ராவணன்

அபுதாபி , 18 ஜுன் 2010

ராவணன் மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பு  நேற்றே வெளியானது. ஆஹா மணிரத்தனம் படம். மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், திருடா திருடா, இருவர், ரோஜா என்று பல நல்ல படங்களைத் தந்தவர் ஆச்சே, அதுவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் மணிரத்னத்தின் தமிழ் படம் என்பதால் சசிகுமார் கேட்டவுடன் இரவு காட்சி ஆனாலும் பரவாயில்லை என்று சொன்னேன்.

எந்தப் படத்திற்கும் கதைக்காக சிரமப் படாதவர் தான் இந்தப் படத்தின் இயக்குனர். ஒரு நூலின் நுனியாக ஒரு கதைக் களத்தைத் தேர்ந்து எடுத்து அதை வைத்து ஒரு சேலையே தரிக்கும் வித்தை தெரிந்ததால் இன்னும் பிரபல இயக்குனர் வரிசையில் இருவது ஆண்டுகளாக இருக்க முடிகிறது என்று நினைக்கிறேன்.

ஏற்கனவே தளபதியில் மஹாபாரதத்தின் கதையில் வெற்றி கண்டவர். இப்போது இராமாயணத்தை தேர்வு செய்துள்ளார். இதற்கு எதற்கு இத்தனை ஆண்டு இடைவெளி என்று தான் தெரியவில்லை.

ராவணனின் நூல் (கதை) என்ன சீதையை கடத்தியது, ராமன் அவரை மீட்பது தான்!

ஐஸ்வர்யா ராயுடன் பல வெற்றிப் படங்களைத் தந்தவர் தான் நம்ம இயக்குனர். இப்போதும் ஐஸ்வர்யா பச்சனிடம் அதே அழகு  ஆஹா என்ன அழகு, இவரின் அத்துனை அழகையும் மொத்தமாக காண்பித்து உள்ளார். ராமனின் நாயகியின் கதாபாத்திரத்தில் இன்று ராவணன் திரை கதையின் நாயகியாக நடிப்பிலும் தூள் கட்டி பறக்கிறார் ராகினியாக. விக்ரமிடம் சீறிப் பாயும் போதும் சரி, கடவுளிடம் பொருமுவதிலும், கடைசிக் காட்சியில் விக்ரம் மீது வரும் காதல் உணர்வை காட்டியவிதம் சூப்பர்.

ராவணன் நாயகன் விக்ரம் : கச்சிதமாக செய்துள்ளார், ஆழமான நடிப்பு என்று சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை ஆனாலும் அவரது பங்கினை சரியாக செய்துள்ளார்.

பிருத்வி ராஜ் நல்ல நடிகர் தான். ஆனாலும் கதைக்கு ஒட்டவில்லை. ஐஸின் நாயகனாக கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மலையாள தமிழில் எப்போதும் கத்திக் கொண்டு வருகிறார். டி.எஸ்.பி. தேவ், ஐஸ்வர்யாவின் காதல் கணவன்.

ராவணனின் தங்கையாக ப்ரியாமணி அய்யோ டா ! ! ! ஐஸ்வர்யாவையும் சாப்பிட்டுவிடுவாரோ என்று அவரது காட்சிகள் குறைக்கப்பட்டதோ ?? பருத்தி வீரன் நாயகி, பாசமான தங்கையாக சில நிமிடங்களே வந்தாலும் அதுவே படத்தின் நிறைவான காட்சிகளாக என் மனதில் நின்றது.

பிரபு – கும்பகர்ணனை நினைவுபடுத்துவதற்காக கதையில் சேர்க்கப் பட்டு இருந்தாலும், அவரது உடம்பு இருக்கும் அளவுக்கு நடிப்பில் அசத்தியுள்ளார்.

கார்த்திக் – பல ஆண்டுகளாக பார்க்காத காரணத்தினால் அவரது வருகை இதமாக இருந்ததாலும், மௌனராகம், அக்னி நட்சத்திரம் என அமர்களாமான தளம் தந்தவர் இந்தப் படத்தில் அனுமானாக சும்மா டம்மி பீஸாக்கி விட்டார் மணி.

ஏதோ அமர்களமாக வருவார் ரஞ்சிதா என்று எதிர்ப்பார்த்தால் ஒரு வரி வசனம் பேசினாரா என்று யாரவது சொல்லுங்கோ…

தங்கையின் சாவிற்கு காரணமானவனை பழிவாங்குவதாக சொல்லும்போது, அங்கு ஐஸிடம் ரியாக்‌ஷன் மிஸ்ஸிங். கடவுளுக்கு இனையாக கருதபடும் காதல் கணவன், ஒரு பெண்ணை கற்பழித்து அவள் சாவதற்குக் காரணமுமாகிறான் என்று கேள்விப்பட்டவுடன் வரும் ஏமாற்றம் எங்கே போச்சுங்கோ ?

தேவ் ராகினியைக் காப்பாற்றி போகும்போது அவரிடம் சந்தேகமாக பேசுவது மிக அபத்தம் என்றால் அதற்காக ஐஸ் ஓடும் ரயிலை  நிறுத்தி கீழே இறங்குவது எல்லாம் என்ன சொல்ல போங்க ! ! ! காதலில் கதை மறந்துட்டாங்கோ.

ராவணனின் ஹீரோ விக்ரமா? அல்லது ராமனாக வருவதாக கருதபடும் பிருத்வி ராஜை சொல்வதா? ஒரு பெண்ணை கற்பழித்து கொன்றவனை எப்படி ராமனாகவும் ஹீரோவாகவும் சொல்வது.

ராவணனாக சீயான் விக்ரம் வெளுத்து வாங்கி இருந்தாலும், அது என்ன பக் பக் பக் என்றும், டண் டனா டண் டனா என்று கஷ்டப்பட்டு யோசித்து எழுதிய வைர வசனம் – வசனம் எழுதியது நம்ம ஜெயா தொலைகாட்சியில் மற்றவர்களை வெகு சுலபமாக விமரிசிக்கும் ஹாசினியா? சினிமாவை பல ஆண்டுகளாக சுவாசித்து வரும் குடும்பத்தில் இருந்த வந்தவர், ஞானம் உள்ளவர் எப்படி ஒரு சூப்பர் ஹீரோவுக்கு இது மாதிரி வசனம் எழுதினார்… ஆதிவாசியாகவே இருந்தாலும் இது கொஞ்சம் அதிகமே. அவர் பேசிய வசனம் பக் பக் பக் மற்றும், டண் டனா டண் டனா வை தவிர வேறு எதுவும் என் நினைவில் இல்லை.

மைனஸ்

வசனம் : மொத்தமுமாக கொலை…

படத்தில் பிரபு, கார்த்திக், ப்ரியாமணி, ரஞ்சிதா என யாருமே நான்கு காட்சிகளுக்கு மேல் இல்லை.

ராகினியின் மீது மோகம் கொள்ளும் வீரா அதை சொன்னவுடன் கோபமோ வெருப்போ காட்டாமல் அதை அமோதிப்பதாக காட்டியது ! !

இந்தப் படத்தை எடுக்க ஏன் இரண்டு ஆண்டுகள் ஆனது ???

ப்ளஸ்

முக்கியமாக மணியின் திரைப்படங்கள் இருட்டான படமாக இருக்கும், ஆனால் இந்தப் படம் இயற்கை சூழலில் மிகவும் ரம்மியமாக இருந்த்து.

மாடர்ன் ராமாயணம் எடுக்க முடியும் என்பது….

ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம்,  சண்டை காட்சிகள், பாடல் காட்சிகள் என தொழில்நுட்ப விஷயத்தில் ராவணன்  மிரட்டியிருக்கிறது.

எது எப்படியோ ராவணன் கதாப்பாத்திரத்தின் கண்ணியம் காக்கப் பட்டுள்ளது.அடுத்தவன் மனைவியின் மீது ஏற்படும் காதலை வெளிப்படுத்தும் விதம், பழி வாங்க கொண்டு வந்த பாவையை சொக்கத் தங்கம் என்று அவள் கணவனிடம் சொல்லும் விதம் நன்றாக இருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.

இந்தப் படம் வெற்றி அடைந்தால் அதற்கான முழு காரணம் விக்ரம், ஐஸ்வர்யா,  மற்றும் ஒளிப்பதிவளராக தான் இருப்பார்கள்…. மணிரத்னத்தின் படங்களுக்குள் கதை, திரைக்கதை, காமெடி என்று எதிர்பார்த்தால் அது தான் காமெடிங்கோ…

Advertisements

2 thoughts on “ராவணன்

  • அன்பானவரே,

   தங்களைக் காண்பதே அரிதாகிவிட்ட நிலையிலும்,
   உங்கள் பள்ளியையும், உங்கள் ஊரையும்
   நான் காண வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காகவே
   கண்டிப்பாக பார்க்கிறேன்….

   அனு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s