மறப்பதும் மறைப்பதும்

01-ஜனவரி-2010

நான் நெட்டிட(எழுதிட) தொடங்கியதே மறக்காமல் இருக்கவேண்டும் என்றும், வேண்டியபோது படித்து என் பசுமையான நினைவுகளை புரட்டிப் பார்க்கவும் மட்டுமே.

என்னுடைய நினைவாற்றலைப் பற்றி உனக்குத் தெரியாதா?

என் பக்கங்களில் சிலதை மறந்து போனேனே தவிர மறைக்க நினைக்கலை. ஆம் நான் துபாய்க்கு பறந்த நாளைப் பற்றிய பதிவாக இருந்திருந்தால் அதில் நீ என்னை வழி அனுப்ப வந்ததைப் பற்றிக் கண்டிப்பாக கூறி இருப்பேன். அது ஒரு வீகெண்ட் என்று ஆரம்பித்தேன்.

ஏன் மறைக்க வேண்டும் நீ என்னை வழி அனுப்ப வந்ததை. மறைக்க நினக்கவில்லை…. அப்படியே மறைத்து இருந்தாலும் தவறு ஒன்றும் இல்லை. அது மரியாதை நிமித்தமாக இருக்குமே தவிர, பயமாக இருக்காது.

அடுத்தவருக்கு பாரமாக இருக்க மட்டுமே எனக்கு பயம், மற்றபடி பயம் எனக்கு சிறிதும் இல்லை என்பதனை உனக்கு ஏற்கனவே பல முறை சொல்லியும் செய்தும் புரியவும் வைத்து இருக்கிறேன்.

இன்னும் ஒரு சான்று இந்த பதிவு

2009ஆம் ஆண்டின் கடைசி மாதமே எனக்கு மிகவும் முக்கியமான பல திருப்புமுனைகளை தந்தது. என்னுடைய பிறந்த நாளில் இருந்து பல் சந்தோச அனுபவம், ஆசை, ஏமாற்றம் என்று ஏகபட்ட விஷயங்கள் நடந்தது. அதில் ஒன்று தான் பல ஆண்டுகளாய் ஆன்சைட் அனுபவத்திற்காக எதிர்ப் பார்த்து ஏங்கிய எனக்கு, இந்த வேலையின் ஆர்டர் கிடைத்ததும் மகிழ்ச்சி. சம்பளத்திற்காக வேலை என்று இருந்திருந்தால் இந்த வேலையை வேண்டாம் என்றுகூட சொல்லி இருப்பேன். ஆனால் நான் ஆவலுடன் எதிர்பார்த்த ஆன்சைட் அனுபவம் தானாக சிரமமின்றி, சுலபமாக அதுவும் வேலையில்லாமல் 6 மாத இடைவெளிக்குப் பிறகு என்பதனால் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் சம்பளம் கொடுப்பதை கொடு நான் ஒரு ஆண்டுக்கு பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று ஒத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

புதிய ஆண்டின் துவக்கத்தில் பயணமா என்று சிறிதும் யோசிக்காமல் புறப்பட காரணமும் என்னுடைய ஆர்வக் கோளாரே ! !

வீட்டில் எல்லோருக்கும் பை பை சொல்லி வந்த விவரத்தை முன்பே சொல்லியதால், இப்போது உன்னைப் பற்றி மட்டுமே.

வீட்டிலிருந்து புறப்பட்டவுடன், புறப்பட்டுவிட்டேன் என்று உனக்குச் சொல்ல நினைத்து என்னுடைய அலைபேசியிலிருந்து உன்னை அழைத்தேன். மறுமுனையில் நீ கிளம்பிட்டியா, (அன்று ஆருத்ரா தரிசனம்), சமைலறையில் கொஞ்சம் வேலையா இருக்கேன் டா என்று சொல்லி இன்னும் கொஞ்சம் நேரத்தில் கிளம்பிடுவேன் என்றாய்.

நானும் நீ வருவாய் என்று எதிர்ப்பார்க்கவில்லை ஏன் எனில் மூன்று மாதக் குழந்தையை விட்டுவிட்டு எப்படி வரமுடியும்( நமக்குள் இருந்த டிஷ்யும் டிஷ்யும் நினைத்து இல்லை – உனக்கும் தெரியும் நான் உன்னிடம் சொல்லாமல் போக மாட்டேன் என்று, எனக்கும் தெரியும் நீ வழி அனுப்ப வருவாய் என்று).

மேலும் வருடத்தின் முதல் நாளில் கோவில் குளம் என்று போகும் பழக்கம் இருக்கே உனக்கு.(நல்ல சாப்பிட பிடிக்குமே- இதை சொல்லலைனா திரும்பவும் நான் எதையோ மறைத்துவிட்டேன் என்று குற்றம் கண்டுபிடிப்பாயோ என்று உண்மையை உலரி விட்டேன்.)

நீ வரும் வரை விமான நிலையம் உள்ளேச் செல்லாமல் உனக்காக காத்திருந்தேன். எப்போதும் உனக்காக காத்திருப்பதே என் வாடிக்கை அடடா இப்போதுமா என்று நினைத்தேன். இன்னும் 10 நிமிடங்களில் நீ வரவில்லை என்றால் புறப்படுவது என்று இருந்தேன். விடியற்காலை என்பதால் வருவதற்கு சிரமம் இருக்கும் என்று தெரியும்.

எங்கோ ஒரு மூனையில் நீ வருவதைக் கண்டு கொஞ்சம் பூரிப்படைந்தேன். விமான நிலையத்திற்கு நீ வருவதும் என்னை வழி அனுப்புவதும் நமக்கு புதியது இல்லை… ஆனாலும் இந்த பயணம் கிட்டதட்ட ஐந்து ஆண்டு கனவு அல்லவா நம் இருவருக்குமே.

எனக்குள் ஒரு தவிப்பு, நான் செக்கின் செய்யலையேனு. உனக்கு ஒரு நுழைவுச் சீட்டு வாங்கி கையில் தினித்துவிட்டு, சிட்டாக பறந்தேன் செக்கின் செய்வதற்கு, பிறகு நிதானமாக உன்னுடன் பேசிக் கொள்ளலாம் என்று.

பத்திரம், ஜாக்கிரதை, நிதனமாக இரு, நல்லா சாப்பிடு, கஞ்சத் தனமா இருக்காதே,(அங்கு போனதும் வருவது கஞ்சத்தனம் என்கிற இந்த வியாதி தான் – நீ சொல்லலைல நானா நீ சொல்ற மாதிரி நினைத்துக் கொண்டேன்)  இறங்கியவுடன் ஃபோன் பண்ணு…. வேற எதாவது பேசினோமானு யோசிச்சா எனக்கு ஞாபகம் இல்லை.

நீயும் பை பை சொல்லி புறப்பட்டவுடன் மற்ற நடைமுறைகளை பின்பற்ற நானும் நடந்தேன….

யாரவது சொல்லுங்க இதில் மறைக்க ஏதாவது இருக்கா????

Advertisements

5 thoughts on “மறப்பதும் மறைப்பதும்

 1. Natpuku mariyathai unnudaya neapakathirku sapaash. uyerudan vaala katrai suvasekiren santhosathudan vaala un natpai nesekiren endrum natpudan kamala . sorry akka i dont have tamil fonts in my computer . thank u so mach have a nice day take care.

 2. நன்றி கமலா,

  ஹேலோ மூர்த்தி, என்ன காதலி பக்கத்தில் இருக்கும் போது வெயில் தெரியாதா??? காதலி மனைவியான பின்னால் சொல்லு மச்சான்

  • நிலா,

   நான் இவற்றைப் பாடமாக கருதியதால், எனக்கு வலிகளாக இப்போது இல்லை.
   நன்றி உங்களை மாதிரி சில நட்புகளால் நான் நானாக திரும்பவும் நன்றாக இருக்கிறேன்…..

   அன்புடன்
   அனு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s