தாமதம் வேண்டாமே ! ! !

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா……

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா என்ற இந்த வசனம் என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்த்து. இதை ரஜினியின் சூப்பர் வசனமாக மட்டும் நினைத்தால் ஆஹா ! ! அருமை என்று விசில் அடித்து ஆடிக் கொண்டாடி இருப்பேன் சராசரி ரசிகையாக இருந்தபோது. அதையும் மீறி கொஞ்சம் லேட்டா போய் ஒரு விமானத்தை தவற விடும் வரை.

இது நடந்து நான்கு ஐந்து ஆண்டுகள் இருக்கும். ப்ளாகிட ஆரம்புத்தவுடன் சின்ன சின்ன விஷயங்களும் என் மனதில் மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்குவதை இந்த விஷயம் எனக்கு மிகவும் உணர்த்தியது…

காலம் கடந்தாலும் இது என் நினைவில் இருப்பதற்கு காரணம் என்ன என்றால் ஒரு தீபாவளி பண்டிகையை நான் தவற விட்டேன் என்பதாலோ…

லேட் இந்த வார்ட்தைக்கு தமிழ் வார்த்தை தாமதம், இதை மட்டும் பார்ப்போம் நாம்.

அன்றாடம் நம்ம வீட்டில் சின்ன சின்ன விஷயத்தில் இருந்து, பெரிய பெரிய கார்போரேட் கம்பனிகள் வரை இது சர்வ சாதரணமாக சொல்லப்டும் ஒரு வார்த்தை….

நாம் இதை தவிர்க்க வேண்டிய விஷயம். மிக சாதரண்மாக சொல்ல வேண்டுமானால் நாம் எழுந்திருக்க வைக்கும் வைக்கும் அலாரம் அடித்தவுடன் அலறி அடித்துக் கொண்டு எழுந்து இருக்க வேண்டியதில்லை ஆனால் தாமதம் ஆகுமே என்று ஒரு நொடி சிந்தித்தால் உடனே எழுந்துவிடுவோமே….

பஸ்சில் செல்வதாக இருந்தாலோ இல்லை சுயமாக வாகனத்தில் செல்வதாக இருந்தாலோ பத்து நிமிடம் முன்னாதாக கிளம்புவதால் வழியில் ஏற்படும் நெரிசலால் சிக்கி தாமதம் ஆவதை தவிர்க்கலாம்.

காலையில் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது, மெதுவாகப் பார்த்து செல்லவும் என்று சொல்லாம். ஆனால் பள்ளிக்கு லேட்டா போக கூடாது, சரியான நேரத்திற்கு செல்லவேண்டும் என்று சொல்லி வளர்ப்பது மிகவும் நல்லது.

பெற்றோர் அழைத்துச் செல்லும் பிள்ளைகளிடம் எந்த ஒரு காரியமாக இருந்தாலும், நேரத்திற்கு செல்ல வேண்டும், தாமதமாக செல்லகூடாது என்று சொல்லி வளர்ப்பது நன்று.

ஆரம்பித்து விட்டேன் எப்படி முடிக்க வேண்டும் என்று யோசித்தில் தான் இந்த தாமதம். இதை எழுத ஆரம்பித்து ப்ளாகிட தாமதம் ஆனதற்கு மன்னிக்கவும். தாமதம் வேண்டாமே என்று முடித்திடுகிறேன் மேலும் தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s