காவல்துறையின் கர்வம்

22-ஜூன், அபுதாபி

அழகிய அபுதாபியில் ஒரு அற்புதமான நிகழ்வு…

அபுதாபியில்  என்று இல்லை, சென்னையிலும் நான் சாதரணமாகவே போக்குவரத்து விதிகளைப் பெரிதும் மதிப்பவள். அது என் உடன் பிறந்தது, என் அன்னை போக்குவரத்து துறையில் பணி புரிந்ததால் எனக்கு சாலை விதிகளை மீறுவது பிடிக்காது. பிடிக்காது என்பதைவிட கடைபிடிப்பேன் என்று சொல்லலாம்.

நான் அபுதாபி வந்ததிலிருந்து நம்மளோட பக்க பலமான வாகனம் என்பது இல்லாமல் தவித்தாக தெரியவில்லை, ஏன் எனில் நான் தங்கி இருக்கும் இடத்திற்கும், அலுவலகத்திற்கும் நடந்து செல்லும் விதமாக அமைந்தது.

இருப்பினும் நான் பல க்ளையண்ட்களை கையாள்வதால், சில நாட்கள் வெளியில் பயணிக்க நேரிடும். அப்படித் தேவைபடும் போது நான் டாக்ஸி எடுப்பது வழக்கம்.

என்ன ஆச்சரியம், அற்புதம்னு சொல்லிட்டு எதுவும் இல்லையே என்று முனுமுனுப்பது தெரிகிறது.

எப்போதும் போல ஒரு க்ளையண்ட் அலுவலகத்திற்கு செல்வதற்காக ஒரு டாக்ஸிகாக காத்து இருந்தேன், ஒரு டாக்ஸி வந்தது, அந்த ஓட்டுனரோ தனது டாக்ஸியை சரியாக நிறுத்தாமல் கோனலாக அடுத்த வாகனம் செல்ல வழியின்றி நிறுத்தினார். நான் அவரை சரியாக நிறுத்தும்படி கூறும் நேரத்தில் பின்னர் வந்த காரிலிருந்தவர் ஒலி எழுப்பியதால், வேறு வழியின்றி நான் அந்த டாக்ஸியினில் ஏற வேண்டிய நிர்பந்தம்.

நான் அமர்ந்தவுடன் டாக்ஸி புறப்பட்டது, ஆனால் பின்னால் வந்த காரிலிருந்தவரோ விடுவதாகத் தெரியவில்லை. எங்கள் அருகினில் வந்து ஓட்டுனரை டாக்ஸியை நிறுத்தும்படி கூறினார், நிறுத்து, அல்லது காவல்துறைக்கு சொல்வேன் என்றார். இருப்பினும் டாக்ஸி ஓட்டுனர் நிறுத்தவும் இல்லை, நான் சொல்லிய திசையில் வாகனத்தைச் செலுத்தவும் இல்லை.

திரைப்படங்களில் வரும் சேஸிங்க போல விடாது துரத்தினார், அந்த காரில் இருந்த நபர். அரபு நாட்டவரின் உடையில் இருந்த்தால் அவர் இந்த நாட்டவராக இருக்க்கூடும். எதற்காக துரத்துகிறார் என்று எனக்கு தெரியாமல் விழித்தேன். டாக்ஸியை நிறுத்தச் சொன்னாலும் நிறுத்தாமல் சென்றான்.

நான் இருந்த டாக்ஸி ஓட்டுனருக்கு வயிற்றினில் புளி கரைத்தது, எனக்கும் தான். என்னடா இது அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதே, இந்த பயணம் எங்கு முடியப்போகிறது என்ற கவலையும் வந்தது.

கடைசியாக டாக்ஸி ஓட்டுனர் வந்து மாட்டிக்கொண்டது ஒரு முட்டுச் சந்தில். அப்பாடா என்று இருந்தது, உடனே டாக்ஸியில் இருந்து இறங்கினேன். சற்றும் மனம் தளாராத விக்ரமாதித்தன் மாதிரி தொடர்ந்து வந்த அந்த காரில் இருந்தவர் சிரித்த படி தன்னுடைய காரினில் அம்சமாக அமர்ந்திருந்தார். அவர் பார்த்த பார்வை எங்கேடா போவே என்பது போல இருந்தது.

அவர் அந்த ஓட்டுனரை அருகினில் வரும்படி செய்கைச் செய்தார். நான் என்ன செய்வது என்று அறியாமல் விழித்தேன். இருவருமே வேற்று நாட்டவர்கள். திக்கு தெரியாத திசையில் மாட்டிக் கொண்டோமோ என்று நினைத்தபடி வேடிக்கைப் பார்த்தேன். (வேறு என்ன செய்ய முடியும்). ஓட்டுனரை தன்னுடைய ஓட்டுனர் உரிமம்  எடுத்துவரச் சொன்னார்.

அரபு நாட்டவர் தன்னுடைய ஐடி கார்டை எடுத்து காட்டினார். தான் ஒரு காவல் துறை அதிகாரி என்று அப்போதுதான் எனக்கு சுவாசமே வந்தது, இருந்தாலும் ஒரு மெல்லிய பயமும் இருந்தது. தேவையில்லாமல் எதாவது பிரச்சனையில் சிக்கிவிடுவோமோ என்று.

அவர் அவனது உரிமத்தை தன் கையில் வைத்துக் கொண்டு, நீ புறப்படு, பிறகு வந்து அபராதத்தை கட்டி பின்னர் உரிமத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அந்த ஓட்டுனருக்கு சர்வ நாடியையும் அடங்கச் செய்துவிட்டார்.

ஓட்டுனரோ என்ன செய்வது என்று தெரியாமல், என்னிடம் வந்து நீ அவரிடம் பேசு என்றார். நான் ஏற்கனேவே பயந்து இருக்கிறேன், உன்னால் எனக்கும் இப்போது பிரச்சனை, அப்போதே நிறுத்தி இருந்தால் இந்த பிரச்சனை இல்லை என்று அவனிடம் கோபத்தக் காட்டி, அந்த காவல் துறை அதிகாரியிடம், இவனை மன்னித்துவிடுங்கள், ஏதோ தெரியாமல் செய்து விட்டான் என்று.

அவன் எப்படியோ எல்லாம் வண்டியை ஓட்டினான், எனக்கு இந்த அபுதாபியின் அத்தனை வீதிகளும் அத்துபடி எங்கு போக முடியும். நிஜமாக அவரது வேகம், தன்னுடைய தொழிலில் உள்ள நேர்மையை கண்டு வியந்தேன்.

நான் இவனுக்காக பின்னால் துரத்தி வரவில்லை, உனக்காக தான் வந்தேன், இவனது போக்கு சரியில்லை, இவனை மன்னிக்கமுடியாது. யோசித்து பார், நீ இந்த வண்டியில் ஏறுவதற்கு முன்னர் என் வண்டியோ அல்லது வேறு வண்டியோ வந்து இடித்து இருந்தால் என்ன ஆகி இருக்கும். உன் வாழ்க்கை அல்லவா முடிந்து இருக்கும், இங்கு வாகன்ங்கள் 80 கி.மீ வேகத்தில் வரும், அவனுக்கு ஒன்றும் ஆகாது, மிஞ்சினால் அவனது வாகனத்திற்கு கொஞ்சம் சேதம் வரும், அதுவும் அவனக்கு ஒரு பெரிய விஷயமில்லை.

உனக்காகவே நான் வந்தேன். எங்கள் நாட்டில் நிம்மதியாக எல்லோரும் இருக்கவேண்டும், ஆபத்து இல்லை என்று ஆனந்தமாக இருக்கவேண்டும். உன்னுடைய பாதுகாப்பு மிகவும் முக்கியம். இந்த நாட்டிற்கு வந்தால் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அனைவரும் நினைக்கவேண்டும். இவன் இன்று டாக்ஸி செலுத்தியவிதம் என்னை  கலவரப்படச் செய்தது என்றார்.

ஒரு நல்ல காவல்துறை அதிகாரியைப் பார்த்த சந்தோசம் எனக்கு, இருந்தாலும் அந்த ஓட்டுனரின் நிலைமைப் பார்த்தால் பரிதபமாக இருந்தது. அவனுக்காக பேசுவதா இல்லை என் பாதுகாப்பு கருதும் இவரிடம் அவனை மன்னிக்க எப்படி சொல்வது என்று யோசித்தேன்.

ஓட்டுனரிடம் அந்த காவல்துறை அதிகாரியிடம் மன்னிப்பு கேள், நானும் பேசுகிறேன் என்றேன்.

ஓட்டுனர் அவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு அரபு மொழியில் எதோ பேசினார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஓட்டுனர் என்பதால் அவருக்கும் அரபு மொழித் தெரிந்து இருந்தது போல இருக்கு…

ஓட்டுனரோ மண்டியிட்டபடி இருந்தார். தான் இதயபூர்வமாக மன்னிப்பு கேட்பதாக கூறினார். என்னைப் பார்த்து, நீங்கள் என்னுடன் வாருங்கள் உங்களை பத்திரமாக விடுகிறேன் என்றார்.

அப்போதும் அந்த காவல் துறை அதிகாரி அவனை மன்னிப்பதாக தெரியவில்லை. எனக்கு தாமதமாவதால், அவரிடம் சென்று எனக்கு அலுவலகத்திற்குச் செல்லவேண்டும் என்றேன், அந்த அதிகாரியோ நீ இந்த டாக்ஸியில் செல்ல அனுமதிக்க மாட்டேன், என்னுடன் வா நான் உன்னை உன் அலுவலகத்தில் விட்டுவிட்டுச் செல்கிறேன் என்றார். வேறு வழியின்றி அவரது படகு போன்ற காரினில் அமர்ந்தேன். பயம் இப்போது கொஞ்சம் அதிகமானது. இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

உனக்கு தான் ஆபத்து அதிகமாக இருந்து இருக்கும், பயந்து இருப்பாய் இந்த வண்டியில் வந்தபோது, நீ சொல்லு அவனை மன்னிக்கலாமா என்று கேட்டார். ஐயா அவன் செய்தது தவறு தான், ஆனால் இந்த முறை மன்னிக்கவும். என்னால் ஒருவன் தண்டனைப் பெற்றதாக இருக்க்கூடாது. இவனுக்காக இல்லை, இவன் குடும்பதினரை மனதில் கொண்டு சொல்கிறேன். இவனது இரண்டு மாத வருமானத்தை நீங்கள் அவனுக்கு அபராதமாக விதித்தால் இவனது குடும்பம் தவிக்கும் என்பதால் மன்னிக்கவும் என்று கூறினேன்.

நீ மன்னிக்கலாம் என்று சொல்வதால் இவனை மன்னிக்கிறேன். என்னால் யாரும் மனக் கஷ்டத்துடன் செல்லகூடாது என்று கூறிய போது அவருள் இருந்த மனித நேயத்தைக் கண்டேன்.

பிறகு அவர் என்னை என் அலுவலக வாயில் வரை விட்டுவிட்டு, ஏப்போது எந்த பிரச்சனை என்றாலும் 999க்கு போன் செய்யவும் என்றார். அந்த நல்ல மனிதரிடம் ஒரு ஆட்டோகிராப் வாங்கவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அவரிடம் அவரது பெயரை மட்டும் கேட்டு விடை பெற்றேன். சையது – என்ற அந்த மனிதருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்….

ஆறுதலாக பேசியவிதமும், அட்டகாசமாக கதற வைத்த விதமும் சூப்பர்.

நம்ம நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் பல நல்லவர்களை சந்தித்து, பல பிரச்சனைகளை சமாளித்து இருக்கிறேன். இருந்தாலும் எனக்குள் ஏன் நம்ம நாட்டில் இது போல ஒரு நபரை சந்திக்க முடியவில்லை என்று ஒரு சிறிய ஏக்கம் வந்தது.

காவல்துறையின் கடமை கண்ணியம் கட்டுபாடு என்பதனை திரைப்படங்களில் மட்டுமே பார்த்த எனக்கு இது ஒரு புல்லரிக்கும் சம்பவமாக இருந்தது…

நம்முடைய தேசத்திலும் இது போல நடந்தால் காவல்துறையைப் பற்றி நாங்களும் கர்வம் கொள்வோம்.

Advertisements

6 thoughts on “காவல்துறையின் கர்வம்

  1. அழகான பொண்ண பார்த்தா காவல்துறை உதவி தானா வரும்..ஹா..ஹா..சும்மா !!
    அவருக்கு எனது வாழ்த்துகள்!

    • உண்மையா சொல்லனும்னா அந்த காவல்துறை நண்பர் தனது பெயரை கூட சொல்லவில்லை என்பது எனக்கு சில மாதங்கள் கழித்து தான் தெரிந்தது.

      I thought Syed is his name and SAAED is the name they call the police department in Abu Dhabi.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s