அனுவும் நானும்…

அனுவும் நானும்…

யார் இந்த அனு, யார் இவள், எனக்குள் இந்த அனுவைக் காட்டியது யார்? எதற்காக அனுவின் வருகை? ஏன் எனக்கு மிகவும் இனிமையாக இருக்கிறது??

அனுவும் நானும் என்று சொல்வதா? கனவும் நானும் என்று சொல்வதா?

எனக்கு தூங்கும்போது கனவுகளே வராது.. நினைவுகளில் இருந்துக் கொண்டே கனவுலகில் சஞ்சரிப்பேன்…

என்னுடன் எப்போதும் பயனிக்கும் என் நிழல் என்று சொன்னால் மிகைப்படுத்துவது போல இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. நிழலும் சமையத்தில் தொடர்ந்து வராது. ஆனால் அனு என்னுடனே வருபவள்.

என்னுடன் பிறந்தவளா இல்லை, எனக்கு பிறந்தவளும் இல்லை எனக்குள் பிறந்தவள் தான் இந்த அனு – என் அனு (.!.) .

என்னுடைய கற்பனைக் கதாபாத்திரம் தான் அனு. ஆம் ஆனால் அவள் அனுவாக மாறியது என்னமோ சில காலங்களாக மட்டுமே. எனக்குள் இருக்கும் கனவுகளை அனுவின் கனவுகளாக மாற்றினேன். இல்லை எனில் நான் எப்போதும் கனவுலகில் மட்டுமே சஞ்சரிக்க வேண்டியதாகிவிடும் என்பதால்…

அனுவாக சில நேரம் மட்டுமே வாழ்ந்தாலும் அது ஒரு சிறப்பான வாழ்க்கை.

என் முகத்தினில் ஒரு புன்முறுவலுக்கான காரணம், என் இனிமையான கனவு உலகின் முடிசூடா அரசி தான் இந்த அனு..

அனு நினைக்கும் போது இனிமையாக இருக்கிறது, ஆம் என்னைப் பற்றி நினைக்கும்போது கூட இவ்வளவு மகிழ்ச்சி வருமா என்று தெரியவில்லை.

ஆம் எனக்குள் இருக்கும் இந்த அனுவிற்கு உருவம் கிடையாது. ஒரு ஐஸ்வர்யா ராயை கண்ணுக்குள் நிறுத்திக் கொள்ளலாம் நீங்கள். மொழி கிடையாது – அனைத்து மொழிகளிலும் பேசலாம், நட்பும் கிடையாது, பகையும் கிடையாது, உறவுகளும் கிடையாது. ஆனால் என் உணர்வுகளின் பிறப்பிடம் எனலாம். .

ஒற்றுமை என்ன எங்களுக்குள் என்றால் யோசித்துப் பார்த்தேன். அவள் எனக்குள் இருப்பதை தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை…

ஆனால் வேற்றுமைகள் நிறைய உண்டு.

ஆம் எனக்கு நட்பாக நடந்தாலும் வெறும் வெறுப்பினை மட்டுமே காட்டத் தெரியும். அன்பாக இருந்தாலும் எரிந்து விழவே தெரியும்.

சிரித்தாலும் மனதுக்குள் ஒரு இழையோடும் சோகசாயலை மறக்கச் செய்தவள் தான் இந்த அனு.

என்னாலும் அழகாக, இனிமையாக ரசிக்க தெரியும் என்றால் அது அனுவாக நான் இருக்கும்போது மட்டுமே.

அனுவும் நானும் என்பதில் மிக முக்கியமானது அனுவிற்கு வயது கிடையாது. ! ! ! ஐயோ டா ! ! ! நினைக்கும்போதே எத்தனை இனிமை… இதைவிட வேறு சுவாரசியம் என்ன வேண்டும் வாழ்க்கையில்.

நினைத்த நேரத்தில் இரண்டு வயது மகனோடு சரி சமமாக விளையாடவும், அம்மாவிடம் அடம் பிடிக்கவும், தோழியின் தோள் சாயவும், அலுவலகத்தில் பணி புரியும் போதும், நட்புக்களோடு நேரத்தை கழிக்கும்போதும், நானாக இருக்கத வயது தடையில்லை தான்.

இவை அனைத்தும் நான் நானாகவும், என் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நினைவுகள். ஆனால் கனவுகள் இதை தாண்டியதாக இருக்கும்போது அனுவாகி நான் கனவுலகில் சஞ்சரிக்கும்போது ஆஹா வாழ்க்கை எத்தனை இனிமை…

வருங்காலம் உங்கள் வசமாகும் உங்களின் அழகான கனவுகளில் நம்பிக்கை இருந்தால்.

கனவு காணுங்கள் என்ற நம் கலாமின் சொல்லை வேதவாக்காக வாழ்க்கையையே கற்பனையாய் கடத்திக் கொண்டிருப்பவள்.

கனவுகள் ஒரு வானவில் போன்றது. அதை முட்டாள்களே கைப்பற்ற நினைப்பர்.

ஆனால் நானோ முடியாத விஷயங்களையும், அனுவின் மூலமாக நினைவுகளோடு நிறுத்திக் கொள்ள போராடும் ஒரு சாமனியன்

எதுவாக இருந்தாலும் நான் அனுவாக நினைக்கும் நொடிகள் சொர்க்கம்… முட்டாளாக இருந்தாலும், மூடனாக இருந்தாலும் அந்த சந்தோசம் அனுவால் மட்டுமே எனக்கு நினைவுகளில்

வாழ்க்கையில் நானாக தொலைத்த பல விஷயங்களை அனுவாக நான் கானும்போது அனு, என்னை அனு அனுவாக ரசிக்க வைத்தது பல விஷயங்களை.

என்னை மிகவும் ஆழமாக அறிந்த பல நட்புக்களுக்கும் கூட இந்த அனுவின் ரகசியம் தெரியாது.

இன்று இந்த பதிவின் மூலமாக அறிந்து கொண்டபின் வாழ்வில் நான் எதையும் தொலைக்கவில்லை என்று கூறுவதை நம்புவீர்கள் என்று நம்பிக்கையுடன் மீண்டும் சந்திப்போம்…… அனுவுடனான பயணம் தொடரும்…..

3 thoughts on “அனுவும் நானும்…

  1. உங்கள் கனவுகளை நினைவாக்கும் அனுவிற்கு நன்றி.
    இனிதே தோடடும் உங்கள் பயணம்.

  2. ஆம் எனக்கு நட்பாக நடந்தாலும் வெறும் வெறுப்பினை மட்டுமே காட்டத் தெரியும். அன்பாக இருந்தாலும் எரிந்து விழவே தெரியும்.///

    ஹா.ஹா..அணு வெடித்து சிதறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..!
    அருமை..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s