தவறுகள்-முடிவுகள்

முடிவுகள் எடுக்க நல்ல தருணம்

மனதில் அமைதி இல்லாதபோது முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டியதை தவிர்க்கவும்.

ஏதோ தவறு செய்ய நேர்ந்தாலோ, அல்லது தவறான காரியத்தின் வாயிலாக கற்ற பாடத்தை மனதில் நிறுத்தினால் போதுமானது. தவறுகளை திருத்திக் கொள்ள முடியும். ஆனால் நாம் கலவரப் பட்டு கழிக்கும் தருணங்கள் திரும்பவும் கிடைக்காது. ஒரு தவறு மேலும் பல தவறுகளைச் செய்ய நேரிடும்.

எப்போது ஒரு தவறினை மனதில் மிக ஆழமாக பதித்துக் கொள்கிறோமோ அப்போதே நாம் மேலும் பல தவறுகளை செய்ய ஆயத்தமாகிறோம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு பிரச்சனையை பலமாக மனதில் போட்டுகொள்வதால் நாம் பலவீனமடைகிறோம்.

பதறிய காரியம் சிதறும் என்பது போல, மனது அமைதி இல்லாத நேரம் நாம் எடுக்கும் முடிவுகள் எல்லாம் சமயத்தில் தவறானதாக இருந்துவிடும்.

சிறிது கலவரப்பட்ட நிலையில் இருக்கும்போது, நமது மனது கலங்க ஆராம்பித்து விடுகிறது. கலங்கிய நிலையில் இருக்கும்போது நம் மனது நம்மிடம் இருக்கும் நிறைகளை கடந்து வெறும் குறைகளை மட்டுமே கிளறி தூசி தட்டி எழுப்பும்.

பதறிய மனதில் அன்பான மனைவி, அழகான குழந்தைகள், இனிமையான இல்லம், சுவையான வாழ்க்கை என்று எல்லாவற்றையும் தவிர்த்து விட்டு கிடைக்காத கடனையோ, களவு போன பொருளைப் பற்றியோ, தவற விட்ட சந்தர்ப்பங்கள் இவை மட்டுமே சிந்திக்கும்.

இந்த தருணத்தில் எடுக்கப் படும் முக்கியமான முடிவுகள் கண்டிப்பாக தவறாகும் என்று சொல்லவில்லை, ஆனால் நல்ல பலன்களை குறைக்கும். ஆகையால் மனதினை அமைதியாக செயல்படும் போது மட்டுமே முடிவுகள் எடுக்க வேண்டும் என்று எப்போது மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்..

எப்போதும் மனதினை திறந்து வைத்திருத்தல் மிகவும் நல்லது, அடுத்தவரின் உபதேசங்கள், அறிவுரைகள், யோசனைகளைக் கேட்டு சுயமாக முடிவு எடுக்கவேண்டும். புதிய விஷயங்களை அறியவும், தெரிந்த விஷயத்தை அசைபோடவும், நமக்குத் தேவையான வேலைகளை மிகவும் நல்ல முறையில், இன்னும் பல நுனுக்கங்களுடன் செய்ய முடியும்.

தவறுகள் இன்றி நாம் நடக்க நாம் கடவுள் அவதாரம் இல்லை, கடவுள் அவதாரமாக நாம் போற்றபடும் பல அவதாரங்களிலும் தவறுகள் நடந்ததாகவே இருக்கிறது. மனித வடிவில் கடவுளே வந்தாலும் தவ்றுகள் என்பது இருக்கும்.

தவ்றுகள் திருத்திக் கொள்ளவே, தண்டிக்க அல்ல, ஆகவே தவறினில் இருந்து மீள நான் பாடம் கற்றேன் என்று இருப்பதே நன்று.

Advertisements

One thought on “தவறுகள்-முடிவுகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s