மயக்கும் மாலைப் பொழுதே

ஒரு இனிய மாலைப் பொழுதில் அபுதாபியில் அமுதைப் பொழிய வந்தார், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்ற தேனினும் இனிய குரலுக்குரியவர் பி.சுசிலா… ஆம் தென்னிந்தியாவின் லதா மங்கேஷ்கர் என எல்லோராலும் செல்லமாக அழைக்கபடுபவர்.

பாரதி நட்புகாகஎன்ற தமிழ் மக்களால் நடத்தப்படும் குழுவின் மூலமாக கலைமாமணி பி.சுசிலாவிற்கு பாராட்டு விழா. இந்த விழாவின் நாயகி பி.சுசிலாவிற்கு பாராட்டு புதுசு இல்லை, “பாரதி நட்புகாகஇயக்கத்திற்கும் பாராட்டு விழாக்கள் நடத்துவது புதியது இல்லை.  ஆனால் என் கண் முன்னால் பி.சுசிலா. “பாரதி நட்புகாக” நடத்தும் ஐந்தாம் ஆண்டு விழா இது.

பி.சுசிலாவும் டி.எம்.எஸும் இனைந்து பாடிய பாடல்கள் காலத்தாலும் அழியாதவை. இனிமையான நினைவுகளையும், அன்பான உறவுகளையும், பாசத்தையும், ஏக்கத்தையும், சோகத்தையும், சுகமாக தங்கள் குரலால் வருடி விடுவதில் கெட்டிக்காரார்கள். இவர்களுடைய இந்த புகழுக்கு வித்திட்டவரான எம்.எஸ்.விக்கும் பாராட்டு விழா நடத்தியவர்கள் சுசிலாவுக்கு நடத்துவதில் வியப்பில்லை….

ஆனால், எனக்கு அபுதாபியில் இன்ப அதிர்ச்சி என்றே கூறலாம். என்ன ஒரு பாக்கியம் நான் தமிழகத்தில் இருந்திருந்தால் கூட இதுப் போல் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா என்பதில் சிறு சந்தேகமே…

முன் வரிசையில் சுசிலா அவர்கள் அமர்ந்து இருக்க, அவர்களுக்கு நேராக, முதல் மாடியில் அமர்ந்து அவரைக் காணும் சந்தர்ப்பம், ஜென்ம சாபல்யமா என்பார்களே அது இதுதானோ ! !

கண் முன் கலைவானியேத் தோன்றியதுப் போல் ஒரு உணர்வு.

அடக்கத்தின் காரணமாக அதிகமாக யாரும் புகழாமல் இருந்தாலும், அன்பாக அவரை தமிழர்களின் அன்னையாக திரு ராமகிருஷ்ணன் என்பவர் கூறியது முற்றிலும் சரியே. இன்றும் நான் தூங்கப் போகும் முன் ஒரிரு சுசிலாவின் பாடல்கள் என் செவிகளைத் தொடவில்லை என்றால் தூக்கம் என் கண்களை தழுவாது.

பாரதி நட்புகாகதுவக்கமே அமர்க்களமாய் ஒரு பாரதியின் பாடலுக்கு, பரத நாட்டியத்துடன் உற்சாகமாக இருந்தது. அடுத்து பி.சுசிலா பாடிய பாடலுக்கும், மழையைப் பற்றி ஒரு நடனமும் வெகுவாக எல்லோரையும் கவர்ந்த்து…

மற்றும் ஒரு சிறப்பாக இந்த விழாவிற்கு இன்னொரு சிறப்பு விருந்தினராக வந்தவர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள்.

பின்னர் பி.சுசிலா அவர்களை பாராட்ட ஒரு படையே மேடை ஏறியது. இவர்கள் அனைவரும் முக ஸ்துதி என்பது சிறிதும் இன்றி, விமர்சனமாக இல்லாமல், நிதர்சனமான உண்மையாக தன் மனதில், தாங்கள் ரசித்த பி.சுசிலாவின் பாடல்களையும், எப்படி ஜெனரேஷன்(பாட்டி முதல் பேத்தி வரை) வித்தியசம் இல்லாமல், சுசிலாவின் பாடல்களை ரசிக்கிறோம் என்று சுவரசியமாகவும், சுருக்கமாகவும் பேசினார்கள்.

இன்றும் பலருக்கு தமிழ் அறிய சுசுலாவின் பாடல்கள் துனை புரிகிறது என்றனர். ஆம் தெலுங்கு தேசத்தில் இருந்து வந்த அவரின் தமிழ் பாடல்களால் சுசிலாவுடன் தமிழும் புகழ் பெற்றது.. ஒரு விவாத மேடையே நடத்தலாம் சுசிலாவால் தமிழ் புகழ் பெற்றதா இல்லை தமிழால் சுசிலா புகழ் பெற்றாரா என்று ! ! ! முடிவு என்னமோ தெரிந்ததே J

சுசிலா அவர்கள் பேசும் போது – இது மிகவும் புதியதாகத் தோன்றியது. பாடல்களை மட்டுமே கேட்டுப் பழகிய எனக்கு, அவர் மிகவும் ஜாலியாய் பேசியது, அதுவும் பேசினால் பாட மாட்டேன் என்றும், பாடினால் பேச மாட்டேன் என்றும் சொன்னபோது அதை ரசித்து கை தட்டிய நம்மவர்களையும் பாரட்ட வேண்டும்..

அவர் மிகவும் எளிமையானவர் என்பது அறிந்ததே. தமிழ் நாட்டில் ஐம்பது ஆண்டுகளாக இருந்து பாடி வருகிறேன். ஆனால் தமிழை இப்போது தான் கத்துக்கிறேன் என்றும், வயது ஆகிவிட்டது, உங்களுகாக பாடுகிறேன், ஆனால் எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்னு சொல்லி ஆரம்பித்தார். அவர் பாடியது என்னமோ நான்கு வரிகள்தான், அதுவும் நான்கே பாடல்களுக்கு, ஆனாலும் அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் நானுறு பாடல்கள் கேட்டத் திருப்தியை தந்தது.

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து என்று ஆரம்பித்தபோது அனைவரும் ஒருசேர கைத்தட்டிய போது அந்த பாடலின் மவுசு இன்னும் குறையவில்லை – எப்போதும் குறையாது என்று தெரிந்தது.

சிட்டுக் குருவி என்ற பாடலுக்கும் சரி, உன்னை ஒன்று கேட்பேன் என்ற பாடலுக்கும் சரோஜா தேவியையும், கண்கள் இரண்டும் என்று பாடியபோதும் சரி அதில் நடித்த பத்மினியே கண் முன் வந்தார்கள். இந்த வேரியேஷன் எப்படி என்று கேட்க நினைத்தேன்… நினைத்தவுடன் தேவிகா என் கண் முன் வந்தார், நெஞ்சம் மறப்பதில்லை என்று சுசியின் குரலுக்கு. இரண்டே வார்த்தைகள் தான் பாடினார் ஆகா என்ன அருமை, உன் குரலுக்கு இன்னும் வயது இருபது தானோ ??

பாரதி நட்புகாககுழுவினரின் இந்த ப்ரோக்ராமுக்கு அழைத்துச் சென்ற எனது நண்பர் மதுரை சசிகுமார் அவர்களுக்கு நன்றி !

அபுதாபியில் மயக்கும் மாலை நேரத்தில் அமுதைப் பொழிந்தது நிலவு !

இந்த மாதிரி மயக்கும் மாலைப் பொழுதை,  போகாதே என்று பாடத்தோன்றியது…

Advertisements

2 thoughts on “மயக்கும் மாலைப் பொழுதே

  1. Sir/Madam,
    I am from Pondicherry, M 43 working for HH in Dubai.I want to invite Suki Sivam to Dubai.He is my friend.So please do give ur club phone number and contact person address.
    MRP
    Dubai

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s