கடல் கடந்த நட்பு -பாகம் 1

கடல் கடந்த நட்பு – Across the Ocean about our friendship

பெயர் இமிதியாஸ் அஹமது (Imtiaz Ahmed)

இருப்பது ஜெத்தா (Jeddah)

தொழில் ஆரக்கிள் கன்சல்டண்ட் (Oracle Consultant)

பழக்கம் அறிமுகமானது இ ஆர் பி ஸ்டஃப் மூலமாக – இதுவரைப் பார்த்தது இல்லை (Introduced by : Erp Stuff)

நட்பின் காலம் 18 மாதம் (Friends for the past 18 months)

நல்ல நட்புக்கு சிறு உதாரணம் (Example of our healthy friendship)

எங்களுக்குள் ஒரு வாரமுன் நடந்த சிறிய சம்பாஷனையை உங்களுடன் பகிர நினைக்கிறேன். எப்பவும் நீ, நான் என்று போட்டியின்றி அவன் முதலில் என்னுடன் சாட்டிட ஆரம்பிப்பான். அவனுக்கும் என்னவோ ஒரு மாற்றம், என்னுடன் மூன்று நாட்களாக பேசவில்லை நானும் அலுவல் பிஸியில் அதை யோசிக்கவில்லை, அப்படி இருக்க திடீர் என்று எனக்கு அவன் நியாபகம் வர ( இரவு நேரம் 10.45), கூகிலுகுள் போக மனமின்றி, ஒரு ஃபோன் கால் பண்ணிவிடலாம் என்று காலிட்டேன். கால் எடுத்தவுடன், எப்படி இருக்கே என்று நான் கேட்க அவனோ கூகிளுக்குள் வா என்று இனைப்பைத் துண்டித்தான்.

கூகிளுக்குள் நான் நுழையுமுன், அவன் ஹை சொல்லிக் கேட்டது நீ நலமா? நலம் என்றதும். நீ தப்பா நினைக்கலைனா நான் ஒரு கேள்வி கேட்கவா என்று நீயும் தானே எனக்கு பிங் பண்ணலைனு?

பிறகு நான் சொன்னேன் இரண்டு நாட்களாக கொஞ்சம் பிஸி. விபிஎன் கனெக்‌ஷன்ல இருந்தததினால் பாதி நேரம் ஆன்லைன்ல இருக்கிற மாதிரி இருக்கும். ஆனால் இண்டெர்னெட் கனெக்‌ஷன் இருக்காது என்று நான் சமதானம் சொன்னேன்.

இரவு 10.45க்கு உன்னை அழைத்தது உன் நல விரும்பியாகவே, எனக்குள் ஒருவித ஃபீலிங் நீ டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணறியோனு அதான் கால் செய்தேன் என்று கூறினேன். நீ ஏன் பிங் பண்ணலைனு நான் கேட்கவே இல்லை, உன்னைப் பற்றி யோசித்தவுடன். எனக்குள் தோன்றியது நீ ஏதோ யோசித்து பிங் பண்ணலைனு அதான் ஃபோன் செய்தேன் என்றேன்.

பிறகு உண்மையைச் சொல்லவா என்று அவன் கேட்டுவிட்டு “ எனக்குள் ஒருவிதமான உணர்வு நான் மட்டுமே உனக்கு பிங் பண்ணுவதாகவும், நீ எப்பவும் என்னைப் போலவே பிஸியாக இருக்கிறாய் என்று.  நீயாக பிங் பண்ணுவதில்லை நான் மட்டுமே உன்னை டிஸ்டர்ப் செய்யறேனோனு ஒரு எண்ணம்.

நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் எதுவும் மனதில் வைத்துக்கொள்ளாதே, மறந்துவிடு, மனதில் பட்டதைக் கேட்டுவிட்டால் பிரச்சனை இல்லை என்றோம். I want this friendship forever my dear

பெயர் விஜயசாரதி

இருப்பது சென்னை

தொழில் ஆரக்கிள் கன்சல்டண்ட்

பழக்கம் அறிமுகம் -இஆர்பி ஸ்டஃப் ஸ்ரீதர் மூலமாக இதுவரை நாங்கள் நேரில் சந்தித்தது இல்லை

நட்பின் காலம் 28 மாதம்

இனைய முகவரி http://www.manalkayiru.com

பலருக்கு இவர் நல்ல நண்பராக இருப்பார், நல்ல ஆரக்கிள் கன்சல்டண்ட், இவை அனைத்தயும் விட நல்ல எழுத்தாளராக வரக் கூடியவர். நல்ல ரசனை மிகுந்தவர். முதலில் அவரது படைப்புகளை படித்தவுடன், எப்படி இவருக்கு டைம் இருக்குனு தான் யோசிப்பேன். எனக்கும் ரசிக்கத் தெரியும் என்று உணர்த்தியவர். நேரில் பார்த்தது கிடையாது, சாட்டிலும் அதிகம் பேசியது கிடையாது. ஆனால் இன்று நான் ப்ளாகிட மிக முக்கியமான நால்வரில் ஒருவர். சாரதி நீங்களும் ஒருத்தர் சந்தோசமா ?

கடல் தாண்டி வந்தவுடன் யோசிக்கிறேன், கடற்கரை வரை வந்து இருந்தால் உங்கள் இல்லத்திற்கு வந்து இருக்கலாம். அழையா விருந்தாளியாக எப்போ அழைப்பீர்கள்?

ஜூனியர் (இரண்டாம்) சாரதிக்கு வாழ்த்துக்கள்.

பெயர் ஜகதீஷ் பாபு ( TADAPATRI JAGDESH BABU)

இருப்பது அபுதாபி

தொழில் ஆரக்கிள் கன்சல்டண்ட்

நட்பின் காலம் 60 நாள் பழக்கம்

அறிமுகமானது இஆர்பி ஸ்டஃப் மூலமாக அறிமுகமான வேறு ஒரு நண்பரின் நண்பர் இவன். முதல் நாள் மெயிலில் பேசினோம், அடுத்த நாள் மொபைலில் பேசினோம், அடுத்த ஒரிரு நாட்களில் நேரில் கண்டோம்.

நல்ல நண்பர்னு சொல்லமாட்டேன், நல்ல காமெடியன், எந்தவித மனோபாவத்தில் இருந்தாலும், சிரிக்க வைப்பதுபோல பேசறேன்னு நினைச்சு கொஞ்சம் ஓவெரா காமெடியனாகி விடுவான்.

ஒரு நாளில் மூன்று தடவை ஃபோன் பண்ணி என்ன சாப்பிட்டேனு கேட்டு நீ மட்டும் சமையல் செய்து சாப்பிட்டா உடம்புக்கு ஒத்துக்காதுனு சாபம் குடுப்பான்.

ரொம்ப சீரியஸான விஷயத்தையும், சிரிக்கவைக்க வேண்டும் என்று பேசி என்னிடம் திட்டுவாங்குவான். நான் திட்டுவதையும் சீரியஸா எடுத்துக்க மாட்டான். (even if I scold he will not take it seriously and he will make comedy out of that also)

அபுதாபியில் என்னுள் ஏற்பட்ட முகத் தெளிவினை எனக்கே படம் பிடித்து காண்பித்தவன். உண்மையில் இவனால் மிக சந்தோசமாக இருக்கிறேன். வாரத்தின் இரண்டு நாள் லீவும் காணலை இவர்களுடன் கழிப்பதற்கு. இவனாலும், அடுத்து வரும் என்னுடன் பணிபுரியும் நண்பராலும் இனிமையாக கழிகிறது என்னுடைய நாட்கள்.

Jagdeesh, Thank you for your wonderful support in this strange place for a stranger and thanks to Surya Prakash Rao for introducing this guy to bring back my smiles.

பெயர் மதுரை சசிகுமார்

இருப்பது அபுதாபி

தொழில் ஆரக்கிள் டெக்னிகள் கன்சல்டண்ட்

நட்பின் காலம் 60 நாள்

நட்பு என்பதைவிட நாங்கள் சக பயணிகள், எத்தனை நாட்கள் பயணம் என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் இருவரும் ஒரே ப்ராஜெக்டில் பணி புரிகிறோம். ப்ராஜெக்ட் பயணம் முடிந்தும் நட்பு தொடர்ந்தால் நல்ல நண்பர் கிடைப்பார், இல்லையென்றாலும் இந்த பயணம் இருவரின் நினைவிலும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயம் இல்லை.

என்னுடைய ப்ளாகில் பல பதிவுகளுக்கு காரணமானவர். சுசிலாவின் விழா, மஹேஷின் அறிமுகம் என எனக்கு சில பல சுவரசியமான வாரங்கள் வர வழி வகுத்தவர்.

மதுரையில் இருந்து வந்ததால், தங்லிஷில் ப்ளாகிட்டால் உரிமையாக திட்டுபவர். தமிழ் ஆர்வம் மிகுந்தவர்.

நல்ல நண்பராவது எளிது ஆனால் நல்ல மனிதர் என்பதற்கு சில குணாதிசயங்கள் வேண்டும், மிகச் சிறிய வயதில் நல்ல மனிதராக இருக்கிறார். எனக்கு மட்டும் தெரிந்த அவரது நல்ல குணம் கூடிய விரைவில் அனைவருக்கும் தெரிய வரட்டும், அதுவும் என் ப்ளாக் மூலமாக வந்தால் இன்னும் சந்தோசம் எனக்கு. அடுத்து உங்களைப் பற்றிய செய்தி, உங்கள் திருமண வாழ்த்துச் செய்தியுடந்தான் வரவேண்டும் என்று உங்களுக்கு மிகவும் பிடித்த கர்த்தரைப் ப்ரார்தனைச் செய்கிறேன்.

மனிதம் மதங்களைத் தாண்டியது நண்பரே.

பெயர் சத்யமூர்த்தி

இருப்பது   குவைத்

தொழில் ஆடிட்டர்

நட்பின் காலம் ______

வெப் லிங்க் http://www.sathyamurthy.com

எனக்குத் தெரியாது எப்போ இவருடன் பரிச்சயம் எப்போதிலிருந்துனு அதனால் தான் நட்பின் காலம் ப்ளாங்கா இருக்கு. ப்ளாங்கா இருந்த என்னை ப்ளாக்கிட வைத்த நால்வரில் முதல் இடம் இவருக்குதான். சாரதியின் சகோதரர். மிக குறுகிய நேரத்தில் என்னுடன் பேசி, என்னையும் ப்ளாகிட வைத்தவர். ஜீனியஸ், இண்டலிஜெண்ட் அப்படினு நான் இவரைப் பற்றி ஏகமாய் பாராட்டலாம் அவரின் எழுத்தாற்றலைக் கண்டு.

இவரால் தான் நான் தமிழ் கதைகளை படிக்க ஆரம்பித்தேன் (இண்டர்னெட்டில் மட்டுமே). சுஜாதாவின் இந்த புக் படிக்கவும், அந்த புக் படிக்கவும் என்று சொல்பவர், ஹி ஹி நான் எந்த கதைகளும் படிக்கலை சார்.

மிக அருமையாக எழுதும் திரன் கொண்டவர். எழுதுவது எல்லாருக்கும் ஈஸி, ஆனால் சுவாரசியமாக எழுதுவது என்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும். இவரது எழுத்துக்களில் இவரது சிந்தனையும், அதனை சீரியஸாக சொல்லாமல் சிரித்துக் கொண்டே சொல்லும் நயமும் மிக அருமை. என்னுடைய சில ப்ளாக் ஆர்டிகளுக்கு ப்ரூஃப் ரீடர்/எடிட்டர் இவர்.

அரசியல், ஸ்டாக் மார்கெட், தொலைத் தொடர்பு, இசை, கதை, விளையாட்டு எது இல்லை இவரது ப்ளாகில். அனைத்தையும் சுவாரசியாமாக எழுதுவது என்பது தனி கலை.

என் கண்களுக்கு இவர் ஒரு நவ நாகரிக சிந்தனை சிற்பி.

நான் சொல்வதைவிட நீங்களே அவரது ப்ளாக்கை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

நட்பு  பட்டியல் மிக நீளமானது, சாரதி ஸ்டைலில் சொல்லவேண்டுமானால் இது பாகம் 1.

Advertisements

6 thoughts on “கடல் கடந்த நட்பு -பாகம் 1

  1. நல்ல பதிவு. என் சகோதரரை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி. ஆங்கில வார்த்தைகளை தமிழில் தவிர்த்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

  2. அடுத்த பதிவிலிருந்து ஆங்கில வார்த்தைகளை தவிர்க்க பார்க்கிறேன்.
    தங்கள் சகோதரர் எனக்கும் நல்ல நண்பர், இந்த இனையத்திற்கான பெயரைத் தேர்வுச் செய்த்தும் அவர் தான் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்.

  3. நீங்க வாலி, வைரமுத்து, கமல், ரஜினி ரேஞ்சுக்கு போய், என்னை பாசத்தலைவனாக்கி, பாராட்டுவிழா நடத்தி விட்டீர்களே!

    • உண்மையை மட்டுமே சொன்னேன்…
      அதிலும், இந்த ப்ளாக் பெயரை செலக்ட் செய்தது நீங்கள் தான் என்பதை மறந்துவிட்டேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s