ஏட்டில் கிறுக்குவதை நெட்டில் டயிப்பிட வந்தேன்……

ஏட்டில் எழுதி வந்தேன், எழுதியதைக் கொண்டு வந்தேன், கேட்டவளை காணோமடா இறைவா ! ! ! ! போனா போகுது… கேட்டவள் இல்லை என்றாலும் இறைவனே வரலைன்னாலும் படிக்க சிலர் மாட்டுவார்கள் என்ற நினைப்பில் – ப்ளாக்கினில் ஏற்றிட வேண்டும் என்று உங்களை நம்பி என் கலைப் பயணத்தினை துவங்கிட்டேனுங்க (இப்பவே திட்டாதீங்க – கலையை, களை கிளைனு சொல்லறது எனக்கே கேட்குது, இன்னும் நிறைய பாக்கி இருக்கு, முழுசாப் படிச்சுட்டு நல்லா திட்டுங்க, உங்கள் அதிரடி விமர்சனம், விண்ணை தொடட்டும், இறைவன் வந்து வாழ்த்தும்(திட்டினாகூட பரவாயில்லை) வரை.

நாள்தோறும், நாள் முழுக்க, நெட்டில் இருந்தாலும், ஏட்டில் கிறுக்குவது எப்போதாவதுதான், அதுவும் யாரும் பேசிட இல்லாதபோதுதான்….. நம்ம பாஸை திட்டுவது, கடவுளிடம் கோபிப்பது, சில பல நல்ல கவிதைகள் காப்பி அடிப்பது, பாடல்களின் வரிகளை நினைவு கூர்வது என்று பட்டியல் நீளும் என்ற நான்  நிஜத்தை சொன்னா கூட நான் அலட்டிக் கொள்வதாக தோனலாம் உங்களுக்கு. உண்மையில், பால், கறிகாய் – மொத்தமாக வரவு செலவு கணக்கே அதிகம் இருக்கும்னு நீங்க கூக்குரலிடுவது கேட்கிறது…..

என் அருமை நண்பர்களின் உந்துதலால் நானும் ப்ளாகிடலாம் என்று யோசித்து, சிறிது கடினமானதுதான் படிப்பவர்களுக்கு, ஆனாலும் நண்பர்கள் நம்மை ஊக்குவிக்கும் தைரியத்தில் தொடங்கிவிட்டேன் முதல் படைப்பை….

முன்னுரை சொல்லி ஆரம்பிக்க நான் விரும்பவில்லை ஏன் எனில், இது பேச்சுப்போட்டி இல்லையே !!!  சாட் செய்றாப்ல இதுவும் ஒரு பேச்சு வழிதானே?  அதனால் இந்த பதிவுக்கு முன்னுரை கிடையாது.

அப்ப ஸ்டைட்டா நன்றியுரைதானான்னு யோசித்தாலும், யோசிக்காவிட்டாலும், கடைசியில் நன்றியுரை சொல்லியே ஆகவேண்டும். இருந்தாலும், எப்படி சொல்ல? முடிக்கப் போவது இல்லையே நம்மளோட கற்பனைத் திறனை!!!

நன்றி சொல்லி ஆரம்பிப்பது வழக்கமும் இல்லை, இருந்தாலும் நன்றி சொல்ல வேண்டும் !!! நாலு பேருக்கு நன்றி !!!  எம்.ஜி.ஆர் பாட்டு எல்லாம் பாடி கஷ்டப் படாதீங்க !!!

அந்த நாலு பேர் யார் என்று சொல்லி, மிச்சம் நானூறு பேர் மனம் புண்படக்கூடாது என்று பொய் சொல்லவில்லை, அந்த நாலு பேரு யாரு என்று சொல்லிட்டா, அதன் பிறகு என்னோட நாலு நண்பர்கள்கூட ப்ளாக்கை படிக்காமல் போய்விட்டால என்ற பயம்தான் உள்ளுக்குள்…. ஆ ஆரம்பிக்கும் போதே உதறல் தான் ! !

அடுத்த படைப்பில் (அதுக்குள்ள படைப்பு கிடைப்புன்னு ஆரம்பிச்சாச்சான்னு நீங்க மனசுக்குள்ள சத்தமா கேட்டுக்குங்க, அது என் காதுக்கு கேக்காது.  கேட்டாலும், நான் படைப்புன்னுதான் சொல்லுவேன்) உஙகளுக்கு யார் அந்த நால்வர் என்ற முடிவையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முடிவுடன்… (இது முடிவல்ல, ஆ-ரம்பம்)

Advertisements

3 thoughts on “ஏட்டில் கிறுக்குவதை நெட்டில் டயிப்பிட வந்தேன்……

 1. ஆரம்பம் எல்லாம் அமர்க்களமாத்தான் இருக்கு….

  நான் மனசுக்குள்ள சத்தமா கேட்டுக்கிட்டதனால இப்ப மனக்காது லைட்டா கொயிங்ங்குது….இதுக்கு மருந்து ஏதும் இருக்கா?

  அந்த நாலு பேரு யாருங்க….நான்…நான்…நான்..நாந்தானே…

  எனக்கு தெரியுமே…ஹிக்கிக்கிக்கி…

  • நன்றி விஜயசாரதி அவர்களே ! !

   வெகு விரைவில் உங்களில் அந்த நால்வர் யார்னு பார்த்துடுவோம் ! ! அதுக்கும் ஒரு நடுவர் வேனும் ! !
   அதுவரை அப்போ வந்து செக் பண்ணுங்க அந்த நால்வரைப் பற்றி ஏதாவது நான் சொல்றேனானு பாருங்க !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s