சிறிய சம்பவங்களை/நிகழ்வுகளை மறக்கவும் மன்னிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
யுதிஷ்டிர மாஹாராஜா மன்னிப்பதைப் பற்றி குறிப்பிட்டுள்ளது என்னவென்றால்,
மன்னிப்பு என்பது ஒரு பண்பு,
மன்னிப்பு என்பது ஒரு வகையான ஒழுக்கம்,
மன்னிப்பு என்பது ஒரு தவம்,
மன்னிப்பு என்பது ஒரு தியாகம்,
மன்னிப்பு என்பது ஒரு வேதம்,
மன்னிப்பு என்பது ஒரு புனிதமானது,
மன்னிப்பு என்பது ஒரு உண்மை, மதம், கடவுளைப் போன்றது.
மன்னிப்பதால் மட்டுமே உலகம் தொடர்ச்சியாக சுழன்று கொண்டிருக்கிறது. மன்னிப்பதற்கு மனிதர்கள் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அழியா புகழும், சந்தோசமும் பெறமுடியும்.
“ பிரியமான திரௌபதியே, ஆன்மிக உணர்வு, உண்மை, சத்தியம், அறிவு, அனைத்துமாகி இருக்கும் இதனை நான் எவ்வாறு நிராகரிக்க முடியும்?
இந்த உலகம், மற்றும் இறைவனின் உலகமும் மன்னிக்கும் மனம் இருக்கும் மனிதருக்கே. மன்னிப்பது என்பது அனைத்திற்கும் மேலானது” என்று கூறினார்.
சிறிய சம்பவங்களை/நிகழ்வுகளை மறக்கவும் மன்னிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும், ஏன் எனில் இரு வேறு மனிதர்கள் ஒன்றாக ஒரு இடத்தில் இருக்க நேர்ந்திடும் போது, அங்கு கண்டிப்பாக கருத்து வேறுபாடுகளுக்கும், தவறாக புரிந்து கொள்வதற்கும் இடம் உண்டு…..
இந்த பதிவினை தவறாக புரிந்துகொள்ளாமல், பிழை இருப்பின், மன்னிக்க பழகிக் கொள்ளுங்கள்….
good message to one. difficult to practice because of the bitterness of some events turn our life upside down. difficult to digest/swallow. wish i could practice
உண்மை எப்போதுமே கசக்கும்…
யாராவது ஒரிருவர் முயற்சி செய்யட்டுமே என்று இனையத்திலிட்டது ! !
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை…
முயற்சி திருவினையாக்கும்……