இதுதான் முதல் காதலா?

இதுதான் முதல் காதலா?

முகம் தெரியாத என்னை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் ஓர் அறிய முயற்சியா இது என்று எண்ணினேன், இல்லை நான் என்னை முழுமையாக தெரிந்துக் கொள்ளும் – ஒரு முயற்சிதான் இந்த இனைய தளம் ! ! !

நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடாலாம் எனும் வரிகளுக்கு ஏற்பதான் நான் வாழ்ந்து வருகிறேன் என்கிற இருமாப்பு எனக்கு எப்போதும் உண்டு, இப்போதும் உண்டா என்று நினைத்துப் பார்த்தால் நூறு சதவிகதம் இருக்கு என்று (உங்களை )அடித்துக் கூற முடியலை ஏன்னு கேட்டகமாட்டீங்க, ஆனா சொல்லனும்னு நான் யோசிச்சா எதுவும் தோனலை…சீரியஸா தோனலை

கடந்து வந்த பாதை எல்லம் முள் தடங்களா? இல்லை மலர் மேடைனு கவித்துவமா சொல்ல முடியாது ஏன்னா நான் அந்த பாதைகளை கடக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் பாடங்கள் என தான் தோன்றுகிறது ! ! உங்களுடன் எந்த பாதையை பகிர்ந்து கொள்வது என்று யோசிக்கும் தருணத்தில் அனைத்துமே மறந்து போன மாதிரி ஒரு ஃபீலிங் (படிச்ச்து தான் மறக்கனுமா என்ன, பட்டதும் மறந்தேன், கற்றதும் மறந்தேன்)…

ஏன் நினைவில் இல்லை என்று ஒர் ஆராய்ச்சியில் ஈடுபட்டால், வலிகள் நினைவில் இருக்கும், வலிகளாய் நினைத்தால் அதில் பாடம் இருக்காது, வலிகளோடு வளம் வரும் நிறைய பேரை பார்த்தாலே தெரியும் இவர்களுக்குள் ஏதோ சோகம் இருக்கு, ஏக்கம் எக்கசக்கமாய் இருக்கும்னு ! !

இதுவரை என்னுடன் பழகியவர்களுக்கு தெரியுமா ? நான் கடந்து வந்த பாதை ! ! ! அவர்களுக்கேத் தெரியாது – நான் கடந்து வந்த பாதை… என் குடும்பத்தினரைத் தவிர யாருக்கும் தெரியாத பல பக்கங்களை உங்களுடன் வரும் பதிவுகளில் பார்ப்போம் ! ! !

”சரி கமிங் டூ த மேட்டர் “

கடந்து வந்த பாதையில் – நான் தனியாக அந்த மலைகளைக் கடக்க முடியுமா என்ன? உன்னால் முடியாதுனு சத்தம் போடாதீர்கள். எனக்குள் இருந்த சோகங்கள் யாவையும் நான் அழியும் வரை அழிக்க முடியாதது ஆனால் கடக்க உதவியவர்களைப் பட்டியல் போடலாம் என்று ஒரு சிறு எண்ணம்.

முதல் பள்ளியில் (கிண்டர் கார்டனில் – 4ஆம் வகுப்பு வரை – காமக்‌ஷி வித்யாலயா) சுப்புலட்சிமி என்ற எனது முதல் ஆசிரியரின் பெயர் நினைவில் இருக்கிறது, ஆனால் உருவம் நினைவில் இல்லை – இவரால் மட்டுமே நான் முதன் முதலாய் பள்ளி சென்ற ஞாபகம். இவர் இல்லை என்றாலும் போயிருப்பேன், அடி உதைகள் வாங்கியாவது….. இவருடன் மட்டும்தான் செல்வேன் என்று அடம்பிடித்து அடி வாங்கிய நாட்களும் உண்டு. ஆனால் என்னவோ என்ன மாயமோ என் கைப்பிடித்து அழைத்துச் சென்ற இவரை கைப்பிடிக்க ஒருவர் வெகுவிரைவில் வந்துவிட்ட காரணத்தால், நாங்கள் வெகுவிரைவில் பிரிந்தோம், இவரிடம் என்ன படித்தேனு தெரியாது ஆனால், அவர் மனதளவில் என்னுடைய ஃப்வரைட் ஆசிரியை. இவர்களைத் தவிர என்னை அடித்து புரட்டிய பிரேமா மற்றும் லட்சுமி என்ற இருவருக்கும் கடமைப் பட்டு இருக்கிறேன்… என்னை இப்போதும் சோம்பேறி என்று செல்லமாக இல்லை உரிமையோடு திட்டுபவர் லட்சுமி( மிகவும் சுருசுருப்பானவர் அவர்). என்னுடைய கடந்து வந்த இந்த கிண்டர் கார்டனில் படிக்க வேண்டிய மிக முக்கியமான பாடத்தை இன்று வரை படிக்கவில்லை சீரும் சிங்கம் போல் வேலைகளைச் செய்தாலும் கழுத்தில் கத்தி வரும் வரை சோம்பேறியாகவே இருப்பேன். இந்த காலகட்டத்தில் நான் கற்றுக் கொண்டது ஏபிசிடியும், 123யும் கொஞ்சம் அடிசன் டேபிள்ஸாக இருக்கும், அதை விட சைக்கிள் விடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று…

ஒரு சில மாதங்களுக்கு முன் நான் பிறந்த இடமும், என் அறிவின் பிறப்பிடமான என் பள்ளி இருந்த இடத்தைக் கானும் ஆவலில் செல்லவில்லை, வேறு ஒரு வேலையாகச் செல்ல முற்பட்டபோது, கண்டு ஷாக்கானேன், பள்ளி இருந்த சுவடே இல்லை ! ! ! எல்லையில்லா மாற்றங்கள் அங்கே ! ! ! மாறாது இருந்தது அந்த சைக்கிள் கடையும் அதன் நிறுவனரும்…. அதைவிட சிறப்பு அவர் என்னை ஒரு-இரு டெக்கேட் கழித்துப் பார்க்கும்போதும் அவர் நினைவில் நான் இருந்தது எனக்கு ஒரு சிறிய சந்தோஷத்தை அளித்தது. நான் எத்தனை முறை அங்கு சைக்கிள் எடுத்திருந்தால் அவர் நினைவில் நான் இன்றும் இருப்பேன் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

இந்த பள்ளியில் இருந்து நான் வேறு ஒரு பள்ளி சென்ற போதும் என்னுடைய முதல் பள்ளியின் மீதும் மற்றும் லட்சுமி மிஸ்ஸிடம் இருந்த மரியாதை நிமித்தமாக அப்பள்ளியின் ஆண்டு விழாக்களுக்கு செல்வது வழக்கம் – இதை இங்கு கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு – தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய இந்த பழக்கம் இன்று வரை உண்டு – எல்லா விஷயத்திலும்… கல்லூரி(டிப்ளமா படித்த கல்லுரிக்கும் போவேன், நான் முதலில் பணி புரிந்த கம்பனிக்கும் இன்று வரைச் செல்வேன் ( ஐ மெயிண்டைன் தட் ரிலேஷன்ஷிப் நைஸ்லி எஸ்பெஷ்லி அஃப்டர் லீவிங் தட் ப்ளேஸ் :))– இது தான் முதல் காதல்களா?

கடந்து வந்த பாதைகள் நிறைய இருக்கும், வருஷத்திற்கு இரண்டு பாடம் என்றாலும், நிறைய இருக்கும், யோசிக்க சிறிது அவகாசம் கொடுங்க, எல்லாத்தையும் இங்கே சொன்னால் அலுப்பாகிவிடும் என்பதால் இத்துடன் இந்த பாதையில் இருந்து விடைப்பெறுகிறேன்.

Advertisements

2 thoughts on “இதுதான் முதல் காதலா?

  1. சைக்கிள் கடைக்காரர் நியாபகம் வைத்திருப்பதற்கு காரணம், அவரிடம் வாங்கிய சைக்கிளை உடைத்து சுவடு தெரியாமல் திருப்பி கொடுத்ததாலேயே இருக்குமோ? இல்லை வாடகை பாக்கியா? எப்படி இருந்தாலும் இத்தனை (எத்தனை?) வருடங்கள் போயும் நியாபகம் வைத்திருக்கிறார் என்பதற்காகவே இரு சபாஷ் போடலாம் – அவருக்கும், அவரை நியாபகமாக சென்று பார்த்த உங்களுக்கும்.

    எழுத்து பிழைகள் இருந்தாலும், தமிழில் எழுதும் ஆர்வத்துக்காக பாராட்டுதல்கள்.

    • எவ்வளவு பிழைகள் இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் பரிசுத் தொகையில் ஒன்றோ இரண்டோ பிடித்துக் கொண்டு அந்த பொற்கிழியைத் தரவும்… வருமான வரிப்போல் மொத்தமாக பிடித்துக் கொள்ளாமல் இருந்தால் சரி ! ! ! நன்றி தவறுகள் திருத்திக்கொள்ளபடும் ! ! !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s