நாடு கடந்து கிடைத்த நட்பு

மஹேஷ் எனக்கு அறிமுகமாகியது சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்னர். நாங்கள் கடைசியாக சந்தித்து சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.

மஹேஷ் மட்டும் அல்ல, இன்று மஹேஷின் மனைவி புவனாவும், நானும் பல நாட்கள் அவள் வீட்டில் பேசிக் கொண்டு இருந்த நாட்களை எண்ணினேன்.

எனக்கும், என் படிப்பிற்கும், சிறிதும் சம்பந்தம் இல்லாத ஒரு டியூஷன் செண்டரில் அறிமுகம் ஆனோம் நாங்கள். என் தங்கையும் அங்கே படித்தாள், அவளிடம் கேட்க வேண்டும் இவர்களை நினைவில் இருக்கிறார்களா என்று. (கண்டிப்பாக இருக்காது).

அவரவர் வாழ்க்கையிலிருந்து வெவ்வேறு பாதைகளில் பயனித்தக் காரணத்தாலும், யாஹூவும், கூகிளும், ஃபேஸ்புக்கும் அன்றைய தினத்தில் எங்களுக்கு அறிமுகம் இல்லாத காரணத்திலும் நட்புக்கள் டச்சில் இல்லாமல் போனது.

கல்லுரியில் படித்துக் கொண்டு, நண்பர்களோடு அரட்டை என துள்ளித் திரிந்த அந்த நாட்களை நான் நினைத்துப் பார்த்ததே சுமார் 12 ஆண்டுகள் கழித்து தான்.

சுப்பிரமணியன் வைத்தியனாதனாக (எ) சுப்பு அலுவலகத்தில் ஒரு இ-மெயில், அது அலுவலக நிமித்தமாகவே, அப்போது படித்துவிட்டு, ஆஹா ஒரு தமிழ் ஆளிடமிருந்து என்று தான் நினைத்தேன். வெவ்வேறு லொகெஷனில் வேலைச் செய்வதால் நேரில் எல்லோரையும் காண்பது என்பது அரிதானது. அப்போதும் தெரியாது, அந்த மெயிலுக்கு பின் நாங்கள் மொபைலில் சம்பாழ்ஷித்த போதும் தெரியாது அது என்னை நன்கு அறிந்தவரின் குரல் என்று.

சுப்புவை நான் சந்தித்து ஒரு வித்தியசமான அனுபவமாக தான் இருந்தது. நாங்கள் பணி புரியும் (க்ளையண்ட்) கம்பனியின் ஐந்தாம் ஆண்டு விழாவானது ஒரு பெரிய ஹோட்டலில நடந்தது எப்போதும் போல சசிகுமாரும், ஜிம்மியுடன் கலந்துக் கொண்டோம்.

அப்போதும் எனக்கு தெரியாது நான் சுப்புவைச் சந்திப்பேன் என்று. அலுவலகத்திலிருந்து எல்லோரும் வருவார்கள் என்று தெரியும் ஆனால் நான் சந்திக்கும் முதல் முகமே சுப்புவாக இருந்தது ஒரு ஆச்சரியம் என்றால், தமிழ் முகமாக இருந்த்தால் வெகுவிரைவில் ஹெலோ சுப்புனு சொல்லி, பக்கத்தில் இருந்த சசிகுமார் ஒரு ஹெலோ சொல்ல சுப்புவோ அதை கண்டுக்காமல் என்னை யார் என்று யோசிக்கலானார். ஏன் இவன் நம்மள இப்படி வைத்த விழி மாறாமல் பார்க்கிறான் என்று யோசித்தாலும், எனக்கும் ஃபெமிலியாரான ஃபேசாக சுப்புவின் முகம் பட்டாலும் சசிகுமாரின் குமுரலுக்கு முன் அந்த இட்த்தில் இருந்து நகர்ந்தோம்.

சுப்புவை உடனே அடையாளம் தெரியவில்லை, புலம்பி தள்ளிவிட்டார் சசி, என்ன இது நான் ஹெலோ சொல்றேன் என்னை மனுஷனாகவே நினைக்கலைனு. அப்போதும் ச்சியிடம், எனக்கும் அவன் முகம் பரிச்சயமான முகமாக இருக்கு அவனும் யோசிக்கிறானு நினைக்கிறேன் என்று சமாதானம் சொன்னேன்.

அதற்குள் சுப்பு தன் மனைவியுடன் கைபேசியில் தொடர்பு கொண்டு, நான் யார் என்பதை தெரிந்துக் கொண்டு, நீ என்று சொல்லி முடிப்பதற்குள் நானும் அதை ஆமோதித்து, ஆம் என்றேன். ஆனாலும் எனக்கு இந்த சுப்புவைத் தெரியாது.. ஆம் உன்னோட அஃபிசியல் நேம் சுப்புவா, ஆனால் எனக்கு உன்னை சுப்புவாகத் தெரியாதே என்றதும், மஹேஷ் என்றவுடன் மேலும் நாற்பது நண்பர்களின் முகம் கண் முன்னே வந்தது.

ஹே பரவாயில்லையே என்னை அடையாளம், தெரிந்துக் கொண்டாயே என்றும், உன்னோட ஃபேசில் ஒரு மாற்றமும் இல்லை, ஆனால் கல்லூரி மாண்வனாகத் சிறு பிள்ளையாகத் தோன்றியவனை, என் கண் முன் ஒரு சற்று தடிமனான உடலுடன் பார்த்தவுடன் தெரியலை என்று அசடு வழிந்தேன்.

நட்பா, உறவா என்று பேசிகிறவர்களுக்கு, இந்த நட்பின் அருமை எப்படி புரியும். இதுவரைப் பார்த்திராத உறவினரைப் பார்த்தால்கூட எங்களுக்குள் வந்த சந்தோஷம் மாதிரி வருமா? சிம்பிளா ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது அந்த உணர்வுக்கு பெயரை.. உறவா நட்பா என்று விவாதம் வந்தால் நட்பு தானுங்கோ என்று டெல்லி கணேஷுக்கு(அபுதாபியில் ஒரு விவாத மேடை நடத்தினார்) சொல்லிடுங்கோ ! !

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s