coolsummer2010

வருடந்தோரும் வருவது இதற்கு என்ன முக்கியத்துவம்னு முனுமுனுப்பது தெரியுது.

கோடை காலம் வந்து விட்டது வறுத்து எடுக்கும் வெயில், இந்தக் காலத்தில் உடல் அதிகமாகச் சூடாகி பல்வேறு உடல் கேடு வரும் என்பதால் ஒரு அக்கரைத் தான்

உடல் சூட்டைத் தணிக்க பல வழிகள் இருந்தாலும், நிச்சயமாகத் தெரிந்தாலும் ஃபாலோ பண்ணமாட்டோம்…

உஸ் என்ன வெயில் என்று கத்திரி வெயில் காலத்தில் மட்டும் அல்ல, எப்பவுமே அப்படி தான் இருக்கு க்ளோபல் வார்மிங் அது இது என்றுச் சொன்னாலும் நம்மளோட வார்மிங் நம்ம கையில் தானே.

ப்ளீஸ் இந்த வருஷத்திலிருந்து கொஞ்சம் எஸ்கேப் ஆவோமே… வெறும் இரண்டு மாதம் (மே, ஜூன்) மட்டும் சுட்டெரிக்கும் காலம் போய்விட்டது, இப்பவே சுட்டெரிக்கும் வெயில் அது ஜுலை வரை இருக்குமே என்று தான் இதை ப்ளாகிட வேண்டிய அவசியம்…

சுட்டெரிக்கும் வெயில் அதிகமாகும்போது, நாம் எரிச்சல் அடைவதுடன், உடலும் எரிச்சலடையும். தண்ணீரை நிறைய குடிக்க உடல் சூடு பறந்து போகும்.

இங்கு பட்டியலிட்டவை அனைத்தும் நான் கேட்டதும், படித்ததும், நான் கடந்த காலங்களில் கடைப் பிடித்ததும் தான் (மோர் பிடிக்காதக் காரணத்தினால் இந்த பட்டியலில் 90 சதவிகதத்தை நான் கடைப்பிடித்தே ஆக வேண்டும்)

 1. காலையில் எழுந்தவுடன் ஒரு செம்பு தண்ணீர் குடிக்கவும்.
 2. ஃப்ரிட்ஜ் வாட்டர் தவிர்த்து, பானையில் தண்ணீர் ஊற்றி, சிறிது வெட்டிவேரையும் போட்டு வைத்து அந்த தண்ணீரைப் பருகவும்.
 3. உடல் சூட்டைத் தணிக்க நல்ல குளிர்ச்சி தரும் பழவகைகளைச் சாப்பிடவும் (தர்பூசனி,விலாம் பழம்,கிர்ணிப்பழம், நுங்கு,வெள்ளரி).
 4. சஃப்ட் டிரின்க்ஸ் மற்றும் அல்காஹால் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
 5. ஃப்ரெஷ் ஜூஸ்களை பருகவும். லெமன் ஜூஸில் உப்பு சேர்த்து உட்கொள்ளவும்.
 6. இளநீர், லஸ்ஸி, நீர்மோர், சக்கரையை தவிர்க்கவும். நீராகாரம் உடலுக்கு நல்லது.
 7. தினமும் வீட்டில் இருக்கும் வெந்தயத்தைச் சிறிது தண்ணீரில் ஊரவைத்து அந்த தண்ணீரை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் பருகவும்.
 8. தினமும் ஒரு வாழைப் பழம் சாப்பிடுவது உடல் சூட்டைத் தணிக்கும்.
 9. உணவு வகைகளில் அரிசி வகைகளை குறைத்து, சாலட் வகைகளையும், பச்சைக் காய்கறிகளையும், நிறைய கீரைவகைகளையும் சேர்த்துக் கொள்ளவும்.
 10. மசாலா அதிகமாக இல்லாமலும், எண்ணையில் பொரித்த உணவுகளையும் தவிர்ப்பது மிக நல்லது.
 11. வாரத்தில் இருமுறை (ஒரு நாளாவது) எண்ணெய் குளியல் உடல் சூட்டைத் தணிக்கும். தினமும் சில்லுனு ஒரு குளியல் இல்லை இரண்டு முறை குளிக்கவும்
 12. வியர்வை வழிந்தால் துடைத்துக் கை(பை)யில் கர்சீஃப் அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்துக் கொள்ளாவும்.
 13. பேரிச்சம்பழம்,  கசகசா, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை முதல் நாள் இரவு சுத்தமான நீரில் ஊற வைத்து, காலையில் அவற்றை மிக்சியில் அரைத்துக் குடித்தால், வெயிலில் எவ்வளவு அலைந்தாலும் உஷ‌்ண‌ம் ந‌ம் உடலை‌த் தாக்காது.
 14. வெயிலின் வேகத்தில் இருந்து தப்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குளிர்ந்த நீரில் (ஐஸ் வாட்டர் இல்லை) முகம் அலம்பவும்.
 15. வெள்ளரிக்காய் அரைத்துத் தேய்த்துக் கொள்வதால் வேர்குறு மற்றும் கழுத்துப் பகுதியில் கறுப்பு மறைந்துவிடும்.
 16. நவீனயுகமாக இருந்தாலும், நம்மைக் காத்துக் கொள்ள காட்டன் உடைகளை உடுத்துவது நம் நலனுக்கே, மற்றவை வெயிலின் உக்கிரத்தை நம் உடலுக்குள் செலுத்தும்.
 17. பகலில் வெளியே செல்பவர்கள், வெயிலில் இருந்து தலையைக் காத்துக் கொள்ளத் தொப்பி அணியவும்.
 18. சன்ஸ்க்ரீன் க்ரீம்களை பயன்படுத்தவும் J
 19. வீட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருக்கும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.
 20. கம்ப்யூட்டரைத் தேவைக்கு ஏற்ப உபயோக படுத்தவும்.
 21. நேரத்தில் தூங்கவும் சீக்கிரமாக எழுந்து, வெயிலின் உக்கிரத்துக்கு முன், அலுவலகத்தை அடையவும். ஆஃபிஸிலிருந்து வெயில் தனிந்தவுடன் கிளம்பவும்.

சம்மரை சம்மட்டியால் அடிக்க இது போதும்…

Advertisements

3 thoughts on “coolsummer2010

 1. இந்த 21ல் இருபதாவதா சொல்லப்பட்ட விஷயத்தை ஃபாலோ செய்வது சிரமம்!

  19வது அயிட்டம் நித்யானந்தா பார்த்தால் கோபிப்பார். அவர் கதவையே திறக்க சொன்னார், நீங்கள் ஜன்னலை கூட மூடு என்கிறீர்கள்.

  17வது அயிட்டம் தலைய காக்க அவரோட ரசிகர்கள் இருக்கிறார்கள். நாம எதுக்கு தொப்பி போடணும்? அவரே பாசத்தலைவனுக்கு தொப்பி போடாததால்தானே ப்ராப்ளத்துக்கு போய் முன்னாள் தொப்பி கட்சியின் ஆதரவை எதிர்பார்க்கிறார்?

  மொத்த அயிட்டங்களிலும் விட்டுப்போன ஒன்று – ஆண்களுக்கானது – “வெயில் அதிகம் இருப்பதால், உடலில் நீரோட்டம் அதிகம் தேவை. ஜொள்ளு விடும் ஆசாமியாய் இருந்தால் இங்கே சொன்ன குறிப்புகளை டபுள் ஸ்ட்ராங்காக்கிக் கொள்ளுங்கள்”

 2. 5000 iruka enku kavalai illai adu matum ellamal en kathali arukill erukum podu kodai veilllllllllllll enku thrivatu ellai

 3. Pingback: 2010 in review « MAIDENPOST

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s