உறவுகள் தொடர்கதை

உறவுகள் தொடர்கதை ! !

உணர்வுகள் சிறுகதை ! !

ஒரு கதை என்றும் முடியலாம்,

முடிவிலும் ஒன்று தொடரலாம்……

நல்ல வரிகளுக்கான ரசனையுடன் நான் கேட்கும் பாடல்களில் ஒன்று தான் இது….

என்னுடைய பதிவுக்கும், இந்தப் பாடல் வரும் நேரமும், காலத்திற்கும், திரைப்படத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை. ஆம், உறவுகள் பலவிதம் அதனை நான் அலசி ஆராய நினைத்தேன்…

உறவுகள் புனிதமானவை, இன்றைய காலகட்டத்தில் உறவுகள் சிதைந்து போவதற்கான காரணத்தினை ஆராய நினைத்தேன்….

உறவுகள் நம் விருப்பு வெருப்புகளுக்குக் கட்டுபடாதவை… இறைவனின் அற்புதமான படைப்பில் வரும் மனித இனத்தின் இன்றியமையாத்து உறவுகள்…

அம்மா, அப்பா, அக்கா- தங்கை, அண்ணன் – தம்பி, மாமன் – மாமி, சித்தி – சித்தப்பா என்று நாம் கேட்காமல் வரும் உறவுகளும் சரி, கணவன் – மனைவி அறிந்தும் அறியாமலும் போது வரும் உறவுகளாயினும் அதில் இருக்கும் ஆனந்தம். சிலருக்கு சுவையான அனுபவம், சிலருக்கு சுகமான பாரம்.

இன்று குடும்ப விழாக்களில் மட்டுமே உறவுகள் கூடிடும் நிலை. உறவுகள் ஒன்றாக கூடி வாழ்ந்தாலும் பிரிந்து வாழும் நிலை. ஒரே வீட்டினில் அன்னியரைப் போல் வாழும் பல குடும்பங்களை நான் கண்டு இருக்கிறேன்….

காலை பள்ளிக்குச் செல்ல எழுந்திருக்கும் குழந்தை, பள்ளி பாடம், ட்யூஷன் என்று இருந்த காலம் போய், திங்கள் பாட்டுடன் கராத்தே, செவ்வாய் நடனப் பயிற்சியுடன் டென்னிஸ் பயிற்சி, புதன் ஸ்கேட்டிங், நீச்சல், யோகா என்று ஒரு பட்டியலே இருக்கும்….

காலையில் செல்லும் பிள்ளை உணவு உண்ணும் நேரமும், இரவு தூங்கும் நேரமும் தான் வீட்டினில் இருப்பர். இங்கு எங்கு அத்தையும், மாமனையும், சித்தப்பனையும் அறியும்?

இப்படி இருக்கும் இயந்திர வாழ்க்கையில், என்னுடன் பணிபுரியும் சக நண்பரின் உறவுகளை நினைத்துப் பெருமிதமாய் இருந்தது. அவருக்கு இரண்டு சகோதரிகள், அவரோ நாடு கடந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் இளைஞர். தன் குடும்பத்தினை தன் அன்பினால் தன் சுண்டு விரலில் வைத்துள்ளார் என்றே சொல்லவேண்டும். அன்றாடம் அவரது சகோதரிகளின் அழைப்பும், அதில் ஆர்வத்துடன் கேட்கும் அவரது பண்பும், ஆஹா என் கண்ணே பட்டுவிட போகிறது.

பெரும்பாலும் அவரது அத்துனை உறையாடலையும் கேட்கும் வாய்ப்பு, அப்படியே இல்லையென்றாலும் அவரே கூறி விடுவார்.

ஓரு நாள் அவரது சகோதரியின் மகன் படிக்காமல் எதோ படம் பார்க்க சென்றுவிட்டான் என்றும், அவன் படிப்பதற்கு இவர்தான் ஒரு தீர்வு கூறவேண்டும் என்று ஊரில் இருந்து ஒரு பஞ்சாயத்து. சரி சரி நான் அவனிடம் பேசுகிறேன் நீங்கள் யாரும் இதைப் பற்றி பேசாதீர்கள் என்று கட்டளையிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

விடலைப் பருவத்தில் இருக்கும் அந்த சிறுவனை யாரவது ஏசிவிட்டால், அவனது வாழ்க்கை வேறு திசையில் போக்க் கூடும் என்பதால் என்று பின்னர் அறிந்துக் கொண்டேன்.

அந்த சிறுவன், ஒரே படத்தை இருமுறைப் பார்த்தாக புகார்வர, அதைப் பற்றி சிறிதும் கண்டுக் கொள்ளாமல், நீ எப்போதும் தொலைகாட்சிப் பெட்டிமுன் இருக்கிறாய், இன்று நீ படிக்க வேண்டிய நான்குப் பாடங்களை படிக்கவில்லை என்றால், நாளை முதல் கேபிள் இனைப்பு துண்டிக்கப் படும், இதை யாரும் மாற்ற இயலாது, நீ இப்போது முதல் படிக்க ஆரம்பிக்கவும், மாலை நான் பேசுகிற போது நீ பாடங்களை ஒப்பித்திருக்க வேண்டும் என்று சொல்லவும், சரி என ஒத்துக் கொண்டதுடன் ஒப்பிக்கவும் செய்தான்.

இன்று தேவைக்கும் பெருமைக்கும் மட்டுமே உறவுகள் வேண்டும் என்பது அத்தனை சரியல்ல. இன்றைய விஞ்ஞான தொழில்நுட்பத்தில் தூரம் ஒரு பொருட்டல்ல என்பதனை என்னுடைய நண்பர் மூலம் அறிந்துக் கொண்டேன். தொலைத் தொடர்பு வசதிகள் சர்வ சாதாரணமாகி விட்டதால் உறவுகளின் தொடர்புகளை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தில் அன்பினைகூட ஃபாஸ்டாக சொல்ல வேண்டும் அதே ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில்….

நம்மில் பலரின் குழந்தைகளுக்கு எத்துனைப் பேர் உணவினை அன்புடன் பிசைந்து ஊட்டுகிறோம், என் பிள்ளைக்கு சாதம் பிடிக்காது, அவனுக்கு பிஸ்ஸா தான் பிடிக்கும் என்றும், அவளுக்கு பர்கர் தான் பிடிக்கும் என்கிறோம்.

நினைத்துப் பார்க்கிறேன் என் தாய் சாதத்தில் சாம்பார் ஊற்றி கலந்து தரும்போது அதில் இருக்கும் சுவை, வெறும் சாதாமும் சாம்பாரின் சுவை மட்டும் அல்ல, அதில் அவளின் அன்பை சுவைத்த்தினையும், அதை அவள் ரசித்த அழகினையும் ஆஹா என்ன அருமை.. மா அந்த சாம்பார் சாதம் வேண்டும் எனக்கு ! !

உறவுகள் புனிதமானவை – உதிரம் கொண்டு வரும் இதயம் போல ஒரு உறவும் இல்லை – ஆம் அன்னையை விட மேலானதொரு உறவு இந்த(இந்திய) மண்ணில் இல்லை எனலாம்.

ஆனால் இன்று உறவுகளின் புனிதம் காக்கபடாமல் இருக்கிறது. எதோ நம் தேவைக்கும், வசதிக்கும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். அதுவே நல்ல உறவு என்றும் வாழ்கிறோம்.

இன்றைய அதிவேக உலகில் உறவுகள் பெரும்பாலும் மேலோட்டமாகவே உள்ளது… ஆத்மார்த்தமாய், அன்பாய், அழுத்தமான உறவுகள் என்பது ஏட்டினில் மட்டுமே, காரணம் இந்த நெட்டோ என்றுகூட நினைப்பதுண்டு.

முகமறியா மனிதரிடம் மணிக்கணக்காய் பேசிட முடியும், நான் அறிந்த எனது உறவுகளிடம் ஐந்து நிமிடம் சிரித்துப் பேசிட நேரமில்லை, உறவுகள் சிதையாமல் இருக்க சிந்தியுங்கள்.

நட்பை நேசியுங்கள், உறவுகளை மதியுங்கள்

உறவுகள் உணர்வுப் பூர்வமானதா?

தொடரும்….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s