ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நூறு நாட்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நூறு நாட்கள்:-

இந்தியாவை விட்டு பறந்து இன்றோடு நூறு நாட்கள் ஆகிறது. இதுல என்ன விசேஷம்னு இனையத்தில் போடுவதற்கு என்று யோசிக்காதீர்கள் நண்பர்களே. இருக்கே அதனால் தானே இந்த பதிவு….

ஆம் இந்த அபுதாபி வாழ்க்கை முறையினால் எவ்வளவு மாற்றங்கள் எனக்குள். ஒன்றா இரண்டா?…

எதை முதலில் சொல்வது என்று யோசித்த நொடியில் மனதில் தோன்றியது. நான் நூறு நாட்களாக வீட்டின் நினைவில் வாடாதது தான். ஆம் ஹோம்-சிக் கொஞ்சமும் இல்லை.

இதற்கு முன்னர் சிங்கப்பூரில் ஒரு வருட காலம் தங்கியது மட்டுமே பெரிய பிரிவு என்று சொல்லலாம். மற்றபடி வீட்டிற்கு மாதம் ஒருமுறையோ அல்ல இருமுறையோ செல்வது வழக்கம். கொஞ்சம் ரீ-சார்ஜ் செய்துக் கொள்ள செலவிட்ட பணத்தைச் சேமித்து இருந்தால், மேலும் ஒரு தங்கைக்கு கல்யாணம் பண்ணலாம்…. ஹி ஹி இன்னொரு தங்கை இல்லாததால் நான் வார விடுமுறையில் சென்னை பயனிக்க உதவியது. அப்போது இல்லாத நெருக்கம் என் உறவுகளுடன் இப்போது இனையத்தின் வாயிலாக உணர்கிறேன்.

நல்ல மாற்றம் – உறவுகளுடனான நெருக்கம். ஒரு நாளில் ஒரு முறையாவது என்னுடன் பிறந்தவர்களுடனும், பிள்ளைகளுடனும், என் அம்மாவிடமும் பேசிட வேண்டும். இதற்கு முன்னர் டாடா கொடுத்த இலவச ரோமிங் கால்கள் இருக்கும் வரை நான் அழைத்து பேசுவேன்..

அபுதாபி வந்ததால் என் அம்மாவும் இண்டர்னெட் வழியே என்னுடன் பேசுகிறாள். ஆஹா மகிழ்ச்சி என்று சொல்வார்களே அது இதுதானோ (தன் மகனை சான்றோன் என்ற திருகுரலுக்கு மறுகுரல் எழுதிட மனது துடித்த்து). இத்தனை நாட்கள் உன்னை முட்டாளாக வைத்து இருந்துவிட்டோமே என்று வருந்தினேன். மொபைலில் அழைத்துப் பேசிவதைக் காட்டிலும், யாஹூவும், கூகிளும் கொடுக்கும் இனையத்தின் வழியே வீடியோ சாட்டிட, நெருக்கம் கூடுகிறது.

இப்போது நானாக தொலைப்பேசியில் அழைத்தால் கூட, நான் ஆன்லைனில் வருகிறேன் என்று சொல்லும் அளவிற்கு தேர்ச்சிப் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

கோபத்தின் மறுபெயர் – என்னுடையது தான். இங்கு வந்தபின் போயிடுச்சுனு சொன்னா நம்பமாட்டீங்க. எனக்கும் பொய் சொல்ல மனசு வரலை. காரணமில்லாமல் வரும் கோபம் இப்போது ஏதோ காரணத்திற்காக மட்டுமே வருகிறது. இதுவும் நல்ல மாற்றமே.

அலுவலக நேரம் : காலை 7.30 முதல் மாலை 3.30 வரை மட்டுமே. (மிகவும் நெருக்கடியான நேரம் மட்டுமே அலுவல் நேரம் நீட்டிக்கப்படும்.) இதைவிட சந்தோசம் எனக்கு ஏதாவது என்று யோசித்தால் எதுவும் இல்லை என்று தோன்றுகிறது.

சமைக்கத் தெரிந்தாலும் சமைத்துச் சாப்பிட்டது இல்லை, இந்த ஐந்து ஆண்டு ஐ.டி தந்த தனிமை வாழ்க்கையினால். காரணம் – அடியேன் மிகவும் இல்லை கொஞ்சம் சோம்பேறி.  சமைத்து சாப்பிடுவதற்கு நேரம் இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம்.

இந்தய எல்லைக்குள் இருக்கும்போது வேலை நேரம் காலை 9.00 மணி முதல் இரவு 10 மணி வரை அலுவலகத்தில் இருந்ததால், உணவை நானே சமைத்துச் சாப்பிடுவது என்பது இயலாத காரியம்.

கொஞ்சம் மலிவு விலையில் மதியச் சாப்பாடு அலுவலகத்திலும், டப்பா கானா என்ப்படும் இரவுச் சாப்பாடு கிடைத்தால் காலை சிற்றுண்டி மட்டும் அவ்வப்போது பழங்களும், பழரசங்களாகவும் எடுத்துக் கொண்டேன்.

அபுதாபி வந்தபின் டப்பா சாப்பாடு கிடைக்கவில்லை, உயரதரம் என்று எதிர்பார்க்கவில்லை நடுத்தரமான சைவ உணவகம் அருகினில் கிடைக்காத காரணத்தினாலும் எனக்கு சமைக்க வேண்டிய நிர்பந்தம்.

இப்போ நம்ம சமையல் எவ்வளாவு சுகமானது என்று அறிய ஒரு வாய்ப்பு.

நல்ல திடமா, அரோக்கியமா இருக்கேன். (சமையத்தில் காரம் மட்டுமே அதிகமா இருக்கும் – அது நம்ம ஆந்திர மாநில நண்பர் ஜகதீஷ் கொடுக்கும் சாபம் போல இருக்கு).

திருநெல்வேலி ஸ்பெஷல் வெண்டைகாய்ப் பச்சடியும், இட்லி காரசட்னியும், சப்பாத்தியும் கத்திரிகாய் மசாலா கறியும் ஆஹா பிரமாதம்.

நினைவில் நிறுத்த வேண்டியதை தவிர்த்து எதையும் படித்தவுடன் மறக்கும் சுபாவம் கொண்ட எனக்கு, இதை மறக்காமல் ப்ளாகிடவேண்டும். யாருக்காவது உபயோகப் படும் என்று இல்லை, எனக்கே தேவைப் படும்போது என் நினைவாற்றல் மக்கிப் போக்கூடிய காலகட்டங்களில் என் இனையப் பக்கங்களை புரட்டினால் கிடைத்திடுமே (எனக்காக மட்டுமே)….

இது என் கனவுகளின் டைரி மட்டும் அல்ல, நினைவுகளையும், நடப்பவைகளையும் குறித்துவைக்க உதவும் டைரி.

ஒரு சிறிய குறுகிய நட்புக்குள் சிக்கித்தவித்த எனக்கு பல ஆண்டுகள் கழித்து பறந்து விரிந்த இந்த மண்ணில் மானிக்கமாக கிடைத்த என் புதிய நட்புக்களால் என் கவலைகள் போயின, உறவுகளுடன் நெருக்கம், நட்புக்களுடன் நிதானம், தனிமையில் இனிமையும், மற்றும் வாழ்க்கையின் மறுப்பக்கமும் புரிந்தது.

எல்லாவற்றிக்கும் மேலான மாற்றம் – எனக்குள் தோன்றும் பிதற்றல்களை இந்த இனையதளத்தின் வாயிலாக, உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் வாய்ப்பு இந்த அபுதாபியின் அழகான வாழ்க்கையால் மட்டுமே.

Advertisements

2 thoughts on “ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நூறு நாட்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s