இடியென வந்த அழைப்பு -2

நட்பினை வலுப்படுத்த கண்டேன் சிறந்த வழி முறைகள்

1. ஒரு நட்பில் உங்களது அனைத்துத் தேவைகளையும் தேடாதீர்கள்.

நட்பினில் நாடுவது பரஸ்பர நம்பிக்கை. குறிப்பாக பரிவு, பாசம், அன்பு, நேசம், நெருக்கம், உறவு, பரிச்சயம் அனைத்தையும் ஒரே இடத்தில் தேடுவது அறிவீனம். நம் மனதிற்கு தேவையான உணர்வுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் தேடுவது தவிர்ப்பது மிகவும் நல்லது. ஒரே நட்பில் இவை அனைத்தும் கிடைத்துவிட்டால் நீங்கள் பாக்கியசாலி என்று சொல்லி உங்களை முட்டாளாக்க விரும்பவில்லை.  ஆம் அனுபவத்தில் கற்ற பாடம் இது. உங்களுக்கு அனைத்துமாக ஒரு நட்பு கிடைத்தால் அது பலம் இல்லை, உங்களை பலவீனப்படுத்தப் போவது.

நீங்கள் முழுமையாக ஒரு நண்பரிடமோ/தோழியிடமோ முற்றிலுமாக சரணாகதி ஆகும் நிலை உண்டாகும். அவர்கள் இன்றி உங்களுக்கு எதுவும் இல்லை என்று தோன்றும் நிலை வரும். இதனால் என்ன ஆகும் என்றால் நீங்கள் உங்கள் நண்பரிடமோ/தோழியிடமோ அதிகம் எதிர் பார்க்க ஆரம்பிப்பீர்கள். உங்கள் நட்பால் நீங்கள் எதிர் பார்க்கும் அளவுக்கோ அல்லது உங்களை திருப்திப் படுத்த முடியாமல் போகலாம் அல்லது திருப்திபடுத்த அவசியம்/விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.

மிகவும் நெருக்கம் அதிகமாகும்போது, தன்னுடையது – எனக்கே உரியது என்ற எண்ணமும் வர விரிசல்களுக்கு வித்தாகும். இதனை தவிர்க்க நட்புக்கள் பல வேண்டும். நட்பு பலமாகும், உங்களை பலவீன அடையாமல் மற்ற நண்பர்கள் வட்டம் பார்த்துக் கொள்ளும்.

முதலில் நமக்கு ஒரு நல்ல நண்பரோ/தோழியோ வேண்டும் என்றால் அவரை தன் வழியில் போகவிட வேண்டிய சூழ்நிலை வரும்போது போ என்று சொல்லும் எண்ணம் இருக்கட்டும். நட்பு ஒரு பிடிக்குள் இருக்க வேண்டும் ஆனால் அந்த பிடி உடும்பு பிடியாய் இல்லாமல் இருக்கட்டும் ஒரு தளர்வான பிடிப்புடன் இருப்பது நட்பிற்கு ஆரோக்கியம். பிடி இருகும் போது, நம்முடைய நட்பும் இருகிவிடும். இதை தவிர்க்க பல நண்பர்களுடன் இருப்பது நன்று.

ஒரு நட்பு இருப்பதால் நம்முடைய நடை உடை பாவனை ஒரே சாயலில் அமைந்துவிடுவதுண்டு. பல முகங்களின் பரிச்சயமும், நேசமும், பாசமும், பகிர்வும் நம் நம்பிக்கையை மட்டும் இல்லை, கால நேரத்தற்கு ஏற்ப மாற்றம் வர வழி வகுப்பதோடு, வாழ்வும் வளம் பெற உதவும். நட்புக்கள் பல இருப்பதால் பல விஷயங்களை கற்றுக் கொள்ள உதவும் – அவரவரின் விருப்பு வெருப்புகளுக்கு ஏற்றார் போல் – ஒருவருக்கு படிக்க பிடிக்கும், ஒருவருக்கு டெக்னாலாஜி பிடித்து இருக்கும், மற்றுமொருவருக்கு சாட்டிட பிடிக்கும், ஆட்டோமொபைல்ஸ் பற்றி பேசிடுவார்.

எண்ணற்ற விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள, பொழுது போக்குவதற்கு மட்டுமில்லை ஆத்மார்த்தமான பகிர்விற்கும் ஒரு நட்பு போதுமா ???

2. மிகவும் முக்கியமானது: உங்களின் மதிப்பினை அறிந்துக் கொள்ளுங்கள்.  புதிய நட்பு தேவையா?

நீங்கள் உங்கள் நண்பரைப் பற்றி எப்படி நினைக்கிறீர்களோ அவரும் உங்களை அப்படி நினைக்கிறாரா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். சுயநலமாக சிந்திக்கும் சிலரிடம் சிக்கி சின்னாபின்னமாகதீர்கள். நம்ம நட்பை நாம் நினைக்கும் வகையில் நம்மை நினைத்தால் எளிதில் பிரச்சனைகள் வராது, வந்தாலும் சிறிது நேரத்தில் மறந்து விடுவோம்.

நல்ல நண்பராக இருப்பது என்பது அவரிடம் உள்ள நிறை குறைகளைத் தெரிந்து அதற்கு ஏற்றார் போல நடப்பது.

நட்பினால், நட்பினில் நாம் என்ன தேடுகிறோம் என்பது இருவருக்கும் நன்றாக புரிந்து இருக்க வேண்டும். சுய நலனுக்காக உபயோகப் படுத்தி, அவரை நாம் இல்லாமல் இல்லை என்று மாற்றும் நிலைக்கு வராமல் இருத்தால் மிகவும் நல்லது. அனைத்து வகையான உறவுகளிலும் சாதரணமாக சொல்லபடுவது, உன்னால் தான் நான் பைத்தியமானேன் என்று நீயும், உன் நண்பரும் சொல்லாமல் இருக்க வேண்டும்.  எங்கோ பிறந்து எப்படியோ அறிமுகமாகி சினேகம் கொண்டது எதற்காக?? எதோ ஒரு பிடிப்பு ஏற்பட்டபின் மலரும் அந்த அழுத்தமான நட்பை இருவரும் மதித்து, அனுசரித்து நடக்கும் போது தன்னிலை மறக்கும் நிலை உருவாகாது.

ஒரு நண்பரிடத்தில் சற்று கூடுதலாக ஈர்ப்பு ஏற்படும் பட்சத்தில், தன் நிலை மறக்கும் நிலை வரும் நேரத்தில், உடன் இருப்பவர்கள் அதனை மாற்ற ஆரம்பித்துவிடுவர்.  ஒரே நட்பாக இருந்தால் நீங்கள் நிதானம் தவறுவதை உங்கள் நட்பு உங்களை பிரிந்த பின்னர் தான் உணர்வீர்கள்.

நட்பு என்பது நம்பிக்கையின் சின்னம். கால நேரத்திற்கு ஏற்ப நட்பும், நட்பின் சூழலும் மாறும் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு விறுவிறுவென நாம் நடக்க பல நண்பர்கள் தேவை.

ஒரு நட்பு என்னைக் கொன்றது. பல நட்பு என்னை உயிர் மீட்டு தந்த்து. இன்று பல நட்புக்களுடன் சுகமாக, சுமூகமாக சௌக்கியமாக நான் நானாக இருக்க வழி வகுத்தது.

3. நட்பு வளர்வதற்கு வழி கொடுக்கவும் :

பார்த்தால், பேசினால் மட்டுமே நட்பு வளரும் என்பது முற்றிலும் பேத்தல் என்று சொல்ல்லாம். ஆம் கண்டால் தான் நட்பு என்பது இல்லை. உண்மையில் அது பழக்கமாகிவிடும். பழக்கத்தில் பாசம் மறைந்துவிடும்.

காலையில் எழுந்தவுடன் காபி வாசத்தையும், பேஸ்டையும் ப்ரஷையும் தேடுவது போல் இந்த ஃபோன் காலும் ஒரு பழக்கமாகிவிடும். மாற்றிக் கொள்வது மிக சிரமம்மாகிவிடும்.

என்றோ ஒரு முறை அழைத்து பேசிட ஆறுதல், ஆதரவு என்பது அதுவாக வந்துவிடும்.

என்னுடைய பழைய நட்புக்களை – இது சண்டை இட்டு பிரிந்த நட்பு இல்லை, காலத்தின் கட்டாயத்தால் பிரிந்தவர்களை நினைத்தவுடன் ஒரு புத்துணர்ச்சி வருமே அந்த மாதிரி தான்.

நல்ல நட்பு என்றும் சுருங்குவதில்லை. விட்ட இடத்தில் இருந்து தொடரும். இது எப்படி சாத்தியமாகும் என்றால் பல ஆண்டுகளாக சந்திக்காத உங்கள் நண்பர் ஒருவரை தேடி பிடித்து நேரில் சந்திக்கவும்.

பெண்கள் பலரிடம் கேட்டுப் பாருங்கள், வீடு, அலுவலகம், பிள்ளைகள் என்று தனது குடும்ப சூழலில் சுழன்று கொண்டு இருக்கும் எனக்கு எனது தோழிகளிடம் பேச நேரமில்லை என்றால் கூட, என்றோ நேரில் சந்திக்கும் போது அளவளவி கொள்ளும் ஆனந்தம் இருக்கே அதற்கு நீங்களும் பெண்ணாய் பிறந்து அந்த பயனை அடைய வேண்டும். கண்டாலும் காணாம்ல் போகும் நட்புக்கள் இருக்கும் இன்றைய கால கட்டத்தில் தனது சினேகம் தனக்குள் பத்திரமாக இருப்பதாக சொல்வார்கள். அது முற்றிலும் உண்மை தான்.

10 வருட காலத்திற்கு பின் ரங்கநாதன் என்ற நண்பரைச் சந்தித்தபோது வந்த அந்த சந்தோசம், எங்களுக்குள் 10 ஆண்டுகள் சென்றதே என்று யோசிக்ககூட தோன்றவில்லை. கூடவே இருந்திருந்தால் அந்த நட்பு தொலைந்த நட்பாக இருந்திருக்குமோ… இந்த இடைவெளிக்கு பிறகு தான் நம் நட்பின் பலத்தை நானே அறிந்தேனோ???

கண்டங்கள் தாண்டி இருந்தாலும், என் கண்களுக்கு முன்னே நினைத்தவுடன் வரக்கூடியவர்கள் ஒரு சிலர் மட்டுமே….

4. எல்லோரும் அறிந்ததே நீ நீயாக இரு. என்னை உனக்குள் தினிக்கவோ, எனக்குள் உன்னை தினிக்கவோ மாட்டேன். உபதேசங்கள் ஊருக்குதான் உங்கள் நண்பர்களுக்கு இல்லை. உங்களை உங்கள் நிறை குறைகளுடன் ஏற்றுக் கொள்ளும் நண்பரை, நீங்களும் அப்படியே ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.

தவறு செய்யும் நண்பரை திருத்த நினைப்பதில் தவறில்லை, ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அதை அவர்மீது தினிக்காதீர்கள். மேலும் நீங்கள் வருத்தப்படுவதோ, காயபடுவதோ, புண்படுவதோ தவறு. அதனால் உங்கள் மனதில் உங்கள் நண்பரிடம் கோபம் வரத்தொடங்கும்.

தன்னை தாழ்த்தி நட்பை உயர்த்துவதில் தவறில்லை அதை உங்கள் நட்பு உணரும் பட்சத்தில். ஆர்வத்தில் அறிவுரைகளை அள்ளி விடுவதை 100 சதவிகதம் தவிர்க்கவும்- காரணம், நீங்கள் உங்களின் நண்பரின் நலனுக்காகவே சொல்லி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை உங்கள்  நண்பருடையதே.

நீங்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றங்களை உற்ற நண்பரிடம் தினிப்பது என்பது தீராத பிரச்சனைகள உருவாக்கும் என்று நினைவில் வைத்திருங்கள்.

5. பிரார்த்தனை செய்வோம் – இந்த நட்பு காலத்திற்கும் வேண்டும். என் நட்பு என்னால் காயப்படகூடாது என்று பிரார்தனை செய்யுங்கள்.

நண்பருக்காகவும், நண்பரோடும் பிரார்த்தனைச் செய்யுங்கள். நண்பரோடு பிரார்த்தனை என்பது கோடைக்காலத்தில் வெளியில் சென்று திரும்பிய பின்ன்ர், சில்லென்று ஒரு குவலைத் தண்ணீர் குடிப்பது போன்றது. கூட்டு பிரார்ட்த்தனை செய்யும் போது ஒரு புத்துணர்வு கிடைக்கபெறுவோம். அவருக்காக நீயும், உனக்காக அவரும் பிரார்த்தனை செய்யும் போது, ஆ! எனக்காக ஒருவர் பிரார்த்தனை செய்கிறாரே என்ற மன நிம்மதியும் பெறுகும்.

முன்னர் ஒரு பதிவில் கூறியது போல தோழி ஒருத்தி பிரியபோகும் துயரத்தில் என்ன செய்வது என்று அறியாது இருந்தேன். சில நாட்கள் கழித்து அவளிடம் இருந்து அழைப்பு,  தன் கணவருக்கான அந்த வேலைக்கான மாற்றலை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் நாங்கள் இங்கேயே இருக்கப் போகிறோம் என்று ஒரு ஆறுதல் செய்தியை கூறினாள்.

இறைவனுக்கு நன்றி – அவள் போகவில்லை என்பதற்காக இல்லை,  இந்த இடம் மாற்றம் அவர்களுக்கு வராது இருந்திருந்தால் எனக்குள் இந்த மாற்றங்கள், வளார்ச்சி, முதிர்ச்சி, தெளிவு வந்து இருக்காது.

இப்போது எனக்கு என் நட்பின் ஆழமும் தெரியும், அழுத்தமும் தெரியும், அதற்கான அளவுகோலும் தெரியும். என் தோழியிடம் இளைப்பாறுதல் கிட்டும் என்றும்.

எந்த நிலையிலும் தன்னிலை மறக்கும் நிலை வராது என்பதற்காகவே இந்த இறைவன் விளையாட்டினை, சில மாதம் களறி ஆட்டமாக  நினைத்த்து என் தவறே…..

ஆங்கிலத்தில் சொல்வார்களே Detached Attachment அது இதுதானோ?

இடியென வந்த அழைப்பு இனிதாக முடிந்தது

மேலும் ஒரு பிதற்றலோடு உங்களை சந்திப்பேன்…..

 

Advertisements

4 thoughts on “இடியென வந்த அழைப்பு -2

 1. //மிகவும் நெருக்கம் அதிகமாகும்போது, தன்னுடையது – எனக்கே உரியது என்ற எண்ணமும் வர விரிசல்களுக்கு வித்தாகும். இதனை தவிர்க்க நட்புக்கள் பல வேண்டும். நட்பு பலமாகும், உங்களை பலவீன அடையாமல் மற்ற நண்பர்கள் வட்டம் பார்த்துக் கொள்ளும்.//

  நட்பை பற்றி அழமாக சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள்

  வாழ்த்துக்கள்!!!
  நிகில்

 2. இந்த அளவுக்கு உங்களுக்குள் நட்பு பற்றிய சிந்தனை ஊடுருவிக் கிடக்கிறது..நல்ல கருத்துகளை எழுதியுள்ளீர்கள்..ஆமாம் உங்கள் அளவுகோலில் என் நட்பு எந்த அளவுக்கு!

  • நண்பா,

   நட்பு என்றால் அளவுகோல் கிடையாது.
   ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே….

   மனதிற்கு நிறைவாக, அமைதி தரும், கலங்கம் தராமல் இருக்கும்
   எந்த நட்பும் வலிமையானதே…

   நம்முடைய நட்பும் வலிமையானதே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s