ஜாக்பாட் Vs. ஜாக்பாட் சீசன் 2

நைல் நைல் நதியா…. இன் ஜாக்பாட்

ஜாக்பாட் ஜெயா தொலைக்காட்சியால் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சில மாற்றங்களுடன் ஜாக்பாட் சீசன் 2 என்று புதுப் பொலிவுடன் தொகுப்பாளினியுடன் மட்டுமே வந்துள்ளது….

குஷ்புவின் ஜாக்பாட் போல வருமா ஜாக்பாட் சீசன் 2 ஒரு அலசல்.

ஜாக்பாட் Vs. ஜாக்பாட் சீசன் 2 = குஷ்பு Vs. நதியா

குஷ்பு

நம்மில் ஒருவராகவே கலந்தவர் ஜாக்பாட்டின் நாயகியாக இருந்தவர்

அவரது தமிழுக்கு குஷ்பு தமிழ் என்று சொல்லும் அளவுக்கு பிரபலம் – அவரது பலம்.

ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு இனையாக இவரது ஜாக்கெட்டுகளும் பிரபலம்.

வாரவாரம் ஒரு புதுவிதமான ஜாக்கெட்டுகளை அறிமுகபடுத்தியவர்.

ஜெயா தொலைக்காட்சி முன் பெண்களை கட்டி போட பெரிதும் காரணமானது.

நதியா

இன்று நம்மிடையே பல கதாநாயகர்களுக்கு அன்னையாக வந்திருந்தாலும், ஒரு கதாநாயகிப் போலவே பல ஆண்டுகளுக்கு பிறகு அவரது திரை பிரவேசம்.

சில பல முன்னனி நிறுவனங்கள் அவரைத் தொலைக்காட்சித் தொடர்களுக்காக அனுகிய போது மறுத்து வந்தவர், இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புகொண்டது வரவேற்கதக்கது.

ஏற்கனவே வேறு ஒருவரால் மிக பிரபலமான நிகழ்ச்சிக்கு வருவது என்றால் ஒரு தில் வேண்டும்.

முதல் வாரம் நதியாவை சின்னப் பெண்ணாக் காண்பிக்க நினைத்தனரோ ஜெயா தொலைக்காட்சி?  கொஞ்சமும் ஒட்டாத ஒப்பனை.

அவர் எப்படி வந்தாலும் சின்னப் பெண்ணாகவே தெரிவார் எங்களைப்போன்ற அவரது தீவிர ரசிகர்களுக்கு.

எதாவது சில மாற்றங்களுடன் வந்து இருந்தால் இது சீசன் 2 என்று கூறி விடலாம். அப்படியே ஜாக்பாட் நிகழ்ச்சியாக வேறு தொகுப்பாளினி மட்டுமே.

மாற்றங்கள் வருமா பொருத்து இருந்து பார்ப்போம்? ஜெயா நிறுவனத்திற்கு இதைச் சொல்லுங்க….

இதில் நதியாவின் பங்கு மிகவும் குறைவே. மாற்றங்கள் வந்தால் மட்டுமே நதியாவை கான முடியும்.

இந்த நதியாவின் ஜாக்பாட் முதல் வார துளிகள் :

என் கண் முன்னே நதியா இருந்தாலும், பெரிய மாற்றம் இல்லாத காரணத்தால் குஷ்புவே பேசுவது போல தான் இருந்த்து.

ஒருவாரம் பார்த்தவுடன் இந்த பதிவினை இடுவது தவறு.

நதியா தனக்கென்று ஒரு முத்திரைப் பதித்தவர்.

இதில் எப்படி ஜொலிப்பார் என்பதனை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும். இன்னும் நதியாவைப் பார்க்க முடியவில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s