காதல் கண்மணியே
கண்ணுறங்குகிறேன்
கனவிலாவது
என்னோடு உறவுகொள்
மனதின் ஏக்கங்கள் 
அனைத்தையும்
கட்டி வைக்கிறேன்
உன்னை கட்டி
அணைக்கும் தருணத்தை
எதிர்பார்த்து 

Related image
வெளிநாடு வாழும் கணவன்

Advertisements

என்னருகே நீ வேண்டும்

அதிகம் தேவை இல்லை
உன் வியர்வை துடைத்திட
என் முந்தானை ஏங்குகிறது
நீ இன்றி உனக்கான
சமையலை செய்திட 
மனம் வருந்துகிறது
காமத்தை கடந்திட வா
என் கற்பினை காத்திட வா
எனக்கான உன்னை
தொலைத்திடாமல்
அனுதினமும் என்
அருகில் நீ வா

Image result for single sad lady in saree
என்னருகே நீ வேண்டும்

வெளிநாடு_வாழ்_கணவனின்_வருகைக்காக

விரகதாபத்தை விரதங்களால்
விரட்டுகிறேன்
என்னோடு நீ வேண்டும்
என் ஆயுள் இறுதிவரை
என்ற பிரார்தனைகளோடு

Image result for sad romantic girl
வெளிநாடு_வாழ்_கணவனின்_வருகைக்காக

ஒருதலை காதல்

நெடுநேரம் என்னுடன் கேட்டேன்
நெடுந்தூரம் சென்றுவிட்டாய்
நெடுங்காலம் நீ வேண்டும் என்றேன்
கடந்த காலமாகவே சென்றுவிட்டாய்
காதலோடு வா என்றேன் 
காற்றோடு கலந்து விட்டாய்
இல்லாத ஒன்றை
இழந்ததாக நினைக்க
செய்தது எதுவோ ?

ஒருதலை காதல்

Image result for ஒருதலை காதல்

Protected: Happy Birthday

This content is password protected. To view it please enter your password below:

This entry was posted on November 2, 2017, in General. Enter your password to view comments.

ஆயிரம் உறவுகள்

என் கண்களுக்கு முன்னே
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அனுதினமும்
எந்தன் கண்கள்
உன்னையே தேடும்
உன்னை மட்டுமே தேடும்
எனக்கான உன்னை
இழந்தபின்னும்
என்னை இழந்தும்
உன்னை இழக்க
மனமில்லாமல் தேடுகிறேன்
தொலைந்த பொருள்
கிடைத்துவிடும்
உடைந்த உறவு
நினைவுகளில் மட்டுமே
தொடர்ந்து வரும்
என்று தெரியாமல்
இழந்தாலும் இறப்பேன்
இறந்தாலும் இழக்காமல்
இருப்பது ஒன்று
உன் நினைவுகள்
தொட்டு விடாதே
கத்தி விடாதே
எழுந்து விடுவேன்
உன் கண்ணீரைத்
துடைக்க

மௌனத்தினால் பேசிடவும்

எனக்குள் வாழும் நீ
என்னை பிரிந்து
எப்படி இருக்கிறாய்
என்று நினைத்தே
என் சிந்தை கலங்குகிறதடி
உள்ளத்தில் மறையாது
உணர்வில் சிறிதும் பிரியாது
மௌனங்களிலும்
என்னுடன் பேசுகிறாய்

ஆம் தனிமையில் நான்
என்னுள்ளே நீ
என்னுடன் பேசுகிறாய்
விழிகள் கலங்குகிறது
விழி நீர் வழிய
உன்னை பிரிந்து
உன்னுடன் பேசுவது
கொடுமை
கண்ணீரைத் துடைத்து
காந்தப்புன்னகை வரவழைத்து
சிரிக்கிறேன் சிந்திக்கிறேன்
மனதிற்குள் பேசிட கூடாது
என உறுதி செய்கிறேன்
அந்த நொடியிலும்
உன்னுடன் பேசுகிறேன்
அடுத்த நொடியிலும்
பேசிகிறேன்
வார்த்தைகள் இன்றி
பேசிடவும்
வசனம் இன்றி
பேசிடவும்
வாய் அசைக்காமல்
பேசிடவும் பழகிவிட்டேன்
மௌனத்தினால் பேசிடவும்
அறிந்து கொண்டேன்
வார்த்தைகள் இன்றி
ஊமையானது என் இதயம்
கண்ணீரின் பசியோ
என கண்களுக்கு
முத்துக்களை தொலைத்து
கண்ணீரில் முழ்கிவிட்டேன்
முழுகாமல் நான் எடுத்த
முத்தே என்று மீண்டும்
ஒரு கூக்குரல்
ஓலமிடுகிறது நெஞ்சுக்குள்ளே
உன்னை நான்
எப்போது பிரிந்தேன்?
சேர்ந்தால் தானே
பிரிவதற்கு என்று
நான் நினைக்கும் வேளையில்
நமக்குள்ளே பிரிவென்பது
என்றும் கிடையாது என்று
காற்றாக வந்து
காதில் கதைக்கிறாய்
எங்கே அவள் என்று
எத்தனிக்கும் முன்
கண் மறைகிறாய்
இதயத்தின் ஏக்கங்கள்
ஏமாற்றம் கொள்ள
உன்னோடு பேசிய
அந்த நினைவுகளை
அசை போடுகிறேன்