்த காயங்கள், வடுக்களாக மாறியபோதும் வலி குறையவில்லை.

இதுவரை நீ தந்த காயத்தில் இருந்து நான் மீண்ட கதையும் என்னை பாடாய் படுத்திய அந்த நட்பினையும் இன்னமும் நான் சுவாசிக்கிறேன் ஆனாலும் சுவாசிக்க சிரம படுகிறேன்… ஆக்சிஜனாக பல நட்புகள் என்னை சூழ்ந்தபோதும்…. வேறு ஒரு நட்பினை பற்றி எழுதிட மனதினில் வார்த்தைகளோடு விளையாட நினைத்தேன்..

ஆனால் அது ஒரு நல்ல மனநிலையில் செய்ய வேண்டும் என்பதனால் என் மனபாரத்தினை உடனே கொட்டிட இந்த பதிவு….

Advertisements

2 thoughts on “ப்ரியமான தோழி

  • என்னுடன் என் வலிகளை பகிர்ந்தவர்களில் நீங்களும் ஒருவர்,
   அதனால் உங்களுக்கு என் வலியும் எழுத்தும், அதன் வேகமும் தெரியும்…

   நேசத்துடன்
   உங்கள் அனு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s