ஏன் வேதனை ???

நாம் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட நாம் வேதனைப் பட்டுக் கொண்டு, நம்மை சுற்றி இருப்பவர்களையும் காயப்படுத்துவோம். அதற்கான காரணத்தை அறியாமல், ஆராயமல், அடுத்தவரின் மீது பழி போட்டுத் திரிவோம்…

உன்னை அறியாமலோ, உன் அனுமதியின்றி உன்னை யாரும் காயப்படுத்தமுடியாது.

ஆப்ரஹம் லிங்கன் அவர்கள் முதன் முறையாக தனது ஜனதிபதியாக பதவி ஆரம்ப விழா உறையை துவக்கியபோது, கூட்ட்த்தின் நடுவில் ஒரு மனிதர் எழுந்தால். அவர் ஒரு மிகப் பெரிய செல்வந்தர். மிஸ்டர் லிங்கன், நீங்கள் மறக்க்கூடாத ஒரு விஷயம் தங்களது தகப்பனார் என்னுடைய குடும்பத்தாருக்கு காலணிகளை செய்து வந்தார் என்று அவர் கூறினார். அந்த சபையில் குழுமியிருந்த அனைவரும் நகைத்தனர், அவர்கள் அனைவரும் ஆப்ரஹம் லிங்கனை முட்டாளாக்கியதாக நினைத்தனர்.

ஆனால் ஆப்ரஹம் லிங்கனோ…. மன உறுதியானவர், இவரை மாதிரி மக்கள் இயல்பான மனபாங்குடன் பிறந்தவர்கள் வெகுசிலரே.

ஆப்ரஹம் லிங்கன் அந்த செல்வந்தரை நோக்கி, ஐயா, தங்கள் குடும்பத்திற்காக என்னுடைய தகப்பனார் காலணிகளை செய்து வந்தார் என எனக்கு தெரியும், உங்கள் குடும்பத்திற்கு மட்டும் அல்ல, இங்கு இருக்கும் பலரது குடும்பத்திற்கும் செய்து உள்ளார். ஏன் எனில் அவர் ஒரு அமைப்பாளார், அவரை மாதிரி காலணிகளை செய்ய கூடியவர்கள் வேறு யாரும் இல்லாத காரணத்தினால். அவை காலணிகள் மட்டும் அல்ல, அவற்றில் அவரது ஆத்மாவும் கலந்து இருக்கிறது.

அவற்றில் எதவது குறை/கோளாறு இருக்கிறதா? இருந்தால் என்னிடம் கூறுங்கள், எனக்கும் காலணிகள் செய்ய தெரியும். எதாவது குறை இருந்தால், நான் தங்களுக்காக வேறு ஜோடி காலணிகளை செய்து தருகிறேன். ஆனால் எனக்கு தெரிந்தவரை எனது தகப்பனார் செய்த காலணிகளில் இதுவரை யாரும் ஒரு குறை கூறியது இல்லை. அவர் ஒரு சிறந்த மேதை, சிறந்த சிந்தனையாளர்.

நான் எனது தந்தையை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். அவரது மகன் என்பதால் நான் கர்வபடுகிறேன் என்றார்.

அந்த மேல் சபை முழுக்க ஸ்தம்பித்துப் போனது. அவர்களால் ஆப்ரஹம் லிங்கனை புரிந்துக் கொள்ள முடியவில்லை. என்ன மனிதர் என்று உறந்துபோனார்கள். அவரை அவரது தந்தையாரின் தொழிலினால் காயப்படுத்தலாம் என்று நினைத்தனர் அந்த சபையில் கூடியுருந்த மனிதர்கள், ஆனால் ஆப்ரஹம் லிங்கனோ தனது தந்தையின் தொழிலின் பக்தியின் காரணத்தால், தான் பெருமை படுவதாக கூறி எல்லோரையும் சமயோசிதமாகச் செயல்பட்டு தானும் பெருமைகுள்ளானர்.

ஒரு நாட்டின் ஜனாதிபதியை தலைகுனிய வைக்க முற்படும் மனிதர்கள் முன்னால் நம்மை போன்ற சாமனியர்களை என்ன செய்யமுடியும்?

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் :

உன்னை அறியாமலோ, உன் அனுமதியின்றி உன்னை யாரும் காயப்படுத்தமுடியாது. அடுத்தவரின் எந்த அபிப்பிராயமும் உங்களையும் வேதனைபடுத்த முடியாது. ஆனால் அதை நாம் அனுகும் முறையினால் மட்டுமே காயமும் வேதனைகளும்….

நம் அனுகுமுறையை மாற்றினாலே போதுமே….

மேலும் ஒரு நல்ல அனுகுமுறையுடன்….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s