இடியென வந்த அழைப்பு ! !

சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது….

சில மாற்றங்களுடன் உங்களுக்காக…

என்னுடைய நெருங்கியத் தோழியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அவள் வீட்டில், அன்று மாலை விருந்து ஒன்று இருப்பதாகவும், அதற்காக என்னை அழைத்தாள். நீ கண்டிப்பாக வரவேண்டும், வருவாய் அல்லவா என்று கேட்டாள், நீ இப்படி கேட்க வேண்டுமா? உனக்காக கண்டிப்பாக வருகிறேன் என்றேன். தோழியின் வீட்டில் விருந்து என்றதும் மிகவும் சந்தோசப் பட்டேன் காரணம் அறியும் முன்.

நாங்கள் இருவரும் இரண்டு நாளைக்கு முன் பேசியது தான் இருவரும் எங்களது இயந்திர தனமான வாழ்க்கையில் இரண்டு நாட்கள் பேசாமல் இருந்ததும் அப்போது தான். இந்த அழைப்பு சுகமாக இருந்தது விருந்து எனக்கு மட்டுமே என்பதால். விருந்திற்கான காரணத்தை நான் கேட்க நினைத்தேன், என்னை கேட்க விடாமல் அவளோ மிகவும் உற்சாகமாக பேச தொடங்கினாள்.

அந்த பேச்சின் சுவாரசியத்தில், மிகவும் எதார்த்தமாக அவள் கணவருக்கு பக்கத்து மாநிலத்திற்கு மாற்றலாகியுள்ளதாகவும், வெகு விரைவில் அங்கு குடிபெயர இருப்பதாகவும் கூறினாள்.

இந்த வேலையால் அவளது கணவரின் அலுவலகத்தில் அந்தஸ்து உயர்வு மற்றும் அவளது தாயாரின் வீடு பக்கத்தில் இருப்பதாகவும், தங்கள் உறவினர்களை அனைவரும் அருகினில் இருப்பதால் இந்த மாற்றம் அவளுக்கு மிகவும் சந்தோசம் தருவதாகவும் தெரிவித்தாள். அதற்கு தான் இன்று மாலை விருந்து என்றும் கூறினாள். என்னை மிகவும் கலவரப் படுத்திய செய்திதான் இது. நான் உறைந்து போனேன் என்றே கூற வேண்டும்.

நானும் என்னுடைய தோழியும் பல ஆண்டுகளாக உயிர் தோழிகள். அவள் மிக எதார்த்தமாக கூறியதாலோ என்னவோ, எனக்கு மிகவும் வலித்தது. அவள் சந்தோசமாக பேசிக் கொண்டே இருந்தாள், நானோ என் விழிகளை துடைத்துக் கொண்டே இருந்தேன், மிகவும் பிரயத்தனப் பட்டேன் என் கண்ணீரை மறைக்க (மிக நெருங்கிய தோழியாயிற்றே சிறிது குரல் பிசகினாலும் கண்டு பிடித்துவிடுவாளே).

எங்களுக்குள் பல ஆண்டுகளாக வளர்த்த இந்த நட்பை, உயிரில் கலந்த ஒரு மென்மையான உறவை கொன்று, ஒரு சவப்பெட்டியை குழிக்குள் போடுவது போன்ற ஒரு உணர்வு.

என்னால் அவளுடன் சகஜமாக பேச முடியாத போதும், அவளிடம் சகஜமாக பேச முயன்றேன். அவளின் அந்த சந்தோச பகிர்விற்கு முற்றுபுள்ளி வைக்க முடியாமல், அவளுடனான அந்த சம்பாஷனையை துண்டிக்க விரும்பாமல் தொடர்ந்தேன்…

அவளாக அந்த தொலைப்பேசி அழைப்பினைத் துண்டித்தபின், நான் என்னுடைய படுக்கை அறையில் நுழைந்தேன். விம்மலுடன் அழுகை என்னை வாட்டியது. எப்படி இன்று மாலை என் தோழியை சந்திப்பது என்று நினைத்து வருந்தினேன். இதுவே எங்களுடைய கடைசி சந்திப்பாக இருக்குமோ என்று கலங்கினேன்.

என்னை விட்டு எப்படி அவளால் போக முடியும்? என்று நினைத்தேன். எங்களுக்குள் பல காலமாக ஊறிய இந்த நட்பினை அசைபோட்டேன். என் தோழி என்னருகே இல்லாமல் நான் என்ன செய்வேன் என்று வருத்தப் பட்டேன்.

என்ன செய்வது என்று யோசித்தேன், என்னுடைய லேப்டாப்-பை எடுத்தேன், ஒரு பிபிடி எடுத்து எங்களுடைய நட்பினை அதில் வரைய ஆரம்பித்தேன். ஆயிரம் ஸ்லைடுகளில் என்னுடைய தோழி என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை தெளிவு செய்தது.

அந்த நொடியில் தான் அறிந்தேன் நான் அவள் மீது எப்படிபட்ட அன்பை வைத்து இருக்கிறேன் என்றும், எனக்குள் எப்படி பட்ட பாதிப்பை அவளது  நட்பும், அவளும் ஏற்படுத்தி இருகிறாள் என்று.

முதன் முறையாக கடவுளின் அனுகிரகத்தால், எனக்குள் ஒரு நல்ல நட்பினை உணரமுடிந்ததாக உணர்ந்தேன். நான் நல்ல தோழியாக பலருக்கு இருந்து இருக்கிறேன் எனக்கு ஒரு நல்ல நட்பை உணர்ந்தது அவளின் அரவனைப்பில். அவளது நட்பு ஒரு வரமாகத் தோன்றியது.

நான் நல்ல தோழியாக இருந்து மற்றவரிடமிருந்து விடைபெறும் தருணத்தில், நான் போனால் என்ன வேறு ஒரு நட்பு என் இடத்தை நிரப்பும் என்று எதார்த்தம் பேசி வந்த எனக்கு அடுத்தவரின் வலி புரிந்தது, என் தோழியின் பிரிவு என்ற நினைவு. எப்படி இதில் இருந்து மீண்டு வரபோகிறேன் என்ற பயமும் கூடவே வந்தது.

எப்படி அவளால் என்னைவிட்டு போக முடியும் என்று யோசிப்பதை சிறிது மாற்றி யோசித்தேன், அவளால் என்னை விட்டு போக முடியும், இருக்க முடியும் என்கிற போது என்னாலும் இருக்க முடியும்.

எப்படி அவளை விட்டு இருப்பேன் என்று இருந்த நான், கொஞ்சம் நிதானமாக சிந்திக்கலானேன் அவள் எனக்கு பலமா? பலவீனமா என்று யோசித்தேன். பலமாக யோசித்ததால், அவள் எனக்கு பலம் என்றால் இந்த பிரிவு என்னை மேலும் பலமாக்கும், பலவீனமாக இருந்தால் அதனை இப்போதே உதறி விடுவதே மேல் என்று எண்ணம் கொண்டு, அன்று மாலை அவள் வீட்டு விருந்துக்கு போக தயாரானேன்.

இவள் எனக்குள் தந்திருந்த பாதிப்பை யோசிப்பதை விடுத்து, மற்றவரிடம் நான் ஏற்படுத்திய பாதிப்பை நினைத்தேன். பாதிப்பு என்று சொல்வதை விட என்னுடைய மற்ற உறவுக்ளையும், நட்பினையும் ஆராய்ந்தேன். இதயம் இவளுக்காக ஏங்கினாலும், உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், அவள் என்னை பிரியபோவது. முற்றிலும் உண்மை.

அதனால்தான் என்னமோ, மற்ற உறவுகளும், நட்பும் அருகினில் இருந்தபோதும், நான் அலட்சியமாக இருந்தது என்னை துளைத்தது. இவள் என்னை மட்டும் இல்லை என்னுடைய அனைத்து சுற்று நண்பர்களையும் ஒரு படி கீழே தள்ளிவிட்டாள் என்று உணர்ந்தேன். இருப்பினும், அனைத்து வட்டமும் என்னை நேசித்தை உணர்ந்தேன். ஒவ்வொரு நட்பிலும் ஒரு உறவு இழையோடியதை உணர முடிந்தது.

அதனை நினைத்தவுடன் அவர்கள் அனைவரும் என் கண் முன்னே தோன்ற,  அந்த நட்பின் அனுபவத்தையும், அதற்கான நன்றியையும் அவர்களுடன் தெரிவிக்க நினைத்தேன். அந்த நொடியில் நான் மற்ற நட்புக்களை உணர்ந்தேன்.

நட்பை சிறிய வட்டத்துக்குள் சுற்றிவரச் செய்யாமல் பறந்து விரிந்த இந்த பூ உலகில் கிடைத்த நேரத்தில், கிடைத்த விதத்தில் நேரிலோ, நெட்டிலோ, சாட்டிலோ, தொலைபேசியிலோ எந்த ஒரு வாயிலாகவோ என்னுடைய நட்பினை தொடர நினைத்தேன். முடிவு இந்த பதிவு உங்களில் பலரும், என்னைப் போல் அவதிபட நேரிடலாம்.

ஒரே ஒரு நட்பு என்று இருந்தால், நட்பில் விரிசலோ, மன சங்கடமோ, பிரிவோ வரும் போது, நம் உயிரைக் குடிக்கும் நிலைக்கு வரும்.

நட்பினை சிறிய வட்ட்த்துக்குள் தேக்கிவிடாதீர்கள் ! ! !

நட்புக்குள் இவர் உயர்ந்தவர், இவருக்காக உயிரும் கொடுப்பேன் என்று எதுவும் இன்றி இருவரும் அவர் அவராக இருக்கும் பட்சத்தில் நட்பிற்கு முடிவு இல்லை.

எப்படி நம்முடைய நட்பு வட்டத்தை நம்மை பலவீனமாக்காமல் பலமானதாக முற்படுவது என்று அடுத்த பதிவினில் கான்போம்.

Advertisements

One thought on “இடியென வந்த அழைப்பு ! !

  1. Pingback: இடியென வந்த அழைப்பு -2 « MAIDENPOST

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s