சிங்கம் – சூர்யா 25வது படம்

27-மே-2010, வியாழன், அபுதாபி

சிங்கம் – ஆஹா சூர்யாவை இன்னொரு முறை காவல்துறை அதிகாரியாக பார்க்கப் போகிறோமே என்று வேகமாக என் நண்பர் மஹேஷ் சிங்கம் படம் பார்க்க போலாமா என்று அழைத்தவுடன் வருகிறேன் என்று தலையாட்டினேன். அதுவும் ரீலீஸ் சென்னையில் 28 அன்று தான், நாங்கள் ஒரு நாள் முன்னதாகவே பார்க்கப்போகிறோம் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சென்றேன்….

எப்பவும் என்னுடன் படம் பார்க்க வரும் என் நண்பர் சசியை மறந்தும்கூட சென்றேன் எனலாம்… மன்னித்துக் கொள்ளவும் சசி.

காக்க காக்க திரைப்படத்தில் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல், அசத்தலான உடல் அசைவுகளால் அசத்தியிருந்தார். மற்றுமொரு காவல்துறை அதிகாரி படம் எப்படி இருக்குமோ என்று ஒரு பயமும், ஏற்கனவே முதல் நாளே சுறாவைப் பார்த்து சுட்டுக் கொண்ட எங்களுக்கு, பார்க்க அருமையாக இருந்தது வித்தியாசமான விளம்பரங்கள், சன் தொலைக்காட்சியின் ஆர்ப்பாட்டமான விளம்பர யுக்தி ஒரு உந்துதலை ஏற்படுத்தியது உண்மையே! ! ! ஒரு சபாஷ் சொல்ல வேண்டும் விளம்பர துறையினருக்கு….

இயக்குனர் ஹரியின் இயக்கத்தில், சூர்யாவின் 25வது படம் – சிங்கம். மிடுக்கான அதிகாரியாக வந்து ஏற்கனவே அசத்தியவர் தான் இந்த துரைசிங்கமாக வரும் ஹீரோ சூர்யா. அழகான சூர்யா, உருட்டும் விழிகள், காவல் துறைக்கான மிடுக்கு, நேர்மையான, துணிச்சலான,  என அத்தனை அம்சங்களும் பார்த்தது ரசித்தது தான் ஆனால் மிரட்டும் மீசை வித்தியாசம் மீசை மட்டும் இல்லை, கதையும் தான். டுப் டுப் என்று சுட்டு விட்டு செல்லாமல், சிங்கம் போல அடித்து உதைக்கிறார்.தூம் தாம் என்று என்று தூக்கிப் போட்டு, புரட்டி எடுக்கிறார்.

அழுத்தமான அதிரடியான வசனம், அனல் பறக்க பேசுகிறார். அடிதடியில் சீறிப் பாய்கிறார் சூர்யா. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என படம் முழுக்க சூர்யாவின் திறமை. சிங்கம் விஜய் படமோ என எண்ணத் தோன்றுகிறது.

மாஸ் ஹீரோவாக நல்ல முயற்சி. படம் முழுதும் சூர்யா சூர்யா சூர்யா மட்டுமே. தூத்துகுடியில் பணி புரியும் அதிகாரியாக வருகிறார் சூர்யா, அதற்காக தான் இந்த மீசையோ??

படத்தின் நாயகி – அனுஷ்கா ! அருமையாக நடிக்கிறார் என்றால், பாடல் காட்சிகளில் அய்யோ என்று சொல்லும் அளவுக்கு ஆடை குறைப்பு.

சற்று உயரமான நடிகை அதுவும் சுமாரான உயரமுடைய நம்ம சிங்கத்துடன் ஒன்றாக இணைந்த மாதிரி ஒரு காட்சிகூட என் நினைவில் இல்லை. இவர் வந்தாலே பாடல்கள் வருகிறது. ஹீரோயினுக்கான அப்பாவாக சில காட்சிகளில் வந்து போகிறார் நாசர்.

பெயருக்கு ஒரு வில்லனாக இல்லாமல் பிரகாஷ்ராஜ். வெகு நாட்களுக்கு பிறகு கொடுமையான வில்லனாக இருப்பார் என்று எதிர்பார்த்தால் சவால் விடுகிறார், மிரட்டுகிறார், கோபம் என்று வந்தாலும் சிங்கத்திடம் அவமானபடும் போதும் காட்டும் நடிப்பு ஆஹா அருமை… ஆனாலும் வில்லனிடம் இருக்கும் ஒரு இரும்பு பார்வை இல்லையோ. இல்லை சூர்யாவால் அப்படி தோன்றுகிறது. அனைத்துக் காட்சிகளிலும் டேய் டேய் என்று மிரட்டியே காலம் போகிறது. படத்ததிற்கு பலமாக வலம் வருகிறார்.

நகைச்சுவை என்று கதறியிருக்கிறார் விவேக். இந்த நகைச்சுவையை சாமி படத்தின் நகைச்சுவையை விட சூப்பர் என்று சொல்லியதை வேண்டுமானால் நல்ல நகைச்சுவை என்று எடுத்துக் கொள்ளலாம்.. சரக்கு இல்லை என்றால் அமைதியாக குணச்சித்திர வேடங்களில் நடிப்பது மேல்.

முதல் காட்சியிலிருந்து படம், குறிப்பாக வேகமான திரைக் கதை கட்டிப் போட்டு விட்டது. திரைகதை, துடிப்பான நாயகன், சுவாரசியமாக சில காட்சிகள், ஆர்ப்பாட்டமான இசை என்று வெற்றிக்கான அத்தனை அம்சங்களுடன் வந்த பொழுதுபோக்கு படம்.

சன் மூவிஸ் சூர்யாவின் சிங்கம் கர்ஜிக்கிறது…

சிங்கம் சூர்யா in and as விஜய் படம் முடிந்தவுடன் மனதில் தோன்றியது

Advertisements

4 thoughts on “சிங்கம் – சூர்யா 25வது படம்

  1. hi, padam parththathai veeda ungal vemarsanam padikum poothu surya ennum azhagaka therikiraar.ethuvarai parkatha police sengam super kathaiyen vegam thirumpa parkka thoonrum ungal vemarsanam padithavudan.thz

  2. Pingback: 2010 in review « MAIDENPOST

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s