Archive | February 2010

நாடு கடந்து கிடைத்த நட்பு

மஹேஷ் எனக்கு அறிமுகமாகியது சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்னர். நாங்கள் கடைசியாக சந்தித்து சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.

மஹேஷ் மட்டும் அல்ல, இன்று மஹேஷின் மனைவி புவனாவும், நானும் பல நாட்கள் அவள் வீட்டில் பேசிக் கொண்டு இருந்த நாட்களை எண்ணினேன்.

எனக்கும், என் படிப்பிற்கும், சிறிதும் சம்பந்தம் இல்லாத ஒரு டியூஷன் செண்டரில் அறிமுகம் ஆனோம் நாங்கள். என் தங்கையும் அங்கே படித்தாள், அவளிடம் கேட்க வேண்டும் இவர்களை நினைவில் இருக்கிறார்களா என்று. (கண்டிப்பாக இருக்காது).

அவரவர் வாழ்க்கையிலிருந்து வெவ்வேறு பாதைகளில் பயனித்தக் காரணத்தாலும், யாஹூவும், கூகிளும், ஃபேஸ்புக்கும் அன்றைய தினத்தில் எங்களுக்கு அறிமுகம் இல்லாத காரணத்திலும் நட்புக்கள் டச்சில் இல்லாமல் போனது.

கல்லுரியில் படித்துக் கொண்டு, நண்பர்களோடு அரட்டை என துள்ளித் திரிந்த அந்த நாட்களை நான் நினைத்துப் பார்த்ததே சுமார் 12 ஆண்டுகள் கழித்து தான்.

சுப்பிரமணியன் வைத்தியனாதனாக (எ) சுப்பு அலுவலகத்தில் ஒரு இ-மெயில், அது அலுவலக நிமித்தமாகவே, அப்போது படித்துவிட்டு, ஆஹா ஒரு தமிழ் ஆளிடமிருந்து என்று தான் நினைத்தேன். வெவ்வேறு லொகெஷனில் வேலைச் செய்வதால் நேரில் எல்லோரையும் காண்பது என்பது அரிதானது. அப்போதும் தெரியாது, அந்த மெயிலுக்கு பின் நாங்கள் மொபைலில் சம்பாழ்ஷித்த போதும் தெரியாது அது என்னை நன்கு அறிந்தவரின் குரல் என்று.

சுப்புவை நான் சந்தித்து ஒரு வித்தியசமான அனுபவமாக தான் இருந்தது. நாங்கள் பணி புரியும் (க்ளையண்ட்) கம்பனியின் ஐந்தாம் ஆண்டு விழாவானது ஒரு பெரிய ஹோட்டலில நடந்தது எப்போதும் போல சசிகுமாரும், ஜிம்மியுடன் கலந்துக் கொண்டோம்.

அப்போதும் எனக்கு தெரியாது நான் சுப்புவைச் சந்திப்பேன் என்று. அலுவலகத்திலிருந்து எல்லோரும் வருவார்கள் என்று தெரியும் ஆனால் நான் சந்திக்கும் முதல் முகமே சுப்புவாக இருந்தது ஒரு ஆச்சரியம் என்றால், தமிழ் முகமாக இருந்த்தால் வெகுவிரைவில் ஹெலோ சுப்புனு சொல்லி, பக்கத்தில் இருந்த சசிகுமார் ஒரு ஹெலோ சொல்ல சுப்புவோ அதை கண்டுக்காமல் என்னை யார் என்று யோசிக்கலானார். ஏன் இவன் நம்மள இப்படி வைத்த விழி மாறாமல் பார்க்கிறான் என்று யோசித்தாலும், எனக்கும் ஃபெமிலியாரான ஃபேசாக சுப்புவின் முகம் பட்டாலும் சசிகுமாரின் குமுரலுக்கு முன் அந்த இட்த்தில் இருந்து நகர்ந்தோம்.

சுப்புவை உடனே அடையாளம் தெரியவில்லை, புலம்பி தள்ளிவிட்டார் சசி, என்ன இது நான் ஹெலோ சொல்றேன் என்னை மனுஷனாகவே நினைக்கலைனு. அப்போதும் ச்சியிடம், எனக்கும் அவன் முகம் பரிச்சயமான முகமாக இருக்கு அவனும் யோசிக்கிறானு நினைக்கிறேன் என்று சமாதானம் சொன்னேன்.

அதற்குள் சுப்பு தன் மனைவியுடன் கைபேசியில் தொடர்பு கொண்டு, நான் யார் என்பதை தெரிந்துக் கொண்டு, நீ என்று சொல்லி முடிப்பதற்குள் நானும் அதை ஆமோதித்து, ஆம் என்றேன். ஆனாலும் எனக்கு இந்த சுப்புவைத் தெரியாது.. ஆம் உன்னோட அஃபிசியல் நேம் சுப்புவா, ஆனால் எனக்கு உன்னை சுப்புவாகத் தெரியாதே என்றதும், மஹேஷ் என்றவுடன் மேலும் நாற்பது நண்பர்களின் முகம் கண் முன்னே வந்தது.

ஹே பரவாயில்லையே என்னை அடையாளம், தெரிந்துக் கொண்டாயே என்றும், உன்னோட ஃபேசில் ஒரு மாற்றமும் இல்லை, ஆனால் கல்லூரி மாண்வனாகத் சிறு பிள்ளையாகத் தோன்றியவனை, என் கண் முன் ஒரு சற்று தடிமனான உடலுடன் பார்த்தவுடன் தெரியலை என்று அசடு வழிந்தேன்.

நட்பா, உறவா என்று பேசிகிறவர்களுக்கு, இந்த நட்பின் அருமை எப்படி புரியும். இதுவரைப் பார்த்திராத உறவினரைப் பார்த்தால்கூட எங்களுக்குள் வந்த சந்தோஷம் மாதிரி வருமா? சிம்பிளா ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது அந்த உணர்வுக்கு பெயரை.. உறவா நட்பா என்று விவாதம் வந்தால் நட்பு தானுங்கோ என்று டெல்லி கணேஷுக்கு(அபுதாபியில் ஒரு விவாத மேடை நடத்தினார்) சொல்லிடுங்கோ ! !

Advertisements

படித்ததில் பிடித்தது-1

படித்ததில் பிடித்தது, பிடித்ததும் சுட்டது ! ! !

சிந்தனை சிற்பி யாரோ தெரியாது, ஆனால் மிகவும் ரசித்தேன் ! ! மீண்டும் படிக்க நினைத்ததால் இங்கு காபி பேஸ்ட் செய்தேன் ! !

கோழி அடைக்காக்கும் போதே
குஞ்சுகளை எண்ணக்கூடாது!

பேசுகிறவரை விட கேட்பவருக்கு
அறிவு அதிகம் வேண்டும்!

முடியும் என்று உறுதி கொள்பவனே
முடித்தும் காட்டுவான்!

சிரிக்கச் சொல்லும் உலகம்தான்
சிந்திக்கவும் சொல்கிறது!

விரும்பியது கிடைக்கவில்லையா?
கிடைத்ததை விரும்பு!

sachin200

வயிறு நிரம்ப போட்டால் தான் விருந்தா? காதுகளுக்கு விருந்து கொடுத்தார் சுசிலா ஒரு வாரம் முன்பு… அடடா என்று இருந்தது அது போன வாரம்…

இன்று பலரது கண்களுக்கு டி.வி மூலமாக விருந்து.

இடம்: க்வாலியர், நாள்: 24-பிப்ரவரி 2010.

சாதனை: ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் – டபிள் டன்

சாதனையாளர் : சாதனைகளுக்கு மட்டுமே சொந்தகாரர் & ஒன் & ஒன்லி மாஸ்டர் பேட்ஸ்மேன் – சச்சின் ரமேஷ் டெண்டுள்கர்

எதிர்த்து அடிய அணி: தென் ஆப்ரிகா (கென்யா, வங்காள தேசத்துடன் இருந்தாலும் சாதனை சாதனையே)

என் கண்களுக்கு http://live.cricbuzz.com ஒரு வரப்பிரசாதமாகவே இருந்தது. ஆம் முதல் பந்து முதல் கடைசிப் பந்து வரை வர்னனையை படித்து மகிழ்ந்த பல்லாயிரம் கோடியில் நானும் ஒருவராய்.

இந்தியராக பிறந்த அனைவரும் பெருமைக் கொள்ளும் நேரம்..

இது வரை பலரது சாதனைகளை உடைத்து வந்தார் சச்சின். இதுவரை யாரும் செய்யாத சாதனைகளும் வர இருக்கிறது அதற்கான முன்னோட்டமே இந்த  இரட்டை சதம் 200/200.

என்ன தவம் செய்ததோ அந்த பந்து சச்சினின் மட்டையில் பட, அனைத்திற்கும் இன்று புகழ் தான். பந்து வீசியது யாராக இருந்தாலும் சச்சினை திட்டித் தீர்த்து இருப்பார்கள், ஆனாலும் உங்களுக்கும் புகழ் தான். ஆம் நீங்கள் வீசிய நேர்த்தியான பந்துகளை எங்கள் தங்கமாம் சச்சின் அடித்து நொறுக்கியதால். 25 பௌண்டரிகளும் கண்களுக்கு விருந்து தான்.(ஹைலைட்ஸ்ல தான் பார்த்தேன்)

சச்சினின் டபிள் ஹண்ட்ரட். சிகரங்களைத் தொட்டவர் தான்.. ஆனாலும், சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தப் பட்ட ரெக்கார்டை சச்சின் உடைப்பார் என்று சிறிதும் நினைக்காத நேரத்தில்… வாவ் ஃப்ண்டாஸ்டிக்.

என்ன ஒரு ஆட்டம்.. பதினாறில் ஆடிய ஆட்ட்த்தை இப்போது ஆடிக் காண்பித்து, நான் என்றும் பதினாறு என்று அவரைப் பற்றிய சர்ச்சைகளுக்கு மட்டையால் பதில் சொன்னார் என்றால் அது தவறு, மட்டையால் அடித்துச் சொன்னார்.

சச்சினை அவுட்டாக்க எதாவது தென் ஆப்ரிக்கா முயன்றனரா என்ற சந்தேகம் என்னைப் போல உங்களுக்க்கும் தோன்றியதா?

194 ரன்களே இதுவரை அதிக பட்ச ஸ்கோராக இருந்தது, பாகிஸ்தானின் சயீது அன்வர் சென்னையில் அடித்து 194ஐ கடந்து 196 என்ற இருந்தபோது எனக்குள் ஏற்பட்ட கர்வம், இந்தியர்கள் அனைவருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும்.

சச்சின் 199இல் இருக்கும்போது, தோனி அடித்த நான்கும், ஆறுகளும், விருந்தாகவோ வான வேடிக்கையாகவோ தெரியவில்லை… கடங்காரன் நம்ம ஹீரோவ ஒரு ரன் அடிக்க விடமாட்டான் போல இருக்கேன்ற டென்ஷன் எல்லோருக்கும் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சச்சினின் இந்த சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெற்றியுடன் தான் கொண்டாட போகிறோம். தெ.ஆ – 107/6 இன்னும் நான்கு விக்கெட்டுகள் விழுந்துவிடும் பட்சத்தில், நம் சந்தோசம் 200 மடங்காகும் என்பதில் சந்தேகமில்லை.

உலகக்கோப்பை கனவு நினைவாகும் நேரம் நெருங்கிவிட்டது – உன்னால் உன்னால் முடியும் தோழா.

female’s friendship

பெண்களும் நட்பும்

ஆண்டுகள் பல ஆகியும் சுருங்காமல் சிரிக்கும் நட்புக்களும் உண்டு ஆனால் 90 முதல் 95 சதவிகதம் வரை சுருங்கிய நட்பைப் பற்றியப் பேச்சு தான்…

உண்மையில் பெண்கள் தங்கள் நட்பு வட்டாரத்தைக் புறக்கணிப்பதைப் பற்றி நாம் பேச வேண்டாம்… அது முற்றிலும் உண்மை… என்னுடைய எத்தனையோ உயிர்த் தோழிகள் என்று நாங்கள் நினைத்தவர்களுக்கு, இப்போது நான் இருக்கும் இடம் கூடத்தெரியாது…

அவர்களை குறைக்கூற நான் ப்ரயத்தனம் செய்யவில்லை, இல்லை எனக்கு தேவையான நட்பாக என் அருமைக் கணவராக இருக்கும்போது உன் நட்பினை நான் தேடவில்லை என்று நட்பை சுயநல நோக்கோடு பார்க்கும் இப்படிப் பட்டத்தோழிகளை நானும் இந்த பதிவினில் புறக்கணிப்போம் 🙂 வேற என்ன செய்ய?.(இன்னுமொரு டாபிக் கிடைக்கப் பெற்றேன் – பெண்களின் நட்பு சுய நலமானதா என்று)

திருமணமாகிவிட்டால், பெண்களுடைய நட்பு வட்டாரம் சுருங்கிவிடுகிறது – இது ஒரு சாட் உரையாடலில் சுருக்கென்று குத்திய சிறு முள் ! ! இது ஏன்னு ஆர்க்யூ பண்ணனும்னு தோனினாலும் அன்று பேச முடியவில்லை காரணம் அனுவைப் பற்றி என் நண்பர் சத்யா கேட்டது – அப்போது சொன்னேன் ஒரு தோழி அனு அனுவாய் ரசித்து எனக்கு அனு என்று பெயர் சொன்னால் என்று கூடவே அவளுக்கு நான் இப்போது எங்கு எப்படி இருக்கிறேன் என்று தெரியாது என்றேன்.

நம்முடைய நண்பர்களுக்கு திருமணமான பின்பும் நட்பு எனும் வட்டம் சுருங்குவதில்லை என காலரைத் தூக்கிக்கொள்ளும் வர்க்கத்தினரைப் பற்றிப் பார்ப்போம்.

மனைவி அன்பானவளாக அமைந்துவிட்டால், அவள் தன் நட்பினை கழற்றிவிட்டு, உங்கள் நட்புக்களை தன் நட்பாக்கிக் கொண்டு உங்கள் தோலில் சாய்ந்து உங்களை ரசிப்பதினால், உங்கள் நட்பு வளரும்.

அதே மனைவிக் கொஞ்சம் அடக்குபவராய் வாய்த்துவிட்டாலும், உங்கள் அலுவலக நேரம் முடிந்ததும் உங்கள் நண்பர்களோடு ஊர் சுற்றிவிட்டுச் சென்றாலும், இரவு சாப்பாடு ரெடியாக இருக்கும் என்பதால் கவலையின்றி சின்ன பொய்களோடு உங்கள் நட்பு தொடரும்…. வேலை பளுவால் நீங்கள் லேட்டா வரும்வரை, உங்கள் மனைவிக்கு  உண்மைத் தெரியும் போது உங்களுக்கும், உங்கள் நட்புக்கும் விழும் அர்ச்சனைகளைக் கேட்க முடியாதுங்கோனு (கொஞ்சம் கவுண்டமணி ஸ்டைலில் படித்துக்கொள்ளவும் ! ! !)

உண்மையாக  உங்களில் எத்தனைப் பேருக்கு மனைவியின் ஸ்கூல் மேட்ஸைப் பற்றியோ அல்லது அவர்கள் கல்லுரி தோழி/நண்பர்களைப் பற்றியோ தெரியும்.

நீங்கள் ஜொல்லர்களாய் இல்லாதிருந்தால் உங்களுடன் தன் தோழிகளைப் பற்றி சொல்லுவா, நீங்கள் சந்தேகப் பேர்வழியாய் இல்லாதிருந்தால் உங்களுடன் தன் நண்பர்களைப் பற்றி உங்களுடன் உரையாடுவா….

எத்தனைப் பேர் உங்கள் இல்லங்களில் இந்த சண்டே நீ போய் உன் தோழியைப் பார்த்துவிட்டு வா, நான் இன்று நம் பிள்ளைகளுக்கு சமைத்துப் போடுகிறேன் என்று சொல்லுகிறார்கள்? தப்பித் தவறி அவளாக நான் இன்னிக்கு என் ஃப்ரண்டைப் பார்க்க போக போறேன் என்றாளே – ஹே டியர் ஐ ஹவ் அன் இம்பார்டண்ட் மீட்டிங் டானு ஐஸ் வைத்துவிட்டு செல்லுபவர்கள் நம்மில் பலர்…

காரணம் தான் வேறாக இருக்கும் காரியம் அவள் நட்புக்கு எதிரி இல்லை, ஆனால் அது நமக்கு முக்கியம் இல்லை என்னைப் பற்றிய சிந்தனையில் உனக்கான உலகம் இருப்பதை மறந்தேனோ…

திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு மட்டும்தானே சுமைகள் – எல்லாவிதத்திலும் அதிகமாகின்றது. பல சுமைகளுடன் இருக்கும் எனக்கு என் நட்பினைக் கண்டு களித்திட நேரம் எங்கே எனும் எண்ணமா? இல்லை என்னைப் போன்றே சுமைகளோடு இருக்கும் என் நட்பினைக் கண்டு என் சுமைகளைக் கொட்டவேண்டாம் என்ற எண்ணமா?

எதுவாகினும் தோழியே தோல் சாய்ந்து நாம் நம் சுமைகளை பகிர்ந்துக் கொள்ளும் போது ஏற்படுமே அந்த சுகம் அதை நினைத்துக் கொண்டே நான் என் சுமைகளைக் கடக்கிறேன்.

உன்னோடு பகிர்ந்தவுடன் வருமே ஒரு தெளிவு, எனக்கே எனக்கான நட்பினைக் கூட நான் கனவாக்கி கொண்டேன் என் சுய நலத்தினால். ஆம் திருமணம் எனும் பந்தம் எனக்கு மட்டும்தானே – என்னவரின் சுய நலனில் அக்கறைக் கொண்டு நம் நட்புக்கு பை பை சொன்னேனடி என்று நீ புலம்பவில்லை உன் சார்பில் நானே சொல்லிக்கொண்டேன் – நம் நிலை அறிந்ததால்.

பெருமைப் பட்டுக்கொள்ளும் நம்மவர்களுக்கு எங்கே புரியும் நம் நட்பின் வலிமை… எப்போதோ எதேதோ பேசி சிரித்த அந்த நாட்களை நாம் தினமும் அசை போடுகிறோம் ஆசையாக, அன்பாக உரையாட என்னுள் இருக்கும் உன் நட்பு நாம் வாழும் காலம் வரை நம்மு(ள்ளாய்)! !

துபாயில் முதல் வீக்கெண்ட்

நான் ஃப்ளையிட் ஏறி சுமார் ஐம்பதைந்து நாட்கள் ஓடிவிட்டது…

01-ஜனவரி துபாயில் – வருட ஆரம்பம். அடே அமர்க்களமான ஆரம்பம் எ அமர்க்களம் என நீங்கள் எண்ணலாம். ஆனால் நம் உறவுகளைவிட்டு வருடத்தின் முதல் நாள் பிரிகிறேன் என்ற எண்ணத்தை சிறிதும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், வீட்டிலேயே அனைத்து உறவுகளுக்கும் டாட்டா, பை பை சொல்லி, நட்புக்கள் வரத் துடித்தும் வர முடியாத நிலை அவர்கள் வீட்டில் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இருமுடி அன்று.

ஏதோ முதல் நாளே, வேலைக்குச் ஜாயின் பண்ணப் போற மாதிரி, ஆர்வக்கோலாரில் ஒரு நாள் தள்ளி டிக்கட் போடுங்கனு சொல்ல தோனலை.

விமானத்தில் இருந்து இறங்கியவுடன் தேடியது மொபைல் சர்வீஸை தான், உறவுகளுடன் உள்ளூரில் பேசாத நாட்களை எண்ணினேன். கண்ணில் பட்டாலும் வாங்கலை, விசா ஃபார்மலிடிஸ் எல்லாம் முடித்த பின் வெளியில் வந்தேன். என் கம்பனி எதாவது ஏற்பாடு பண்ணியிருப்பார்களோ என்று.

ட்ரைவர் நேம் போர்டுடன் காத்திருந்தார். விமான பயணம் தான் முடிந்தது. காரில் பயணமும் விமானம் மாதிரிதான், கரணம் தப்பினால் மரணம் என்று, மணிக்கு 120 முதல் 170கிமீ வேகம் வரை செல்லும் வெரி டலண்டட் ட்ரைவர்களும் உண்டு என்று அறிந்தேன்.

வந்து இறங்கிய முதல் நாளே துபாயில் வீக் எண்ட் தான், அதனால் என்ன எனக்கு அது வெறும் வெள்ளிக் கிழமைதான். எமிரேட்ஸ் நிறுவனம் எனக்கு அளித்த காலை சிற்றுண்டி – மிகவும் சிற்றுண்டி, நான் துபாய் விமான நிலையம் இறங்கும் முன்னரே அடுத்த வேளை உணவு எப்படி இருக்குமோ? எங்கு கிடைக்குமோ, எப்போ கிடைக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கியது.

நல்ல அனுபவம் என்னவென்றால் என் நிறுவனத்தின் கெஸ்ட் ஹவுஸில் தங்கியது. முதல் நாள் உபசரனையா இல்லை கடமையாக சாப்பிடச் சொன்னாரா என்று அப்போது தெரியாது(இப்போது தெரியும் நிஜமாகவே உபசரனைதான்).

ஆனால் முதல் நாளே நல்ல சுவாரசியம் உணவில் காத்து இருந்த்து ஆம், சீலோனின் சுவையான் உணவு இருக்கிறது சாப்பிடு என்று சொன்னவுடன் தூக்கிவாரிப் போட்டது…. ஒரு 100% அக்மார்க் வெஜிடேரியனை சிரிலங்கன் சாப்பாடு என்றால் எப்படி இருக்கும்?

என் முகபாவனையை பார்த்து அவர்களே அதில் சைவம் தனியாக இருக்கிறது என்றனர். கொஞ்சம் பயத்துடன் உணவு மேசை அருகே சென்றேன், பின்னால் இருந்து ஒரு குரல், அவர் சைவம் தான் சாப்பிடுவார் தயங்காமல் சாப்பிடு என்று.

நிம்மதி பெருமூச்சுடன் பாசுமதி அரிசியிலான சாதத்தையும், வேகவைத்த துவரம் பருப்பும் எனக்கு பெருமாள் கோயில் (பொங்கல்)ப்ரசாதம் போலத்தான் பட்டது அந்த தருணத்தில்! பக்கத்தில் பீன்ஸ் பொரியல் இருந்தாலும் அதில் சிகப்பாய் இருப்பது மிளகாய் தான் என நான் தெரிந்துக் கொள்வதற்கு முன், அப்பளத்துடன் ஒரு சுற்று முடித்துவிட்டேன்.

எப்படி இருக்கு, பீன்ஸ் சாப்பிடு – இட்ஸ் புயுர் வெஜ் ஒன்லினு ஒரு கன்ஃபர்மேஷனக்கு பின், அதையும் டேஸ்ட் பண்ணுவோம்னு இறுதி சுற்றுக்கு தயார் ஆனேன்.

பசி ருசி அறியாது என்பதை இப்போது உணர்கிறேன், ஆம் உணரவில்லை அப்போது அந்த உணவின் ருசி எப்படி இருந்தது என்று, ஆனால் சாப்பிட்டேன், கொஞ்சம், காரம், அறை வேக்காடு பீன்ஸ் என்று இப்போது யோசித்தால் தோன்றுகிறது…. கண்டிப்பாக தமிழரின் உணவுதான் அது என்று எண்ணம் என் மனதில் பட்டது கார சாரமாக இருந்ததால்.

இப்படியாக வெள்ளி கிழமைச் செல்ல, சனிக் கிழமை, அங்கு இருந்த வசந்தபவன் மெனு கார்டினை வைத்துக் கொண்டு எதைச் சாப்பிடுவது என்ற குழப்பம் இல்லை எகனாமிகல் எது என்று யோசித்ததேன் இப்போது சிரிப்பு வருகிறது. நானும் சராசரி இந்தியராகத் தான் இருந்திருக்கிறேன்.. கையிருப்பு மிகக் குறைவு என்று சொன்னால் அது பொய் தானுங்கோ.

எல்லாம் டாலராக இருந்தது, வெறும் சொற்ப அளவே திரமாகா கன்வர்ட் செய்து வந்தேன்.

நான் இங்கு சொல்ல நினைத்த விஷயமே வேறு, நான் பணி புரியும் நிறுவனம் கொண்டாடிய புது வருட கொண்டாட்டத்தைப் பற்றியும், என்னோட க்ளையண்ட் ப்ளேஸில் 5ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் பற்றிதான் சொல்ல நினைத்தேன்…

சரி மற்றும் ஒரு பதிவில் அதையும் பார்த்துக்கவும், ஸாரி படிச்சுக்கவும்…..

மயக்கும் மாலைப் பொழுதே

ஒரு இனிய மாலைப் பொழுதில் அபுதாபியில் அமுதைப் பொழிய வந்தார், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்ற தேனினும் இனிய குரலுக்குரியவர் பி.சுசிலா… ஆம் தென்னிந்தியாவின் லதா மங்கேஷ்கர் என எல்லோராலும் செல்லமாக அழைக்கபடுபவர்.

பாரதி நட்புகாகஎன்ற தமிழ் மக்களால் நடத்தப்படும் குழுவின் மூலமாக கலைமாமணி பி.சுசிலாவிற்கு பாராட்டு விழா. இந்த விழாவின் நாயகி பி.சுசிலாவிற்கு பாராட்டு புதுசு இல்லை, “பாரதி நட்புகாகஇயக்கத்திற்கும் பாராட்டு விழாக்கள் நடத்துவது புதியது இல்லை.  ஆனால் என் கண் முன்னால் பி.சுசிலா. “பாரதி நட்புகாக” நடத்தும் ஐந்தாம் ஆண்டு விழா இது.

பி.சுசிலாவும் டி.எம்.எஸும் இனைந்து பாடிய பாடல்கள் காலத்தாலும் அழியாதவை. இனிமையான நினைவுகளையும், அன்பான உறவுகளையும், பாசத்தையும், ஏக்கத்தையும், சோகத்தையும், சுகமாக தங்கள் குரலால் வருடி விடுவதில் கெட்டிக்காரார்கள். இவர்களுடைய இந்த புகழுக்கு வித்திட்டவரான எம்.எஸ்.விக்கும் பாராட்டு விழா நடத்தியவர்கள் சுசிலாவுக்கு நடத்துவதில் வியப்பில்லை….

ஆனால், எனக்கு அபுதாபியில் இன்ப அதிர்ச்சி என்றே கூறலாம். என்ன ஒரு பாக்கியம் நான் தமிழகத்தில் இருந்திருந்தால் கூட இதுப் போல் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா என்பதில் சிறு சந்தேகமே…

முன் வரிசையில் சுசிலா அவர்கள் அமர்ந்து இருக்க, அவர்களுக்கு நேராக, முதல் மாடியில் அமர்ந்து அவரைக் காணும் சந்தர்ப்பம், ஜென்ம சாபல்யமா என்பார்களே அது இதுதானோ ! !

கண் முன் கலைவானியேத் தோன்றியதுப் போல் ஒரு உணர்வு.

அடக்கத்தின் காரணமாக அதிகமாக யாரும் புகழாமல் இருந்தாலும், அன்பாக அவரை தமிழர்களின் அன்னையாக திரு ராமகிருஷ்ணன் என்பவர் கூறியது முற்றிலும் சரியே. இன்றும் நான் தூங்கப் போகும் முன் ஒரிரு சுசிலாவின் பாடல்கள் என் செவிகளைத் தொடவில்லை என்றால் தூக்கம் என் கண்களை தழுவாது.

பாரதி நட்புகாகதுவக்கமே அமர்க்களமாய் ஒரு பாரதியின் பாடலுக்கு, பரத நாட்டியத்துடன் உற்சாகமாக இருந்தது. அடுத்து பி.சுசிலா பாடிய பாடலுக்கும், மழையைப் பற்றி ஒரு நடனமும் வெகுவாக எல்லோரையும் கவர்ந்த்து…

மற்றும் ஒரு சிறப்பாக இந்த விழாவிற்கு இன்னொரு சிறப்பு விருந்தினராக வந்தவர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள்.

பின்னர் பி.சுசிலா அவர்களை பாராட்ட ஒரு படையே மேடை ஏறியது. இவர்கள் அனைவரும் முக ஸ்துதி என்பது சிறிதும் இன்றி, விமர்சனமாக இல்லாமல், நிதர்சனமான உண்மையாக தன் மனதில், தாங்கள் ரசித்த பி.சுசிலாவின் பாடல்களையும், எப்படி ஜெனரேஷன்(பாட்டி முதல் பேத்தி வரை) வித்தியசம் இல்லாமல், சுசிலாவின் பாடல்களை ரசிக்கிறோம் என்று சுவரசியமாகவும், சுருக்கமாகவும் பேசினார்கள்.

இன்றும் பலருக்கு தமிழ் அறிய சுசுலாவின் பாடல்கள் துனை புரிகிறது என்றனர். ஆம் தெலுங்கு தேசத்தில் இருந்து வந்த அவரின் தமிழ் பாடல்களால் சுசிலாவுடன் தமிழும் புகழ் பெற்றது.. ஒரு விவாத மேடையே நடத்தலாம் சுசிலாவால் தமிழ் புகழ் பெற்றதா இல்லை தமிழால் சுசிலா புகழ் பெற்றாரா என்று ! ! ! முடிவு என்னமோ தெரிந்ததே J

சுசிலா அவர்கள் பேசும் போது – இது மிகவும் புதியதாகத் தோன்றியது. பாடல்களை மட்டுமே கேட்டுப் பழகிய எனக்கு, அவர் மிகவும் ஜாலியாய் பேசியது, அதுவும் பேசினால் பாட மாட்டேன் என்றும், பாடினால் பேச மாட்டேன் என்றும் சொன்னபோது அதை ரசித்து கை தட்டிய நம்மவர்களையும் பாரட்ட வேண்டும்..

அவர் மிகவும் எளிமையானவர் என்பது அறிந்ததே. தமிழ் நாட்டில் ஐம்பது ஆண்டுகளாக இருந்து பாடி வருகிறேன். ஆனால் தமிழை இப்போது தான் கத்துக்கிறேன் என்றும், வயது ஆகிவிட்டது, உங்களுகாக பாடுகிறேன், ஆனால் எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்னு சொல்லி ஆரம்பித்தார். அவர் பாடியது என்னமோ நான்கு வரிகள்தான், அதுவும் நான்கே பாடல்களுக்கு, ஆனாலும் அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் நானுறு பாடல்கள் கேட்டத் திருப்தியை தந்தது.

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து என்று ஆரம்பித்தபோது அனைவரும் ஒருசேர கைத்தட்டிய போது அந்த பாடலின் மவுசு இன்னும் குறையவில்லை – எப்போதும் குறையாது என்று தெரிந்தது.

சிட்டுக் குருவி என்ற பாடலுக்கும் சரி, உன்னை ஒன்று கேட்பேன் என்ற பாடலுக்கும் சரோஜா தேவியையும், கண்கள் இரண்டும் என்று பாடியபோதும் சரி அதில் நடித்த பத்மினியே கண் முன் வந்தார்கள். இந்த வேரியேஷன் எப்படி என்று கேட்க நினைத்தேன்… நினைத்தவுடன் தேவிகா என் கண் முன் வந்தார், நெஞ்சம் மறப்பதில்லை என்று சுசியின் குரலுக்கு. இரண்டே வார்த்தைகள் தான் பாடினார் ஆகா என்ன அருமை, உன் குரலுக்கு இன்னும் வயது இருபது தானோ ??

பாரதி நட்புகாககுழுவினரின் இந்த ப்ரோக்ராமுக்கு அழைத்துச் சென்ற எனது நண்பர் மதுரை சசிகுமார் அவர்களுக்கு நன்றி !

அபுதாபியில் மயக்கும் மாலை நேரத்தில் அமுதைப் பொழிந்தது நிலவு !

இந்த மாதிரி மயக்கும் மாலைப் பொழுதை,  போகாதே என்று பாடத்தோன்றியது…

திருமண வாழ்த்துக்கள்

காதலர் தினம் அன்று திருமண நாள் கொண்டாடிடும் என் இனிய சகோதரிக்கு காதலர் தின வாழ்த்துக்களோடு

ஐந்தாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்….

ஐம்பதாம் ஆண்டு திருமண நாள் காண வாழ்த்துக்கள் ! ! !

ஐந்து ஓடி விட்டது ! ! ! ஜஸ்ட் 45 மோர் ! ! !

Happy Valentine's Day

Happy Wedding Anniversary ! !

Marriage is a coming together for better or for worse, hopefully enduring, and intimate to the degree of being sacred.

This wishes is for the right people on right time ! ! ! Have a great years together ! ! !

A successful marriage requires falling in love many times, always with the same person –  This is for the wonderful couple in my family.

To love someone deeply gives you strength. Being loved by someone deeply gives you courage.

I hope you both have the courage as well as strength.

To keep your marriage brimming,
With love in the loving cup,
Whenever you’re wrong, admit it;
Whenever you’re right, shut up.

This is meant for my bro-in-law (Secret of his Success).

Keep it up 🙂

Hope you enjoyed your trip.