நான் நானாக

உங்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான சந்தர்ப்பங்களை கடந்து வந்து இருக்கிறீர்களா? இது என்ன முட்டாள் தனமான கேள்வினு தோன்றுகிறதா? தினசரி வாழ்க்கையில் வரும் சின்ன சின்ன சங்கடங்கள் இல்லை இவை.

எதைச் செய்தாலும், எப்படி செய்தாலும் தவறு, தப்பு, கஷ்டம், நஷ்டம், வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவிற்கு நான் எதற்குமே உபயோகமற்றவன்னு என்று தோன்றியது உண்டா என்றுதான் கேட்டேன். எப்பொழுதாவது இது போன்று நடந்ததுண்டா?

எனக்கு பல முறை நடந்தது உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்ததை நினைத்துப் பார்க்ககூட பயமாக இருக்கிறது..  வாழ்க்கையே வெறுத்து பல முறை என்ன வாழ்க்கை, இந்த நிமிஷம் இங்கு ஒரு பாம் போட அதில் நான் மட்டும் சாகவேண்டும் என்று பல தடவை யோசிச்சு இருக்கேன்.( இருந்தது இந்தியத் தலைநகரில்)

எனக்காக பலர் வருத்தப் பட, சிலர் எல்லாம் நன்மைக்கே என்று அறிவுரைச் சொல்ல, அந்த நிலையில் நானாக இருந்ததால் இதை கடந்து வந்தேன், நீயாக இருந்திருந்தால், இரங்கல் மடல் வரைந்திருப்பேன் உனக்கு என்று மனதில் நினைத்து, சிரித்து அவர்களின் அறிவுரையை காற்றில் பறக்கவிட்டேன். (அவர்களின் அறிவுரைகளால் மட்டுமே இன்று நான் உங்களுடன்)

அறிவுரை சொல்லுவது மிகவும் எளிதானது, அரிதானதும் இல்லை, ஆறுதலும் இல்லை. ஆயினும் சொல்லியதில் மிகவும் பிடித்தது  எல்லாம் நன்மைக்கே – இதுவும் கடந்துப் போகும். அடுத்தவங்களுக்கு சொல்லும்போது நானும் ஈஸியா சொல்லுவேன் ஈவன் திஸ் வில் பாஸ் அவேனு.

பல் வலியும் தலைவலியும் அவனவனுக்கு வந்தாதான் தெரியும்னு சொல்லிக்கேட்டதை எந்த வலியா இருந்தாலும் நமக்கு வந்தாதான் தெரியும். நானும் வலியை ரொம்ப சீக்கிரத்தில் உணர்ந்தேன் அனுபவத்தால்.

எனக்கேத் தெரியாது நான் எவ்வளவு மன அழுத்த்துடன் (டிப்ரெஸ்டா/ டிஸ்டர்ப்டா) இருந்தேனு. எதுக்காக கவலைபடுவதுனுக் கூடத் தெரியாமல் முழித்ததும் உண்டு. அதுக்கும் சேர்த்துக் கவலைப் படுவேன்.

ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகள், அடுக்கடுக்கான தோல்விகள் என்று. ஜான் ஏறினா முழம் சறுக்குதே, அய்யோ என்ன வாழ்க்கைடா இது, ஒரே சூன்யமாக இருக்குதே, திரும்பவும் பூஜ்யத்தில் இருந்து தொடங்கவேண்டுமே என்று கவலைப் பட்டது ஏன் என்று இப்போது உணர்ந்தேன்.

எனக்கான சிறு சிறு தொல்லைகள், பிரச்சனைகள்னு இல்லை, வீட்டில் உள்ளவர்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்ட எனக்கு எந்த கஷ்டமும் ஈஸியா சமாளிப்பேன் என்று கர்வம் கூட இருந்தது. எல்லாவற்றையும் எதிர்த்து வீழ்ந்தாலும் பரவாயில்லை என்று தோல்விகளில் வெற்றிக் கண்டேன்.

எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து வந்ததால் எனக்குள் – என்னால் எதையும் தாங்க முடியும் என்றும், என்னை எதுவுமே கலங்கடிக்காது என்றும் நினைத்திருந்தேன்.

உறவுகளால் பிரச்சனை புதுயது இல்லை, எல்லா வீட்டில் வருவதுபோல உனக்கு அவள் தான் உசத்தி, நான் என்றால் மட்டம் என எப்போதுமே இருக்கும். ஆனால் யார் உயர்வு என்பது அவரவர் கொண்டு வரும் பிரச்சனைகளைக் கொண்டது. சில நேரங்களில் வெற்றி சில நேரங்களில் தோல்வி ஆனாலும் நான் அவர்களை ஒதுக்கியது இல்லை அவர்களும் என்னை ஒதுங்கவிட்டது இல்லை.

தினமும் சிறிய சிறிய பிரச்சனைகளை சமாளித்து வந்த எனக்கு, மனதளவில் பேரிடியாக வந்ததது என்ன என்பதை விட, நான் எப்படி சமாளித்தேன் என்று பகிர்ந்துக் கொள்ளவே விரும்புகிறேன்.

மின்னல், பேரிடிகள், சூறாவளி என பல பேய் மழைப் புயல்களைக் கடந்து வந்தததால், எனக்கு பிரச்சனைகளின்றி இருந்தால் தூக்கம் வராத நாட்களும் உண்டு. அந்த அளவுக்கு என்னுடன் கூடி கும்மாளாமிட்டது பிரச்சனைகள். சூறாவளிகளைச் சமாளித்ததால் சுனாமி என்னை அழுத்த நினைத்தது, என் முதல் சுற்று உறவுகள் மூலமாக என் உயிரை உலுக்கியது.

சிறிய பிரச்சனைகளைச் சமாளித்ததில் சந்தோசம் இருந்ததே தவிர அதிலிருந்து பாடம் எதுவும் அன்றைய தினத்தில் நினைவில் இல்லை.

இதற்கு முன்வரை வீட்டின் உள்ளவரின் பிரச்சனைகளைச் சந்தித்தபோது யாராவது(தோழிகள், நட்பு வட்டம்) என்னுடன் இருப்பர் என் பிரச்சனைகளை பகிர்ந்துக் கொள்ள, முற்றிலும் தனியாக சமாளித்து முயன்றும் முடியாமல் மரணத்திடமும் தோற்றேன். மரணம் என்னை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று இதனை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டிருக்க முடியாது.

உறவுகளுடனான பிரச்சனைகள் நம்மை வலுப்படுத்தும், மேலும் விட்டுக்கொடுக்கும் எண்ணம் வரும். ஆனால் இந்தப் பிரச்சனை மற்றவர் வீட்டில் வந்தால் எப்படி அதனைச் சமாளிப்பார்களோ அப்படியே நானும் சமாளித்தேன்.

உறவுகள் கொடுத்த வலி பாதித்தது என் நட்பை, என்னை பாதித்தது என்னுடைய நட்பு, எந்த நட்புக்காக வாழ்வது என்று எண்ணம் இருந்ததோ அதே நட்பு என்னை கொன்றது. நட்புக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் என்னுடைய முகவரியையே மறந்ததும் உண்டு. உறவுகளுக்கு பை பை சொல்லியதும் உண்டு. நட்பு எனக்கு டாட்டா காட்டி போனதால் வந்த தனிமை, மிகவும் கொடுமை. யாருக்கும்(என் விரோதிக்கும்) இப்படி ஒரு நிலை வரக்கூடாது.

இந்த உறவுகளையும், நட்புக்காகவும் நான் என்னை நினைக்காமல் இருந்துவிட்டேனோ என்று கூட நினைத்ததும் உண்டு. புதிதாய் எனக்கு ஒரு உலகமும் உறவும் வேண்டும் என்று நினைத்ததும் உண்டு.

அடுத்தவரிடம் இருந்து கற்றதைவிட, குடும்பத்தில் இருந்து படித்த பாடம், அந்த குடும்பமே வேண்டாம் எனும் அளவுக்கும் இருந்தது.

எல்லாமே நன்மைக்கே என்று நான் நினைத்தது மனதளவில் நான் என் உறவுகளைவிட்டு வெகுத் தொலைவில் சென்றபோது. முதல் நான்கு மாதம் யாரும் இல்லாமல் என் உயிரினும் மேலாய் நினைத்த என் சினேகமும் என்னை மறந்ததை நினைத்து வருந்தினேன். மரணம் கூட இனிது, இந்த தனிமை மிகவும் கொடிது என நினைத்து வருந்தினேன். மரணம் வேண்டுபோருக்கு உடனே வந்துவிடுமா என்ன?

என்னவோ என்னை கட்டி இருந்த சங்கிலியில் இருந்துவிடு பட்ட மாதிரி ஒரு உணர்வு. பல ஆண்டுகளுக்கு பிறகு என்னை நான் சுதந்திரப் பறவையாய், வானில் சிறகடித்துப் பறக்கும் சிட்டுகுருவி போல உணர்ந்தபோது என் மிக பெரிய வட்டத்தை தன் நட்புக்குள் சுருக்கி என்னை கைதியாக வைத்திருந்ததோ என நினைத்தேன்?

என் மரணத்தை என் கண் முன்னால் கான வைத்த பிரச்சனைகளைக் கடக்க உதவியது என் தனிமை மட்டுமே.

ஒரு சன் டைரக்ட், நெட் கனெக்‌ஷன், என்னுள் பல மாற்றத்தைத் தந்தது. பழக பழக தனிமை இனிமையானது. மனதில் உறுதி இருந்தால் மேலும் ஒரு சினேகம் கிடைக்கும், கிடைத்தது கடல் தாண்டி இண்டர் நெட் வழியே, சினேகம் என்றால் நாங்கள் பொதுவாக பேசுவோம், பெர்சனாலாக எங்களைப் பற்றி பேச மாட்டோம், ஆனாலும் தினமும் ஒரு மணி நேரம், பேசியவை அனைத்தும் எங்கள் அலுவல் நிமித்தமாகவே. இதை எப்படிச் செய்வது என்று அதை எப்படி செய்வது என்றுதான் பெரும்பாலும் இருக்கும்.

இன்று வரை நாங்கள் இருவரும் சந்தித்தது இல்லை. ஆனாலும் என் வீட்டில் ஒருவன் அவன், அதே மாதிரி அவன் வீட்டில் நிச்சயமாய் நானும் இருப்பேன் இல்லாது போனாலும் வலிக்காது. எதிர்பார்க்காமல் இருக்க பழகி விட்டேன் (உன்னாலே உன்னாலே).

நான் அனுதினமும் கற்ற பாடங்களை நினைவு கூர்ந்து, நிதானமாக செயல் படுத்தி என் உறவுகளுடன் சகஜ நிலைக்கு வர ஓரண்டாண்டுக்கு மேல் ஆனது. இந்த இடி விழும் வரை ஐஅம் ஸ்ட்ராங் பெர்சென் என்று நினைத்திருந்தேன். ஆனால் அடிபட்டபின் தான் உணர்ந்தேன் இந்த அடிதான் என்னை மேலும் வலுவாகவும், திரமாகவும் மாறுவதற்கு வழிச் செய்தது.

அது கிரக கோலாரா இல்லை எனக்கு கோலாரானு ஆராய்ச்சி பண்ணலை, எது எப்படியோ கடந்து வந்துவிட்டேன்..

நான் நானாக வாழாமல் நீயாக வாழ்ந்ததும், பத்து ஆண்டு காலம் என்னைத் தொலைத்ததையும் கண்டது உன் பிரிவினால் மட்டுமே… நீ பிரியாமல் இருந்தீருந்தால் நான் இப்படி ஒரு அவதாரம் எடுத்திருக்க முடியாது….

பத்து ஆண்டுகள் கழித்து எனக்குள் என்னை நான் பார்த்தாக உணர்ந்தேன். பிறருகாக வாழலாம் ஆனால் பிறராக வாழாமல் எனக்காக வாழும் நாள் இனிமையானதாக இருந்தது. வருத்தம் தான் பத்து ஆண்டுகள் என்னைத் தொலைத்ததற்கு. ஆயினும் சந்தோசப் பட்டேன் என்னை கண்டுக்கொண்டதற்கு.

ஒரு தெளிவு பிறக்க இந்த பிரிவு தேவைதான் ஆனால் நீ உன் 42 அகவையில் விட்டு போனதற்கு பதில், 32 வயதில் போயிருந்தால், சந்தோசமாக கைகுலுக்கி, கட்டி அனைத்து போய் வா என்று உன்னை நானே வழி அனுப்பி இருப்பேன். 42 வயதில் நீ போகுமுன் என் பத்து ஆண்டுகளை வீணடித்து விட்டோமே என்று சிறிது வருந்தி இருந்தால்கூட  எனக்கு இந்த (மரண)மனகஷ்டம் இருந்திருக்காது.

அந்த பறந்து போன நட்புகாக  வருத்தபட்டு ஒன்றும் இல்லை, ஏன் எனில் கடந்தது பத்து ஆண்டுகள் மிகவும் முக்கியமான பருவம்தான்.  நீ என்னை இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து கழட்டி விட்டிருந்தால் என் நிலை என்ன ?

உறவுகள்கூட என்னை கைகொட்டிச் சிரித்து இருக்கும், ஆனால் அவர்கள் என்னை இதுவரை ஒன்றும் குறை கூறாமல் இருப்பதை நினைத்து பெருமை பட்டுக் கொள்கிறேன். என்ன தான் இருந்தாலும் முதல் நிலை உறவுகளுக்கினை இந்த உலகினில் எதுவும் இல்லை என்று நானும் நினைக்க வழி வகுத்த உன் நட்புக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

நான் எல்லாம் நன்மைக்கே என ஸ்திரமாக நினைத்தது, இன்னும் நான் குறைந்தது 35 ஆண்டுகள் எனக்காக வாழ்வேனே என்றுணர்ந்த போது.அந்த முக்கியமான மணித்துளி இன்னும் என் நினைவில் பசுமையாக இல்லை பொக்கிஷமாக இருக்கிறது. என் நட்புகாக, நட்பினால் நான் வீணடித்தது/தொலைத்தது பத்து ஆண்டுகள் மட்டுமே என நினைத்த நொடியில் நான் புதிதாக பிறந்தேன்.

எனக்கு பல கஷ்டத்தையும், ஏமாற்றத்தையும், மாற்றத்தையும் தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்ல கடமை பெற்றுள்ளேன். கடந்த ஒரு ஆண்டாக மட்டுமே நான் நானாக திரும்பவும் வாழ ஆரம்பித்தேன் – இப்போ சொல்லுங்க நடப்பவை எல்லாம் நன்மைக்கு தானே ! ! !
வீழ்வேனென்று நினைத்தாயோ ? நான் இன்னும் கடந்து எழுவேன்,  மறுபடியும் விழுவேன் ஆனால் மீண்டும் எழுவேன் வீழ்ந்துவிடமாட்டேன்.

இதுவரை நடந்த பல விஷயங்களை உன்னாலே உன்னாலே என்று நான் சொல்லி சுகம், சோகம் என தந்திருக்கிறேன். இப்பவும் பெருமையாகச் சொல்றேன் நான் நானாக வாழ்கிறேன் உன்னாலே உன்னாலே.

எல்லாம் நன்மைக்கே, இதுவும் கடந்து போகும், நான் இன்னொரு தாக்குதலில் வெற்றி பெறும் தருணத்தில்…..

Advertisements

One thought on “நான் நானாக

 1. Recognize your gifts
  and unique talents and
  put them to good use.

  Dream of what you can
  become, but accept and value
  the person you are now.

  Acknowledge your flaws,
  but don’t underestimate
  yourself because of them.

  Reach for the impossible
  and do the best job you
  can do.

  Celebrate because you’re
  special, beautiful, and unique.

  Treat yourself well.
  Take good care of you.

  Believe you deserve the best,
  that you deserve to be loved.

  and others will love you
  for love begets love.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s