Archive | March 2010

என்ன சத்தம் இந்த நேரம்

படம் : புன்னகை மன்னன் , குரல் : பாலு

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா.. (என்ன)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ (என்ன)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ

மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்

Advertisements

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?

(மயங்கினேன்)

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?

இரு கண்ணும் உன் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?

(மயங்கினேன்)

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்

மாலைமங்களம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?

ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு!

அந்தநாளை எண்ணி நானும்
அந்தநாளை எண்ணி நானும் வாடினேன்

ஆடாத மனமும் ஆடுதே

ஆ..ஆ..ஆடாத மனமும் ஆடுதே
ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே
ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம் ( ஆடாத மனமும் ஆடுதே)

கோவை கனிபோலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் வானழகே
கோவை கனிபோலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் வானழகே
இனி வானோரும் காணாத ஆனந்தமே(2)

ஆடாத மனமும் ஆடுதே
ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம் ( ஆடாத மனமும் ஆடுதே)

ரோஜா … ( ஆ.. ) புது ரோஜா ( ம்ம்.. )
அழகு ரோஜா மலர் தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ
பாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
ரோஜா மலர் தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ
பாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
இனி பேசாமல் காண்போம் பேரின்பமே (2)

(ஆடாத மனமும் ஆடுதே)

பாட்டு வரும் பாட்டு வரும்

படம் : நான் ஆனையிட்டால்

பாட்டு வரும் பாட்டு வரும்
உன்னை பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

(பாட்டு வரும் )
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்…
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும் – (பாட்டு வரும் )

காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்…
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் காவியம் நானே… (பாட்டு வரும் )

மனம் என்னும் ஓடையில் நீந்தி வந்தேன்
அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்….
ஏந்திய கையில் இருப்பவள் நானே
இறைவனை நேறில் வரவழைப்பேனே … (பாட்டு வரும் )

இடியென வந்த அழைப்பு ! !

சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது….

சில மாற்றங்களுடன் உங்களுக்காக…

என்னுடைய நெருங்கியத் தோழியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அவள் வீட்டில், அன்று மாலை விருந்து ஒன்று இருப்பதாகவும், அதற்காக என்னை அழைத்தாள். நீ கண்டிப்பாக வரவேண்டும், வருவாய் அல்லவா என்று கேட்டாள், நீ இப்படி கேட்க வேண்டுமா? உனக்காக கண்டிப்பாக வருகிறேன் என்றேன். தோழியின் வீட்டில் விருந்து என்றதும் மிகவும் சந்தோசப் பட்டேன் காரணம் அறியும் முன்.

நாங்கள் இருவரும் இரண்டு நாளைக்கு முன் பேசியது தான் இருவரும் எங்களது இயந்திர தனமான வாழ்க்கையில் இரண்டு நாட்கள் பேசாமல் இருந்ததும் அப்போது தான். இந்த அழைப்பு சுகமாக இருந்தது விருந்து எனக்கு மட்டுமே என்பதால். விருந்திற்கான காரணத்தை நான் கேட்க நினைத்தேன், என்னை கேட்க விடாமல் அவளோ மிகவும் உற்சாகமாக பேச தொடங்கினாள்.

அந்த பேச்சின் சுவாரசியத்தில், மிகவும் எதார்த்தமாக அவள் கணவருக்கு பக்கத்து மாநிலத்திற்கு மாற்றலாகியுள்ளதாகவும், வெகு விரைவில் அங்கு குடிபெயர இருப்பதாகவும் கூறினாள்.

இந்த வேலையால் அவளது கணவரின் அலுவலகத்தில் அந்தஸ்து உயர்வு மற்றும் அவளது தாயாரின் வீடு பக்கத்தில் இருப்பதாகவும், தங்கள் உறவினர்களை அனைவரும் அருகினில் இருப்பதால் இந்த மாற்றம் அவளுக்கு மிகவும் சந்தோசம் தருவதாகவும் தெரிவித்தாள். அதற்கு தான் இன்று மாலை விருந்து என்றும் கூறினாள். என்னை மிகவும் கலவரப் படுத்திய செய்திதான் இது. நான் உறைந்து போனேன் என்றே கூற வேண்டும்.

நானும் என்னுடைய தோழியும் பல ஆண்டுகளாக உயிர் தோழிகள். அவள் மிக எதார்த்தமாக கூறியதாலோ என்னவோ, எனக்கு மிகவும் வலித்தது. அவள் சந்தோசமாக பேசிக் கொண்டே இருந்தாள், நானோ என் விழிகளை துடைத்துக் கொண்டே இருந்தேன், மிகவும் பிரயத்தனப் பட்டேன் என் கண்ணீரை மறைக்க (மிக நெருங்கிய தோழியாயிற்றே சிறிது குரல் பிசகினாலும் கண்டு பிடித்துவிடுவாளே).

எங்களுக்குள் பல ஆண்டுகளாக வளர்த்த இந்த நட்பை, உயிரில் கலந்த ஒரு மென்மையான உறவை கொன்று, ஒரு சவப்பெட்டியை குழிக்குள் போடுவது போன்ற ஒரு உணர்வு.

என்னால் அவளுடன் சகஜமாக பேச முடியாத போதும், அவளிடம் சகஜமாக பேச முயன்றேன். அவளின் அந்த சந்தோச பகிர்விற்கு முற்றுபுள்ளி வைக்க முடியாமல், அவளுடனான அந்த சம்பாஷனையை துண்டிக்க விரும்பாமல் தொடர்ந்தேன்…

அவளாக அந்த தொலைப்பேசி அழைப்பினைத் துண்டித்தபின், நான் என்னுடைய படுக்கை அறையில் நுழைந்தேன். விம்மலுடன் அழுகை என்னை வாட்டியது. எப்படி இன்று மாலை என் தோழியை சந்திப்பது என்று நினைத்து வருந்தினேன். இதுவே எங்களுடைய கடைசி சந்திப்பாக இருக்குமோ என்று கலங்கினேன்.

என்னை விட்டு எப்படி அவளால் போக முடியும்? என்று நினைத்தேன். எங்களுக்குள் பல காலமாக ஊறிய இந்த நட்பினை அசைபோட்டேன். என் தோழி என்னருகே இல்லாமல் நான் என்ன செய்வேன் என்று வருத்தப் பட்டேன்.

என்ன செய்வது என்று யோசித்தேன், என்னுடைய லேப்டாப்-பை எடுத்தேன், ஒரு பிபிடி எடுத்து எங்களுடைய நட்பினை அதில் வரைய ஆரம்பித்தேன். ஆயிரம் ஸ்லைடுகளில் என்னுடைய தோழி என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை தெளிவு செய்தது.

அந்த நொடியில் தான் அறிந்தேன் நான் அவள் மீது எப்படிபட்ட அன்பை வைத்து இருக்கிறேன் என்றும், எனக்குள் எப்படி பட்ட பாதிப்பை அவளது  நட்பும், அவளும் ஏற்படுத்தி இருகிறாள் என்று.

முதன் முறையாக கடவுளின் அனுகிரகத்தால், எனக்குள் ஒரு நல்ல நட்பினை உணரமுடிந்ததாக உணர்ந்தேன். நான் நல்ல தோழியாக பலருக்கு இருந்து இருக்கிறேன் எனக்கு ஒரு நல்ல நட்பை உணர்ந்தது அவளின் அரவனைப்பில். அவளது நட்பு ஒரு வரமாகத் தோன்றியது.

நான் நல்ல தோழியாக இருந்து மற்றவரிடமிருந்து விடைபெறும் தருணத்தில், நான் போனால் என்ன வேறு ஒரு நட்பு என் இடத்தை நிரப்பும் என்று எதார்த்தம் பேசி வந்த எனக்கு அடுத்தவரின் வலி புரிந்தது, என் தோழியின் பிரிவு என்ற நினைவு. எப்படி இதில் இருந்து மீண்டு வரபோகிறேன் என்ற பயமும் கூடவே வந்தது.

எப்படி அவளால் என்னைவிட்டு போக முடியும் என்று யோசிப்பதை சிறிது மாற்றி யோசித்தேன், அவளால் என்னை விட்டு போக முடியும், இருக்க முடியும் என்கிற போது என்னாலும் இருக்க முடியும்.

எப்படி அவளை விட்டு இருப்பேன் என்று இருந்த நான், கொஞ்சம் நிதானமாக சிந்திக்கலானேன் அவள் எனக்கு பலமா? பலவீனமா என்று யோசித்தேன். பலமாக யோசித்ததால், அவள் எனக்கு பலம் என்றால் இந்த பிரிவு என்னை மேலும் பலமாக்கும், பலவீனமாக இருந்தால் அதனை இப்போதே உதறி விடுவதே மேல் என்று எண்ணம் கொண்டு, அன்று மாலை அவள் வீட்டு விருந்துக்கு போக தயாரானேன்.

இவள் எனக்குள் தந்திருந்த பாதிப்பை யோசிப்பதை விடுத்து, மற்றவரிடம் நான் ஏற்படுத்திய பாதிப்பை நினைத்தேன். பாதிப்பு என்று சொல்வதை விட என்னுடைய மற்ற உறவுக்ளையும், நட்பினையும் ஆராய்ந்தேன். இதயம் இவளுக்காக ஏங்கினாலும், உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், அவள் என்னை பிரியபோவது. முற்றிலும் உண்மை.

அதனால்தான் என்னமோ, மற்ற உறவுகளும், நட்பும் அருகினில் இருந்தபோதும், நான் அலட்சியமாக இருந்தது என்னை துளைத்தது. இவள் என்னை மட்டும் இல்லை என்னுடைய அனைத்து சுற்று நண்பர்களையும் ஒரு படி கீழே தள்ளிவிட்டாள் என்று உணர்ந்தேன். இருப்பினும், அனைத்து வட்டமும் என்னை நேசித்தை உணர்ந்தேன். ஒவ்வொரு நட்பிலும் ஒரு உறவு இழையோடியதை உணர முடிந்தது.

அதனை நினைத்தவுடன் அவர்கள் அனைவரும் என் கண் முன்னே தோன்ற,  அந்த நட்பின் அனுபவத்தையும், அதற்கான நன்றியையும் அவர்களுடன் தெரிவிக்க நினைத்தேன். அந்த நொடியில் நான் மற்ற நட்புக்களை உணர்ந்தேன்.

நட்பை சிறிய வட்டத்துக்குள் சுற்றிவரச் செய்யாமல் பறந்து விரிந்த இந்த பூ உலகில் கிடைத்த நேரத்தில், கிடைத்த விதத்தில் நேரிலோ, நெட்டிலோ, சாட்டிலோ, தொலைபேசியிலோ எந்த ஒரு வாயிலாகவோ என்னுடைய நட்பினை தொடர நினைத்தேன். முடிவு இந்த பதிவு உங்களில் பலரும், என்னைப் போல் அவதிபட நேரிடலாம்.

ஒரே ஒரு நட்பு என்று இருந்தால், நட்பில் விரிசலோ, மன சங்கடமோ, பிரிவோ வரும் போது, நம் உயிரைக் குடிக்கும் நிலைக்கு வரும்.

நட்பினை சிறிய வட்ட்த்துக்குள் தேக்கிவிடாதீர்கள் ! ! !

நட்புக்குள் இவர் உயர்ந்தவர், இவருக்காக உயிரும் கொடுப்பேன் என்று எதுவும் இன்றி இருவரும் அவர் அவராக இருக்கும் பட்சத்தில் நட்பிற்கு முடிவு இல்லை.

எப்படி நம்முடைய நட்பு வட்டத்தை நம்மை பலவீனமாக்காமல் பலமானதாக முற்படுவது என்று அடுத்த பதிவினில் கான்போம்.

ஹைடன் மந்திரம்

ஐபிஎல்-இல் எனக்கு பிடித்த அணி சென்னையின் சென்னை சூப்பர் கிங்ஸ். அதுவும் இந்திய கேப்டனின் தலைமையினால் என்று சொல்லலாம். நான் பிறந்த மண்ணை நானே ஆதரிக்கலை என்றால் அப்புறம் வேறு யாரு ஆதரிப்பார்கள்.

சென்னை சூப்பர் ராஜாக்கள், டெல்லி டேர் டெவில்ஸ் மோதும் ஐபிஎல் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட இதை எழுத வேண்டும் என்று தோன்ற வில்லை.

இன்று விடுமுறை நாள், நமக்கு நல்ல டைம் பாஸ் ஆகும் என்று நேற்றே நினைத்து அனைத்து வேளைகளையும் மதியம் 2.30(அங்கே 4 மணி) மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்று காலை முதலே ஒரு துடிப்புடன் தான் இருந்தேன், ஆம் தோனி இன்றி சென்னை ராஜாக்கள் எப்படி விளையாட போகிறார்கள். எதிர்த்து விளையாடும் அணியும் நன்கு பலம் வாய்ந்த டெல்லி டேர் டெவில்ஸ்.

என்னடா நம்ம இந்தியக் கேப்டன் தோனி இல்லையே ! ! ! தேவைக்கு நம்ம கேப்டன் விஜயகாந்தைக் கூப்பிடலாமா என்று எண்ணினேன். தமிழுக்கும், நம்ம சென்னைக்கும் பெருமை சேர்க்க அவரைவிட்டால் யாரால் முடியும், ஒரே பந்தில் ஒன்பது சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் அவரிடம் தானே உண்டு.

மேட்ச் ஆரம்பித்து முதல் நான்கு ஒவரிலேயே இதைப் பார்த்து என்னோட டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம், சேவாக் அடித்து, துவைத்து, கிழித்து முடிக்கட்டும் என்று ஒரு சின்ன தூக்கம் போடலாம் என்று நினைத்து டி.வி ஆஃப் செய்தேன்.

நான் தூங்க போனால் டெல்லி என்ன தூங்கி விடுமா, கொஞ்சம் கடினமான இலக்கை நிர்னையித்தனர் என்றே சொல்ல வேண்டும். ஆம் 185 ரன்கள் இருபது ஒவர்களில் எடுத்தனர் டெல்லி அணி.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியசென்னையின் பதிலடி ஆட்டம் கான டி.வி முன் அமர்ந்தேன்.

சின்ன பாப்பா பெரிய பாப்பா என்பது போல நம்ம குட்டி பார்த்தீவ் பட்டேலும், மேத்யூ ஹைடனும் களம் இறங்கினார்கள்.

சிறிது நேரத்திலேயே பரிதாபமாக பார்த்தீவ் ரன் ஔட்டாக, நான் மலையாக (மலையை) மட்டுமே நம்பியிருந்தேன்.

ஹைடன் அடித்தால் மட்டுமே இன்று வெற்றி கிடைக்கும். சிலிர்த்து எழவேண்டுமே சிங்கம் என்று பிரார்த்தனைகள் வேறு எனக்குள்.

ஆஹா வெகு நாளாக எதிர் பார்த்த ஹைடனின் சூராவளி ஆட்டம் ! !

ஹைடன் ஔட் ஆகும் வரை நான் இதைப் பற்றி யோசிக்கவில்லை. கூகிள் புஸ் போட நினைத்தேன் பின்னர் தான் தீர்மானித்தேன் இந்த ஆட்டம் எனக்கு மிகவும் பிடித்தது அதனால் ப்ளாகிடலாம் என்று.

ஆஸ்திரேலியர்களுடன் விளையாடும்போது இதை மாதிரி ரசித்தேனா, நிச்சயமாக இல்லை, ஹைடனின் ஆட்டத்தை ரசிக்க நான் ஆஸ்டிரேலியராக இருந்து இருக்கவேண்டும். இந்தியராக அவரின் ஆட்டத்தை ரசிக்கும் வாய்ப்பை கொடுத்த ஐபிஎல்-க்கு நன்றி.

சென்னையில் அடித்திருந்தால், மெரினா அலைகள் ஆர்பரித்திருக்கும். என்னமோ தலைநகரில் வரவேற்பு கொஞ்சம் குறைவு தான். ஏழு சிக்ஸர்களும், 9 நான்கும் அடித்து நுறு ரன்களும் அடித்துவிடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், மிஸ்ராவால் மிக அருமையாக வீசப்பட்ட பந்தை, மிதமானவேகத்தில் அடிக்க,  அருமையான கேட்ச்-ஐ பிடித்து அவரை வெளியேற்றினார் தில்ஷான்.

மைதானத்திற்கு வெளியே இப்படி அடிக்கவேண்டும், என்று பயிற்சி மேற்கொண்ட மோர்கெல் வந்த வேகத்தில் வெளியேறினார், இம்முறை, தில்ஷான் பந்து வீச நேராக பந்து மிஸ்ரா கையில் பிடிபட, நம்ம மோர்கெல் பெவிலியன் திரும்பினார், திரும்ப அங்கே போய் பிராக்டிஸ் பண்ணுங்க.

கெம்ப் பின் மிடில் ஸ்டம்பைத் தகர்த்த போதும் சென்னையின் வெற்றி நிச்சயமாகிவிட்டது.

இன்றைய கேப்டன் சுரேஷ் ரெய்னா, இந்திய கேப்டன் தோனி போன்றே மிகவும் நிதானமாக ஆடி வெற்றியை தேடி தந்தார்.

வெற்றி ஹைடனின் அதிரடிக்கு கிடைத்த வெற்றி. மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டுடன் ஹைடன். சூப்பர் சிக்ஸ் மட்டும் இல்லை சூப்பர் ஸ்மைலுடன்.

ஐபிஎல்-இல் மட்டும் இல்லை சென்னை-னாலே தலைநகருக்கு கொஞ்சம் நடுக்கம்தான.

தொடரட்டும் இந்த வெற்றி நம்ம சென்னை சூப்பர் ராஜாக்களுக்கு ! ! !

இறைவா உனக்கு நன்றி

பெரியார்தசனுக்கு அறிமுகம் தேவையில்லை. அனைவரும் அறிந்ததே அப்படி இருந்தும் இன்று இவரைப் பற்றி எழுதும் அளவிற்கு என்ன என்று.

தமிழக பேரசிரியர் எனும் ஒருவர் முஸ்லீம் மதத்தை (இஸ்லாத்தை) பின்பற்றுவது பெரிய விஷயமில்லை, மதத்திற்கு மதம் மாறுவது பற்றி எழுதி என்னை அரசியல்வாதியாக மாற்றிக் கொள்ளும் எண்ணம் இல்லை.

பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவியதால் மிகவும் சந்தோசம் அடைந்தேன் என்றே சொல்ல வேண்டும்.

தான் மேற்கொண்ட பல மதங்களைப் பற்றிய ஆய்வுகளினால் அவர் கண்ட உண்மை அல்-குர்-ஆன் மாத்திரமே இறைவனிடமிருந்து அருளப்பட்டு இன்றும் அதே வடிவில் உள்ளது என்பதை தாம் கண்டுகொண்டதாகவும், அதன் அடிப்படையில் அவர் இஸ்லாத்தை தழுவுவதாகவும் அரபுசெய்திகள் கூறுகிறது.

கடவுள் இல்லை எனும் கொள்கையுடைய பெரியாரின் கொள்கைகளை கொண்ட இந்த தாசன் தனது இயற்பெயரான சேஷாசலத்தை மாற்றி பெரியார்தாசன் ஆன இவர், இஸ்லாத்தை பின் பற்றுவதினால் அவருக்கு என்ன ஆதாயம் என்று ஆராயாமல், அவருக்கு கடவுள் நம்பிக்கை வந்ததை அறிந்து ஆனந்தபட்டேன்.

அப்துல்லாஹ்வாக உரு மாறிய பெரியார்தாசனுக்கு அல்லாவை கடவுளாக கடைசிவரை நினைத்து ஐந்து வேளை தொழுகை நடத்தினால் மிகவும் மகிழ்ச்சியே.

“தான் ஊரறிந்த நாத்திகனாக இருந்ததாகவும் பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்த்தாகவும், இந்த தேடல் தான் தன்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது” என்றும் அவர் ரியாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

அப்துல்லாஹ்விற்க்கு இஸ்லாமிய நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து இருந்தாலும், இறைவன் இருப்பதாக ஆராய்ச்சிகளால் அறிந்துக் கொண்ட அவருக்கு நாமும் வாழ்த்து தெரிவிக்க கடமைப் பட்டு இருக்கிறோம்.

கடவுள் இருக்கிறார் என்று  ஒரு மதத்தை பின் பற்றுவதற்கும் பெரியார் தாசனுக்கு நன்றி.

இப்படி ஒரு நிகழ்வுக்காக இறைவனுக்கும் நன்றி ! ! !