female’s friendship

பெண்களும் நட்பும்

ஆண்டுகள் பல ஆகியும் சுருங்காமல் சிரிக்கும் நட்புக்களும் உண்டு ஆனால் 90 முதல் 95 சதவிகதம் வரை சுருங்கிய நட்பைப் பற்றியப் பேச்சு தான்…

உண்மையில் பெண்கள் தங்கள் நட்பு வட்டாரத்தைக் புறக்கணிப்பதைப் பற்றி நாம் பேச வேண்டாம்… அது முற்றிலும் உண்மை… என்னுடைய எத்தனையோ உயிர்த் தோழிகள் என்று நாங்கள் நினைத்தவர்களுக்கு, இப்போது நான் இருக்கும் இடம் கூடத்தெரியாது…

அவர்களை குறைக்கூற நான் ப்ரயத்தனம் செய்யவில்லை, இல்லை எனக்கு தேவையான நட்பாக என் அருமைக் கணவராக இருக்கும்போது உன் நட்பினை நான் தேடவில்லை என்று நட்பை சுயநல நோக்கோடு பார்க்கும் இப்படிப் பட்டத்தோழிகளை நானும் இந்த பதிவினில் புறக்கணிப்போம் 🙂 வேற என்ன செய்ய?.(இன்னுமொரு டாபிக் கிடைக்கப் பெற்றேன் – பெண்களின் நட்பு சுய நலமானதா என்று)

திருமணமாகிவிட்டால், பெண்களுடைய நட்பு வட்டாரம் சுருங்கிவிடுகிறது – இது ஒரு சாட் உரையாடலில் சுருக்கென்று குத்திய சிறு முள் ! ! இது ஏன்னு ஆர்க்யூ பண்ணனும்னு தோனினாலும் அன்று பேச முடியவில்லை காரணம் அனுவைப் பற்றி என் நண்பர் சத்யா கேட்டது – அப்போது சொன்னேன் ஒரு தோழி அனு அனுவாய் ரசித்து எனக்கு அனு என்று பெயர் சொன்னால் என்று கூடவே அவளுக்கு நான் இப்போது எங்கு எப்படி இருக்கிறேன் என்று தெரியாது என்றேன்.

நம்முடைய நண்பர்களுக்கு திருமணமான பின்பும் நட்பு எனும் வட்டம் சுருங்குவதில்லை என காலரைத் தூக்கிக்கொள்ளும் வர்க்கத்தினரைப் பற்றிப் பார்ப்போம்.

மனைவி அன்பானவளாக அமைந்துவிட்டால், அவள் தன் நட்பினை கழற்றிவிட்டு, உங்கள் நட்புக்களை தன் நட்பாக்கிக் கொண்டு உங்கள் தோலில் சாய்ந்து உங்களை ரசிப்பதினால், உங்கள் நட்பு வளரும்.

அதே மனைவிக் கொஞ்சம் அடக்குபவராய் வாய்த்துவிட்டாலும், உங்கள் அலுவலக நேரம் முடிந்ததும் உங்கள் நண்பர்களோடு ஊர் சுற்றிவிட்டுச் சென்றாலும், இரவு சாப்பாடு ரெடியாக இருக்கும் என்பதால் கவலையின்றி சின்ன பொய்களோடு உங்கள் நட்பு தொடரும்…. வேலை பளுவால் நீங்கள் லேட்டா வரும்வரை, உங்கள் மனைவிக்கு  உண்மைத் தெரியும் போது உங்களுக்கும், உங்கள் நட்புக்கும் விழும் அர்ச்சனைகளைக் கேட்க முடியாதுங்கோனு (கொஞ்சம் கவுண்டமணி ஸ்டைலில் படித்துக்கொள்ளவும் ! ! !)

உண்மையாக  உங்களில் எத்தனைப் பேருக்கு மனைவியின் ஸ்கூல் மேட்ஸைப் பற்றியோ அல்லது அவர்கள் கல்லுரி தோழி/நண்பர்களைப் பற்றியோ தெரியும்.

நீங்கள் ஜொல்லர்களாய் இல்லாதிருந்தால் உங்களுடன் தன் தோழிகளைப் பற்றி சொல்லுவா, நீங்கள் சந்தேகப் பேர்வழியாய் இல்லாதிருந்தால் உங்களுடன் தன் நண்பர்களைப் பற்றி உங்களுடன் உரையாடுவா….

எத்தனைப் பேர் உங்கள் இல்லங்களில் இந்த சண்டே நீ போய் உன் தோழியைப் பார்த்துவிட்டு வா, நான் இன்று நம் பிள்ளைகளுக்கு சமைத்துப் போடுகிறேன் என்று சொல்லுகிறார்கள்? தப்பித் தவறி அவளாக நான் இன்னிக்கு என் ஃப்ரண்டைப் பார்க்க போக போறேன் என்றாளே – ஹே டியர் ஐ ஹவ் அன் இம்பார்டண்ட் மீட்டிங் டானு ஐஸ் வைத்துவிட்டு செல்லுபவர்கள் நம்மில் பலர்…

காரணம் தான் வேறாக இருக்கும் காரியம் அவள் நட்புக்கு எதிரி இல்லை, ஆனால் அது நமக்கு முக்கியம் இல்லை என்னைப் பற்றிய சிந்தனையில் உனக்கான உலகம் இருப்பதை மறந்தேனோ…

திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு மட்டும்தானே சுமைகள் – எல்லாவிதத்திலும் அதிகமாகின்றது. பல சுமைகளுடன் இருக்கும் எனக்கு என் நட்பினைக் கண்டு களித்திட நேரம் எங்கே எனும் எண்ணமா? இல்லை என்னைப் போன்றே சுமைகளோடு இருக்கும் என் நட்பினைக் கண்டு என் சுமைகளைக் கொட்டவேண்டாம் என்ற எண்ணமா?

எதுவாகினும் தோழியே தோல் சாய்ந்து நாம் நம் சுமைகளை பகிர்ந்துக் கொள்ளும் போது ஏற்படுமே அந்த சுகம் அதை நினைத்துக் கொண்டே நான் என் சுமைகளைக் கடக்கிறேன்.

உன்னோடு பகிர்ந்தவுடன் வருமே ஒரு தெளிவு, எனக்கே எனக்கான நட்பினைக் கூட நான் கனவாக்கி கொண்டேன் என் சுய நலத்தினால். ஆம் திருமணம் எனும் பந்தம் எனக்கு மட்டும்தானே – என்னவரின் சுய நலனில் அக்கறைக் கொண்டு நம் நட்புக்கு பை பை சொன்னேனடி என்று நீ புலம்பவில்லை உன் சார்பில் நானே சொல்லிக்கொண்டேன் – நம் நிலை அறிந்ததால்.

பெருமைப் பட்டுக்கொள்ளும் நம்மவர்களுக்கு எங்கே புரியும் நம் நட்பின் வலிமை… எப்போதோ எதேதோ பேசி சிரித்த அந்த நாட்களை நாம் தினமும் அசை போடுகிறோம் ஆசையாக, அன்பாக உரையாட என்னுள் இருக்கும் உன் நட்பு நாம் வாழும் காலம் வரை நம்மு(ள்ளாய்)! !

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s